Home /News /lifestyle /

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ்- தடுப்பூசி கண்டுபிடிப்பை பாதிக்கிறதா?

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ்- தடுப்பூசி கண்டுபிடிப்பை பாதிக்கிறதா?

மாதிரி படம்

மாதிரி படம்

ஃபைசர் தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்காது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸின் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவும், துருக்கி நாடுகளும் அடுத்த ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. பிரிட்டனில் உருவான இந்த புதிய வகை கொரோனா வைரஸை பற்றிய சில தகவல்கள் குறித்து பின்வருமாறு காண்போம்.

இந்த கொரோனா வைரஸின் மியூட்டேசன் எவ்வளவு அசாதாரணமானது?

பொதுவாக வைரஸ் பரவல் நிற்கும் வரை, இது போன்ற மியூட்டேசன்கள் உருவாவது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானதல்ல. அவை ஒரே நபருக்குள் கூட எல்லா நேரத்திலும் நடக்கும். உண்மையில், Sars-Cov-2 வைரஸில் ஏற்கனவே 4,000 வெவ்வேறு ஆவணப்படுத்தப்பட்ட மியூட்டேசன்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் இது ஏற்படுகிறது. இப்போது வரை, இந்த மியூட்டேசன்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலை பெரிதாக இல்லை. ஆனால் தற்போது யு.கே.யில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய புதிய வகை சற்று கவலைக்குரியது. மேலும் லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் இந்த வைரசின் வீரியம் குறித்த உண்மைகள் வெளிவரலாம்.புதிய வகை கொரோனா வைரஸின் மாறுபாடு என்ன?

கோவிட் 19 ஜெனோமிக்ஸ் யுகே (COG-UK) எனப்படும் அமைப்பு, இங்கிலாந்திலிருந்து மரபணு வரிசைமுறை தரவை பகுப்பாய்வு செய்யும் ஒரு கூட்டமைப்பால் மரபணு கண்காணிப்பில் இந்த மாறுபாட்டினை அடையாளம் கண்டது. உலகளாவிய கொரோனா பரவல் தரவுத்தள GISAID-க்கு COG-UK மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது.

கண்டுபிடிப்பின் படி, SARS-CoV-2 கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் பல மியூட்டேசன்கள் மற்றும் ஆர்.என்.ஏ வைரஸின் பிற மரபணு பகுதிகளில் உள்ள மாற்றங்களின் விளைவாக இந்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட பகுப்பாய்வில் இது முன்னர் புழக்கத்தில் உள்ள மாறுபாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் COG-UK, இந்த மியூட்டேசன்களில் ஒன்றை “N501Y” என அடையாளம் கண்டுள்ளது,

இது ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதி ஆகும். இவை மனித உயிரணுவில் உள்ள ஒரு முக்கிய புரதமான ACE2 ஏற்பியுடன் பிணைக்கிறது. இதன் மாற்றங்கள் கோட்பாட்டளவில், வைரஸ் மேலும் தொற்றுநோயாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இந்த மியூட்டேசன்கள் ஏதேனும் அதிகரித்த பரவலுக்கு பங்களிக்கின்றனவா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பயணக் கட்டுப்பாடுகளுக்கு இட்டுச்செல்லும் இந்த கவலைகளுக்கான காரணம் என்ன?

கடந்த வாரம், புதிய SARS-CoV-2 மாறுபாடு தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புகள் விரைவாக அதிகரிப்பதற்கு காரணம் என்று தெரியவந்தது. இது VUI 202012/01, அல்லது B.1.1.7 பரம்பரை என குறிப்பிடப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியதாவது, "கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இது இங்கிலாந்தின் தெற்கில் வேகமாக பரவுவதோடு தொடர்புடையதாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு குறித்து இங்கிலாந்து அதிகாரிகள் ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கில் புதிய மாறுபாட்டால் 1,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை எதிர்த்து போராடும் சக்தி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: ஏன் தெரியுமா..? 

இது தடுப்பூசி வளர்ச்சியை பாதிக்குமா?

இதைப் புரிந்துகொள்வதற்கு முன்னதாக மேலும் ஆய்வகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஃபைசர் தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்காது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.புதிய வகை வைரஸ் அதிகம் பரவுமா?

டிசம்பர் 18ம் தேதி அன்று, Emerging Respiratory Virus Threats Advisory Group (NERVTAG), புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதில், இந்த புதிய மாறுபாடு நோயின் இனப்பெருக்கம் எண்ணை 0.93 வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. புதிய மாறுபாடு "பிற மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது பரிமாற்றத்தில் கணிசமான அதிகரிப்பு இருப்பதை நிரூபிக்கிறது" என்றும் கூறியுள்ளது.

யு.கே.வின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

அரசாங்கத்தின் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான விருப்பத்தை புரிந்துகொண்டாலும், கடந்த சில மாதங்களில் உட்புற உணவு மற்றும் ஜிம்களை மீண்டும் திறக்க அனுமதிப்பது கொரோனா பாதிப்புகள் ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் இருக்கும்போது தவறாக வழிநடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. கொரோனா தீவிரம் குறையும் வரை கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சிறந்தது.
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Covid-19 vaccine, New strain of corona virus

அடுத்த செய்தி