ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தினசரி சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பலன்கள் : யாரெல்லாம் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்..?

தினசரி சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பலன்கள் : யாரெல்லாம் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்..?

சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள்

சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள்

சைக்கிள் ஓட்டுவதால் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் கட்டுக்குள் வருகின்றன. இதுதவிர ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

நம் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி அல்லது உடல் இயக்கத்தின் மூலமாக உடல் பருமன் மற்றும் இதர நோய்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம். குறிப்பாக இதய நோய்கள், மனநலன் பிரச்சினைகள், நீரிழிவு மற்றும் இதர தீவிரமான பிரச்சினைகளை நாம் கட்டுப்படுத்த முடியும்.

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பலன்கள்

நம் வாழ்வியலை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள சைக்கிள் பயிற்சி உதவிகரமாக இருக்கும். குறிப்பாக பல்வேறு நோய்களை தள்ளி வைக்க உதவும். அனைத்து வயதினரும் செய்யக் கூடிய சைக்கிள் பயிற்சி மூலம் நமக்கு 7 விதமான பலன்கள் கிடைக்கும்.

 • சைக்கிள் ஓட்டுவதால் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் கட்டுக்குள் வருகின்றன. இதுதவிர ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
 • சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக உடல் பருமனை குறைக்க இயலும். வாரம் ஒன்றுக்கு 2,000 கலோரிகள் வரை சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • சைக்கிள் ஓட்டுவதால் நமது கவலை, ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன. குறிப்பாக, நீங்கள் குழுவாக இணைந்து சைக்கிள் ஓட்டினால் உங்களுக்கான சமூக தொடர்புகள் விரிவடையும். பலருடன் நீங்கள் இயல்பாக பேசி பழகும்போது மனதில் உள்ள கவலைகள் நீங்கும்.
 • தினசரி சைக்கிள் ஓட்டுவதால் மலக்குடல் புற்றுநோயை தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • நம் உடலுக்கு வலுவூட்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது. கீல்வாதப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்ல பயிற்சியாக அமையும்.
 • நமது தசைகளுக்கு வலுவூட்டுவதற்கு சைக்கிளிங் பயிற்சி உதவியாக இருக்கும்.
 • சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக நமது மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • சைக்கிள் ஓட்டுவதற்கு சரியான நேரம்

  ஒரு நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் சைக்கிள் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் கூட, உங்களுக்கு முழுமையான ஆற்றலும், நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்றால் காலையில் சைக்கிள் ஓட்ட வேண்டும். காலையில் உங்களுக்கு இது புத்துணர்ச்சியை கொடுக்கும்.

  Bedtime Stretches : தூங்கி எழுந்ததும் இந்த ஸ்ட்ரெட்சுகளை செய்தால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்..!

  யாரெல்லாம் சைக்கிள் ஓட்டக் கூடாது

  முழங்கால் அல்லது கைகளில் காயம் ஏற்பட்டிருப்பவர்கள் சைக்கிள் பயிற்சியை தவிர்க்க வேண்டும். சைக்கிள் ஓட்டும்போது நாம் மிக அதிகமான மூச்சு இழுத்து விடுவோம். ஆகவே ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cycling