நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் இவைதான்..!

இதுதான் அதற்குக் காரணமா என்பதைத் தெரியாமலேயே நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கலாம்.

நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் இவைதான்..!
நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் இவைதான்..!
  • Share this:
நீங்க சரியாகத் தூங்கவில்லை என்றால் உடலில் சில மாற்றங்களை உணரலாம். ஆனால் இதுதான் அதற்குக் காரணமா என்பதைத் தெரியாமலேயே நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கலாம். அவை என்னென்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளுங்கள்..!

முடி உதிர்தல் அதிகரித்தல் : நீங்கள் நேரத்திற்கு தூங்கி எழவில்லை எனில் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் நிகழும். அதன் வெளிப்பாடு தலைமுடி உதிரத் தொடங்கும்.

சரும சேதாரம் : கரும்புள்ளிகள், முகப்பருக்கள் உடைவதும், அதிகரிப்பதுமாக இருக்கும். எண்ணெய் சுரப்பதும் அதிகரித்து பருக்கள் அதிகரிக்கும்.


வெள்ளை முடி : முடி உடைதல் அல்லது வெள்ளை முடி இளம் வயதில் தோன்றுகிறது எனில் தூக்கம் சரியான முறையில் இல்லை என்பதும் ஒரு வகைக் காரணம். சரியான தூக்கம் இல்லை எனில் முடியைக் கருமையாக வைத்துக்கொள்ள உதவும் யூமெலனின் ஹார்மோன் சுரத்தல் தடைபடும். இதுவே வெள்ளை முடிக்குக் காரணம்.நகங்கள் உடைதல் : தூக்கமின்மையால நகங்களின் வேர்கள் கடுமையாக பாதிக்கப்படும் . இதனால் நகங்கள் உடைந்துவிடும். உறுதித் தன்மையின்றி உருளைக் கிழங்கு சிப்ஸ் போல் உடையும். சில நேரங்களில் வலியும் இருக்கலாம்.இளமையில் முதுமை : சருமம் அதன் இலகுத் தன்மையை இழந்துவிடும். தூங்கும்போதுதான் சருமம் நச்சுகளை வெளியேற்றி பழுது பார்க்கும். இந்த செயல்கள் இரவு தூக்கமின்மையால் தடைபடும்போது அழுக்குகள், பாக்டீரியாக்கள் சேர்ந்து சருமத்தை சேதப்படுத்தி 26 வயது கூட 40 வயது போல் தோன்றும்.

கருவளையம் : பொதுவாகவே தூங்கவில்லை எனில் கருவளையம் உண்டாகும் என்பது பலருக்கும் தெரிந்ததே. இதற்கு அழகுக் குறிப்புகளை செய்து சரி செய்வதை விட்டுவிட்டு நன்கு இரவில் தூங்கி எழுங்கள்.

பார்க்க :

 
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading