Home /News /lifestyle /

அவசரத் தேவைகளுக்கு எப்போதும் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ உபகரணங்கள்..!

அவசரத் தேவைகளுக்கு எப்போதும் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ உபகரணங்கள்..!

மருத்துவ அவசர உபகரணங்கள்

மருத்துவ அவசர உபகரணங்கள்

மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடியே நம் உடலை பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு பலருக்கும் தெரிய வந்தது.

மிக அடிப்படையான உடல் பரிசோதனைகளை கூட மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று செய்து கொள்வதையே நாம் வாடிக்கையாக கொண்டிருந்தோம். ஆனால், கொரோனா பெருந்தொற்று காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. கொரோனா ஊரடங்கு சமயங்களில் நினைத்த உடன் நம்மால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. அதே சமயம், தொற்று காலத்தில் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உடனுக்குடன் பரிசோதித்து தெரிந்து கொள்வது அவசியாமது.

இத்தகைய சூழலில் தான், மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடியே நம் உடலை பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு பலருக்கும் தெரிய வந்தது. வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை சாதனங்கள் இருந்தால், மருத்துவமனைக்கு நீங்கள் மேற்கொள்ளும் அலைச்சல் மற்றும் நேர விரயம் போன்றவற்றை தவிர்க்க இயலும்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பெரும்பாலானவர்களின் வீடுகளில் இப்போது மருத்துவ உபகரணங்கள் இருக்கக் கூடும். அதில் விடுபட்டவை ஒன்றிரண்டு இருக்கலாம். இதுவரை உங்கள் வீட்டில் எதுவுமே இல்லாமலும் போகலாம். இந்தச் செய்தியில் அவசியமான மருத்துவ உபகரணங்களை பட்டியலிட்டுள்ளோம்.



காண்டாக்ட்லெஸ் தெர்மோமீட்டர்

இன்றைய சூழலில் மிகவும் அவசியமான சாதனம் இது. ஒரு நபரை நேரடியாக தொட்டுப் பார்க்காமல் அல்லது கருவிகளை அவர்கள் உடலில் வைக்காமல், உடல் வெப்பத்தை ஆய்வு செய்ய இது உதவிகரமாக இருக்கும். கொரோனா காலத்தில், சக மனிதர்களுடன் நெருக்கமாக இருக்கும் சமயங்களில் தான் தொற்று பரவுகிறது என்று கண்டறியப்பட்ட சூழலில், இந்த தெர்மோமீட்டர் தான் மிக உதவியாக இருந்தது.

தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் ஆயுள் கூடுமா..? ஆய்வுகள் கூறும் உண்மை..!

ஆக்ஸிமீட்டர்

உங்கள் ரத்தத்தில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய இது உதவி செய்யும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர் மிகவும் முக்கியமான கருவி ஆகும். ஆக்ஸிமீட்டருடன் இணைந்து உங்கள் பல்ஸ் எண்ணிக்கையை ஆய்வு செய்யும் வசதி இருந்தால், கூடுதல் உபயோகமாக இருக்கும்.



குளுக்கோமீட்டர்

நீரிழிவு நோயாளிகள் இல்லாத வீடுகள் எங்குமே இருக்க வாய்ப்பில்லை. வீடுதோறும் கட்டாயம் இருக்க வேண்டிய உபகரணம் இது. ரத்த சர்க்கரையை பரிசோதனை செய்ய உதவும். ரத்த சர்க்கரை அளவை அவ்வபோது பரிசோதனை செய்தால், பெரும் உடல்நல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

ரத்த அழுத்த பரிசோதனை மீட்டர்

பிளட் பிரஸர் மீட்டர் எனப்படும் இந்தக் கருவி உங்கள் ரத்த அழுத்தத்தை கணக்கீடு செய்ய உதவும். மருத்துவமனைகளில் இதற்கு முன்பு, கையால் உபயோகிக்கும் பழைய மீட்டர்களை உபயோகம் செய்து வந்தனர். இப்போது டிஜிட்டல் மீட்டர்கள் வந்து விட்டன. இவற்றை நீங்களே எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Medical Emergency, Medicines

அடுத்த செய்தி