முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வாய் துர்நாற்றம், செரிமானமின்மை... உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்...

வாய் துர்நாற்றம், செரிமானமின்மை... உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்...

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்

குடல் உடலின் இரண்டாவது மூளை என்று கூறப்படுகிறது. இதனிடையே குடல் ஆரோக்கியம் என்பதன் அர்த்தம் என்ன என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குடல் உடலின் இரண்டாவது மூளை என்று கூறப்படுகிறது. இதனிடையே குடல் ஆரோக்கியம் என்பதன் அர்த்தம் என்ன என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? ஒருவருக்கு இருக்கும் ஆரோக்கியமற்ற குடல் அவரது முழு உடலையும் பாதிக்கலாம்.

ஆம் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது இரைப்பை குடல் உங்கள் வாயில் தொடங்கி ஆசனவாயில் முடிகிறது. உணவை எடுத்து, ஜீரணித்து, சத்துக்களை உறிஞ்சி, மீதமுள்ள கழிவுகளை வெளியேற்றுவதே இதன் வேலை. ஆனால் இது சரியாக செயல்படுகிறதா இல்லையா என்பதை நாம் கண்டறிவது எப்படி.?

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா ஒருவருக்கு ஆரோக்கியமற்ற குடல் இருப்பதைக் குறிக்கும் சில முக்கிய அறிகுறிகளை பற்றி கூறி உள்ளார். அதிக மன அழுத்தம், மிகக் குறைவான தூக்கம், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உண்பது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வது போன்றவை அனைத்தும் நமது குடல் நுண்ணுயிரியை சேதப்படுத்தும் என்கிறார் இவர்.




 




View this post on Instagram





 

A post shared by Lovneet Batra (@lovneetb)



குடல் ஆரோக்கியமற்று இருப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள் இங்கே....

வயிற்று கோளாறு:

வயிற்றில் ஏற்படும் அசௌகரியங்களான வாயு, உப்பசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவற்றால் வயிறு அடிக்கடி தொந்தரவுக்கு உள்ளானால் இவை எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (irritable bowel syndrome) அறிகுறிகளாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் உள்ளிட்டவையும் ஆரோக்கியமற்ற குடலின் அறிகுறிகளாகும்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பழக்கவழக்கங்கள்...

வாய் துர்நாற்றம்:

ஆரோக்கியமற்ற குடலின் முக்கிய அறிகுறி வாய் துர்நாற்றம். வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்தது கெட்ட பாக்டீரியாக்கள் பெருகுவதால் கடும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். குடல் சமநிலையின்மை காரணமாக பெருகும் சில வகையான H. pylori பாக்டீரியாக்கள் வயிற்றுப் புண்கள் மற்றும் வாய் துர்நாற்றத்திற்கு மூலகாரணமாக உள்ளன.

வெடிப்புகள் மற்றும் தோல் எரிச்சல்:

தோல் எரிச்சல், முகப்பரு, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்றவற்றுக்கும் ஆரோக்கியமற்ற குடலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. குடல் நுண்ணுயிர் சிக்கலான நோயெதிர்ப்பு வழிமுறைகள் மூலம் சருமத்தை பாதிக்கிறது. ஏனெனில் சமநிலையற்ற நுண்ணுயிர் சருமத்தின் உணர்திறனை அதிகரிக்கிறது இதுவே அரிக்கும் தோலழற்சி, முகப்பரு மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.

தூக்கமின்மை:

ஆரோக்கியமற்ற குடல் தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம் போன்றவற்றுக்கு காரணமாகிறது. மேலும் நாள்பட்ட சோர்வுக்கு வழிவகுக்கும். மனநிலை மற்றும் தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் Serotonin என்ற ஹார்மோன், குடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே குடல் பாதிப்பு தூங்கும் திறனை பாதிக்கிறது.

40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய உடல்நல பரிசோதனைகள்

தன்னுடல் தாக்கங்கள்:

ஆரோக்கியமற்ற குடல் நாள்பட்ட அழற்சி நிலைமைகளை அதிகரிக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மாற்றியமைக்க கூடும். மேலும் இது பல்வேறு தன்னுடல் தாக்க நிலைகளை ஏற்படுத்துகிறது. அதாவது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த ஆரோக்கியமான திசுக்களை வெளி பொருள் என்று தவறாகப் புரிந்துகொண்டு அவற்றைத் தாக்கும் நிலைகள்.

உணவுகளை ஜீரணிப்பதில் சிரமம்:

குடலில் உள்ள பாக்டீரியாக்களின் மோசமான தரம் காரணமாக சில உணவுகளை ஜீரணிப்பதில் சிரமம் மற்றும் அவற்றுக்கு விரும்பத்தகாத எதிர்வினைகளை உடல் வெளிப்படுத்தும்.

First published:

Tags: Gut Health