வெவ்வேறு புற்றுநோய்கள் வெவ்வேறு ஆபத்து காரணிகளை கொண்டுள்ளன. உதாரணமாக அதிகமான சூரிய ஒளியில் சருமத்தை வெளிப்படுவது தோல் புற்றுநோய்க்கான ஆபத்து காரணியாக உள்ளது. அதே போல புகைபிடித்தல் பல புற்றுநோய்களுக்கு முக்கிய ஆபத்து காரணியாக இருக்கிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸின் (HPV-human papillomavirus) தொற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான ஆபத்து காரணியாகும். HPV என்பது 150-க்கும் மேற்பட்ட தொடர்புடைய வைரஸ்களின் குழுவாகும். அவற்றில் சில பாப்பிலோமாஸ் எனப்படும் ஒரு வகை வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன, அவை பொதுவாக மருக்கள் (warts) என்று அழைக்கப்படுகின்றன.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் பங்களிக்கும் மற்ற காரணிகளில் புகைபிடித்தல், முன்கூட்டிய மாதவிடாய், மல்டிபிள் செக்ஸ் பார்ட்னர்ஸ், மோசமான பிறப்புறுப்பு சுகாதாரம் உள்ளிட்டவை அடங்கும். அதே போல HIV நோய் தொற்றுகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
புகையிலை மற்றும் மது பழக்கம், மோசமான உணவுப்பழக்கம், உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் மற்றும் கதிர்வீச்சு, அதிக எண்ணிக்கையிலான செக்ஸ் பார்ட்னர்களை கொண்டிருப்பது உள்ளிட்டவை இந்த புற்றுநோயின் நிகழ்வு மற்றும் இறப்பை பாதிக்கும் முக்கியமான வாழ்க்கை முறை காரணிகள் என்று மும்பை குளோபல் ஹாஸ்பிடலை சேர்ந்த மூத்த மருத்துவர் அக்ஷய் ஷா குறிப்பிடுகிறார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்..
* உடலுறவுக்குப் பிறகு ரத்த போக்கு
* உடலுறவின் போது வலி
* மாதவிடாய் நின்ற பிறகும் ரத்த போக்கு
* தொடர்ச்சியான இடுப்பு அல்லது முதுகு வலி
* பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு
* வயிறு உப்பசம்
* அதீத சோர்வு
* அடிக்கடி அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க செல்வது
இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுக்கலாம்!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்களையும் பட்டியலிட்டு உள்ளார் டாக்டர் அக்ஷய் ஷா.
கர்ப்பப்பை வாய்புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள்..
* புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்
* தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்க வேண்டும்
* டயட்டில் தேவையான மாற்றங்கள்
* நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்
* தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்
* பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
* HPV ஸ்கிரீனிங்
* 9 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு HPV தடுப்பூசி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.