ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World Heart Day 2022 : ஹார்ட் பிரேக்கிங் செய்திகளை கேட்கும்போது நம் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?

World Heart Day 2022 : ஹார்ட் பிரேக்கிங் செய்திகளை கேட்கும்போது நம் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?

ஹார்ட் பிரேக்கிங்

ஹார்ட் பிரேக்கிங்

ஹார்ட் பிரேக் என்பது மனநிலையை தீவிரமாக பாதிக்கும், உடலிலும் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும், மன அழுத்தத்தால் அது உடலில் பலவீனமாக வெளிப்படும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹார்ட் பிரேக், மனசு உடைஞ்சு போச்சு, இதயம் உடைஞ்சு போச்சு, ப்ரோக்கன் ஹார்ட் என்று காதலி/காதலன், நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களால் தீவிரமான ஏமாற்றத்துக்கு உள்ளாகும் பொழுது, பெரிய அளவில் ஏற்படும் பாதிப்பைக் கூறுவோம். ஹார்ட் பிரேக் என்பது ஒரு உவமை! உண்மையில் இதயம் உடையாது. இதயம் தசைகளால் ஆனதால், எலும்புகள் இல்லை என்பதால், இதயத்தால் உடைய முடியாது! ஆனால் எலும்புகளே இல்லாத இதயம் உடைந்து போகிறது என்பது எவ்வளவு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை குறிக்கச் சொல்லப் படுகிறது.

ஹார்ட் ப்ரேக், என்பது மனதளவில் ஏற்படக்கூடிய பாதிப்பை மட்டும் குறிப்பது அல்ல. உண்மையிலேயே, இது உடலில் பலவிதமான மாற்றங்களையும் பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. மனசு வலிக்குது என்று பொதுவாக ஏற்படும் உணர்வு, நீங்கள் எதிர்பார்க்காத வகையில் எல்லாம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். யாராவது உங்கள் இதயத்தை உடைத்து விட்டு போனால், உங்கள் உடலில் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்!

உண்மையிலேயே வலி உண்டாகும் :

யாராவது இதயம் உடைவது போல நடந்து கொண்டால், உண்மையிலேயே இதயம் மற்றும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்படும், சுவாசிப்பதற்கு கடினமாக இருக்கும், மூச்சுத்திணறல் ஏற்படுவது போல இருக்கும். அது மட்டுமல்லாமல் நெஞ்சின் மீது ஏதோ அழுத்தம் ஏற்படுவது போல, இதயம் பிசைவது போல உணர்வுகள் தோன்றும். உங்கள் மனம் தான் இவ்வாறெல்லாம் சிந்திக்கிறது என்று நீங்களே ஒரு கட்டத்தில் யோசிக்கத் தொடங்குவீர்கள். ஆனால் உண்மையிலேயே ஹார்ட் பிரேக் ஏற்படும் பொழுது இதயம் பாதிக்கப்படும். மிகவும் இன்டென்ஸ்-ஆன எமோஷன் என்று கூறப்படும் உணர்ச்சிபூர்வமான நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது, உடலில் பல விதங்களில் வெளிப்படும்.

ஹார்ட்ப்ரேக் என்பது நெருக்கமான ஒருவரால் ஏற்படுத்தக்கூடியது என்பதால், மனம் காயப்படும். காதலில் தோல்வி, நண்பர்களால் ஏமாற்றம் என்று வரும் பொழுது மூளையால் சட்டென்று லாஜிக்காக சிந்திக்க முடியாது. எனவே மூளை சிந்தனைத்திறன் குறையும் பொழுது அந்த இடத்தில் மூளையின் மற்றொரு அங்கமாக கருதப்படும் மனம் பாதிக்கப்பட்டு அது இதயத்தின் வழியாக, வலியாக அசௌகரியமாக வெளிப்படும். இந்த வலி மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரியாது என்றாலும் நீங்கள் உண்மையிலேயே உணர முடியும். சமீபத்தில் இதற்கு broken heart syndrome என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தாங்க முடியாத மன அழுத்தம் :

ஒரு சூழலை நாம் சரியாக கையாள முடியாமல் போகும் போது தான் மன அழுத்தம் ஏற்படும். அப்படி இருக்கும் போது, உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், நீங்கள் அதிகப்படியான நம்பிய ஒருவரால் நீங்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானால் அல்லது அவரால் உங்கள் மனம் உடைந்து போனால் அந்த அழுத்தம் தாங்கிக் கொள்ளவே முடியாது.

மன ரீதியாக மன அழுத்தத்தில் தீவிரமாக பாதிக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதை நீங்கள் உடல்ரீதியாகவும் உணர்வீர்கள். முடங்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனை, எதிலும் கவனம் செலுத்த முடியாத தன்மை, பயம், பதற்றம், படபடப்பு, தனித்து விடப்பட்டிருக்கிறோம், தனக்கென்று யாரும் இல்லை என்று சில நேரங்களில் நீங்கள் சுய நினைவுடன் இருக்கிறீர்களா என்று கூட தோன்றலாம்.

அடிக்கடி ஏதாவது சாப்பிட தோணுதா..? கட்டுப்படுத்த இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

இதயத் துடிப்பு குறையும் :

நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும் பொழுது இதய துடிப்பு அதிகரிக்கும், படபடக்கும், ஹார்மோன்கள் ஊற்றால் காற்றில் பறப்பது போல இருக்கும். அதே நேரத்தில் நாம் பாதிக்கப்படும்போது இதய துடிப்பு குறையும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. யாரேனும் உங்கள் மனதை காயப்படுத்தி சென்ற பிறகு உண்மையிலேயே உங்களுடைய இதய துடிப்பு குறைந்து விடும். நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பலவிதமாக சிந்திப்பதால், ஹார்மோன்கள் உற்பத்தியும் சுழற்சியும் பாதிப்படையும்; உங்களுடைய தசைகள் பலவீனமாகி இதயத்தின் துடிப்பு வழக்கத்தை விட குறையும். சில நேரங்களில் தீவிரமாக பாதிக்கப்படுவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய நோய் தாக்குதல் ஏற்படவும் ஆபத்து இருக்கிறது. ஹார்ட்ப்ரேக் என்பது அந்த அளவுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

மாதவிடாய் சுழற்சியில் தாமதம் :

ஹார்ட் பிரேக் என்பது மனநிலையை தீவிரமாக பாதிக்கும், உடலிலும் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும், மன அழுத்தத்தால் அது உடலில் பலவீனமாக வெளிப்படும். அதில் மற்றொரு வகை தான் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள். உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருந்து வந்தாலும், உங்கள் மனம் உடைந்து போகும், உங்களுடைய உடலில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு, இதனால் மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் மாதவிடாய் சுழற்சியே முற்றிலுமாக மாறும்.

இந்த 7 அறிகுறிகளை வைத்து உங்கள் கல்லீரலில் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம்..!

முடி உதிர்வு :

இதயம் உடைந்து போவதற்கும், முடி உதிர்வுக்கும் நேரடியாக சம்பந்தமில்லை என்றாலும் மறைமுகமாக ஒரு தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே கூறியுள்ளது போல தீவிரமான மன அழுத்தத்திற்கு ஹார்ட் பிரேக் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. எனவே இந்த இணைப்புகளை வைத்து பார்க்கும் பொழுது ஹார்ட் பிரேக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமான முடி உதிர்வு பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது. இது ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.

நீங்கள் எவ்வளவு தான் விலையுயர்ந்த ஷாம்பு, சீரம், ஹேர் தெரபி என்று செலவு செய்தாலுமே மனரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக மாறும்வரை எதுவுமே பயன் தராது.

உடல் நிலை சரியில்லாமல் போவது :

காதலில் பிரிவு வந்தாலோ, நண்பர்கள் துரோகம் செய்தாலோ, உறவினர்களாலேயே ஏமாற்றப்பட்டாலோ அல்லது எந்த சூழ்நிலையிலும் இதயம் தீவிரமாக பாதிக்கப்படும் போது அந்த அதிர்ச்சி உடலில் நோயாக வெளிப்படும்.

உங்களுடைய பழக்கவழக்கம், அன்றாட நடவடிக்கைகள் எல்லாவற்றிலுமே மாறுதல் ஏற்பட்டு உங்கள் உடலே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு ஒரு சிலர் தீவிரமாக பாதிக்கப்படுவார்கள். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Heart health