முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஓட வேண்டாம்.. குதிக்க வேண்டாம்.. இதை செஞ்சா போதும் வெயிட் தானா குறையும்!

ஓட வேண்டாம்.. குதிக்க வேண்டாம்.. இதை செஞ்சா போதும் வெயிட் தானா குறையும்!

weight loss Yoga

weight loss Yoga

மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் கட்டுக்கோப்பாக வைக்க யோகா உதவுகிறது. யோகாசனத்தை நாம் முறைப்படி சரியாக செய்யும்போது, அது அதிக பலன்களை கொடுக்கும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய காலத்தில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல், நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அனைவரின் வாழ்க்கையிலும் வேலைப்பளு அதிகரித்துள்ளது. என்னதான் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், யோகா ஒரு தனிநபரின் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியது கட்டாயம். ஏனெனில், இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

யோகாசனத்தை நாம் முறைப்படி சரியாக செய்யும்போது, அது அதிக பலன்களை கொடுக்கும். ஆனால், நீங்கள் எடை இழப்புக்கான யோகாசனம் செய்தால், நீங்கள் டயட் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நல்ல முடிவுகளைக் காணலாம்.

யோகாசனத்தால் கிடைக்கும் நன்மைகள்:

> நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

> நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

> சகிப்புத்தன்மையை உருவாக்குகிறது.

> தசைகளை மெருகேற்றும்.

> மன அழுத்தத்தை குறைக்கும்.

> கோபத்தை கட்டுப்படுத்துகிறது.

> உடலை சுறுசுறுப்பா வைக்கிறது.

> சுவாசத்தை மேம்படுத்துகிறது.

> ஆற்றலை அதிகரிக்கிறது.

> கவனத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடையை குறைப்பதற்கான யோகாசனங்கள்:

தனுராசனா (வில் போஸ்) : தனுராசனம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் மார்பு, கைகள், வயிறு மற்றும் தொடை பகுதியை சமச்சீராக்குகிறது. மேலும், இது உடலை வடிவாக்குவதுடன், கொழுப்பை கரைக்க உதவுகிறது.

ALSO READ : உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடவும்!

சேது பந்தா சர்வாங்காசனம் (பாலம் போஸ்) : இந்த ஆசனம் குளுட் மற்றும் தசைகளை வலுப்படுத்துவது, தைராய்டு பிரச்சனைகளை சரி செய்வது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பிரிட்ஜ் போஸ் முழு உடலையும் பிட் ஆக்குவதுடன், ஹார்மோன்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சமப்படுத்துகிறது. இதன் விளைவாக கொழுப்பு எளிமையாக கரையும்.

விராபத்ராசனம் (போர்வீரர் போஸ்) : போர்வீரர் போஸ் முக்கியமாக கீழ் உடலை டோனிங் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது சுவாசத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் உள் தொடை, கைகள் மற்றும் முதுகெலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

புஜங்காசனம் (பாம்பு போஸ்) : "புஜங்" என்றால் "பாம்பு" மற்றும் "ஆசனம்" என்றால் "போஸ்" என்று பொருள். இந்த ஆசனம் முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் மார்பை சமச்சீராக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்க உதவுகிறது. இந்த ஆசனம் உங்கள் பிட்டத்தை இறுக்குகிறது மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்பையும் கரைக்கிறது.

சூரிய நமஸ்கர் (சூரிய வணக்கம் போஸ்) : எடை இழப்புக்கான அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்ய உங்களுக்கு அதிக நேரம் இல்லையென்றால், நீங்கள் சூரிய நமஸ்காரத்தை தேர்வு செய்யலாம். ஏனென்றால், இது முழு உடலையும் சாய்ப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான மற்றும் தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. மேலும் இது கவனத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

அதோ முக ஸ்வனாசனா (கீழ்நோக்கிய நாய் போஸ்) : ஒரு குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்தும் போது, கீழ்நோக்கிய நாய் போஸ் உடலின் தசைகளை இருக்கமாக்குகிறது. உங்கள் உடலை, அதே நிலையில் வைத்திருப்பது, உடல் முழுவதும் செறிவு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தொடை மற்றும் கைகளை வடிவாக்குகிறது.

உட்கடசனா (நாற்காலி போஸ்) : உட்கடாசனம் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்களால் முடிந்தவரை அந்த நிலையை வைத்திருப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கிறது. இது தொடைகள், கைகள் மற்றும் குளுட்டுகளை இறுக்கமாக்குகிறது. தினமும் உட்கடாசனம் செய்வதன் மூலம் திடமான தொப்பை கொழுப்பு குறைகிறது.

First published:

Tags: Fitness, Weight loss, Yoga