ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

IVF சிகிச்சை : கருமுட்டை டிரான்ஸ்ஃபர் செய்த பின் கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

IVF சிகிச்சை : கருமுட்டை டிரான்ஸ்ஃபர் செய்த பின் கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

IVF சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை

IVF சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை

பொதுவாகவே கருமுட்டை இம்ப்ளான்ட் செய்து முடித்த பிறகு, குறைந்த பட்சம் 24 மணி நேரம் வரை பெட்-ரெஸ்ட் என்று, நாள் முழுவதுமாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பல்வேறு காரணங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பெண்களுக்கு IVF சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. IVF சிகிச்சையில் மிகவும் முக்கியமான நிலை, எம்ப்ரியோ டிரான்ஸ்ஃபர் எனப்படும் கருமுட்டை டிரான்ஸ்ஃபர் செய்வது தான். எம்ப்ரியோ டிரான்ஸ்ஃபர் செய்த பின்பு கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்படும் வரை பல்வேறு உணர்ச்சி பூர்வமான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் IVF வழியை கருத்தரிக்க முயற்சி செய்தால் இந்த விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நன்றாக ஓய்வெடுங்கள் உங்கள் அன்றாட வேலைகளை மெதுவாக செய்யுங்கள்

பொதுவாகவே கருமுட்டை இம்ப்ளான்ட் செய்து முடித்த பிறகு, குறைந்த பட்சம் 24 மணி நேரம் வரை பெட்-ரெஸ்ட் என்று, நாள் முழுவதுமாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். உடலுக்கு எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் பொழுது கருப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து கருத்தரித்தலை உறுதிப்படுத்தும். எனவே கருமுட்டை இம்ப்ளான்ட் செய்த பிறகு பெண்கள் உடல்நலம் சீராகி வர சில நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எந்த விதமான அழுத்தத்தையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். நன்றாக ஓய்வெடுத்து உங்களின் அன்றாட வேலைகளை மெதுவாக செய்யலாம்.

மருத்துவர்கள் கூறியபடி அனைத்து மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

IVF சிகிச்சையின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. இவை கரு வளர உடலுக்கு தேவையான ஹார்மோன் சப்போர்ட்டை அளிக்கின்றன. மேலும், மயக்கம், வாந்தி, தலைசுற்றல் ஆகியவை ஏற்படும். ஆனால் இந்த காரணங்களுக்காக மருந்துகளை நீங்கள் தவிர்க்கக்கூடாது. மருத்துவர் சொல்லும் அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் அனுமதி இன்றி எந்த மருந்தையும் நீங்கள் தவிர்க்க கூடாது.

கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி..?

மன அழுத்தத்தை மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

உடலுக்கு எந்த அளவுக்கு ஓய்வு தேவைப்படுகிறதோ, அதே அளவுக்கு மன அழுத்தம் இல்லாமல் நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். அதிகப்படியான ஸ்ட்ரஸ் உண்டாக்கும் சூழலில் இருந்து விலகி மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். மேலே கூறியது போல முதல் மூன்று மாதங்கள் மசக்கையின் பல்வேறு அறிகுறிகள் உங்களை வாட்டி எடுக்கலாம். இதைக் காரணமாக வைத்துக் கொண்டு நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்கக்கூடாது அதிக அளவு சாப்பிட முடியவில்லை என்றாலும் குறைந்த அளவில் ஒரு நாளைக்கு பல முறை நீங்கள் சாப்பிடலாம்.

குழந்தை பிறந்த பின் உண்டாகும் மனச்சோர்வு எவ்வளவு காலம் நீடிக்கும்..? அந்த சமயத்தில் செய்ய வேண்டியவை , செய்யக்கூடாதவை..

அது மட்டுமின்றி குறைந்தது மூன்று மாதங்கள் வரையாவது வெளிப்புற உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள். உங்களுக்கு பிடித்த உணவை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகிய ஊட்டச்சத்துக்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம்.

எந்த உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் காபி லவ்வராக இருந்தால் தினமும் குடிக்கும் காப்பியை இரண்டு கப்பாக குறைத்துவிட வேண்டும்.

மருத்துவ ஆலோசனையை முறையான பதிவு செய்யப்பட்ட IVF கிளினிக்கில் சரியான மருத்துவரிடம் இருந்து மட்டும் தான் பெற வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy care