முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்களின் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் 5 உணவுகள்... தவறி கூட சாப்பிடாதீங்க...

ஆண்களின் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் 5 உணவுகள்... தவறி கூட சாப்பிடாதீங்க...

விந்தணு ஆரோக்கியம்

விந்தணு ஆரோக்கியம்

விந்தணு உற்பத்தி, வேகம் மற்றும் அதன் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் அளவுக்கு அதிகமான மதுப்பழக்கத்திற்கு அடிமையாவது விந்தணுவின் தரம் மற்றும் எண்ணிக்கையை பாதிக்கும் என பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் 30 வயதில் உள்ள 15 சதவீத ஆண்கள் மலட்டுத் தன்மைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் அதே சமயத்தில், கடந்த 60 ஆண்டுகளாக ஆண்களின் விந்தணு உற்பத்தி அளவும் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

விந்தணு உற்பத்தி, வேகம் மற்றும் அதன் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் அளவுக்கு அதிகமான மதுப்பழக்கத்திற்கு அடிமையாவது விந்தணுவின் தரம் மற்றும் எண்ணிக்கையை பாதிக்கும் என பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக ஆண்களின் விந்தணுவை பாதித்து மலட்டுத் தன்மையை உருவாக்கூடிய 5 உணவுகள் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்...

1. வைட்டமின் டி:

ஆண்மையை அதிகரிக்க உதவும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்திக்கு வைட்டமின் டி முக்கியமான உந்துசக்தியாக விளங்கிறது. ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 65 பேருக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக குறைந்த அளவிலான குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தினமும் 3,000 IU அளவுக்கு வைட்டமின் டி எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொண்ட நபர்களிடம் ஓராண்டுக்குப் பின் நடத்தப்பட்ட சோதனையில், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு 25 சதவீதம் வரை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. முட்டை, அவகேடோ, சால்மன் மீன் , காட் லிவர் ஆயில், உலர் திராட்சை, மாதுளை, வாழைப்பழம், வெங்காயம், ப்ளூ பெர்ரி, ஸ்டாரபெர்ரி உள்ளிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

2. அஸ்வகந்தா:

அஸ்வகந்தா என்ற ஆயுர்வேத மூலிகை, ஆண்களுக்கு விந்தணுக்களின் செறிவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஆண்களின் விந்தணுக்கள் மூலமாக பெண்கள் கருவுறும் அளவும், பாலியல் ரீதியான செயல்பாடும் அதிகரிக்கிறது. கருவுறுதல் பிரச்சனை கொண்ட 75 ஆண்டுகளுக்கு, தினந்தோறும் 5 கிராம் வீதம் 3 மாதங்களுக்கு அஸ்வகந்தா கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 75 பேரிடமும் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களது விந்தணுவின் செறிவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மாத ஆராய்ச்சியின் முடிவில், 75 ஆண்களில் 15 சதவீதம் பேரின் வாழ்க்கை துணைவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

3. துத்தநாகம் (ஜிங்க்):

துத்தநாகம் ஆண்களின் விந்தணுக்களை சுரக்கும் விரைப்பைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான அளவு துத்தநாக சத்து கிடைக்காத போது, விந்தணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் பாலியல் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் அளவை சமன் செய்கிறது. விந்தணு பாதிப்பை சரி செய்ய விரும்பும் ஆண்கள், ரெட் மீட் (சிவப்பு இறைச்சி), பார்லி, பீன்ஸ் போன்ற துத்தநாகம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உங்களிடம் பாலியல் உணர்ச்சி மற்றும் ஆசை குறைந்துவிட்டதா? - அதை இயற்கையாக மீட்டெடுப்பது எப்படி?

4. சோயா:

சோயாபீன்ஸில் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கக்கூடிய ஐசோஃப்ளேவோன்ஸ் என்ற பாலிபீனால் நிறைந்துள்ளதால், இது ஆண்களுக்கு கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் 99 கருவுற்ற தம்பதிகளின் ஆண் துணையை இரண்டு குழுக்காக பிரித்து, ஒரு குழுவிற்கு அதிக அளவிலான சோயா பொருட்களையும், மற்றொரு குழுவிற்கு சோயா பொருட்கள் இல்லாமலும் தொடர்ந்து 3 மாதத்திற்கு உணவு கொடுத்துள்ளனர்.

இதில் சோயா பொருட்களையே உட்கொள்ளாத நபர்களை விட சோயாவை அதிகம் உட்கொள்ளும் ஆண்களில் விந்தணுக்களின் செறிவு 32% குறைவாக இருந்தது. ஆனால், சோயாவை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், விந்தணுக்களின் செறிவு, இயக்கம், உருவம் மற்றும் விந்தைக் கருப்பைபைக்குள் செலுத்தும் அளவு ஆகியவை சராசரியை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

5. ஷிலாஜித்:

ஆயுர்வேத மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஷலாஜித் மாத்திரைகள் மற்றும் பவுடர்கள் ஆண்களின் வலிமையை மீட்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், மலட்டுத் தன்மையற்ற 60 ஆண்களுக்கு தினமும் உணவுக்குப்பிறகு 2 வேளை ஷிலாஜித் கொடுக்கப்பட்டுள்ளது. 90 நாட்களுக்குப் பிறகு 60 ஆண்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதம் பேரின் விந்தணு எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதும், 12 சதவீத பேருக்கு விந்தணு இயக்கம் அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதோடு, மது அருந்தும் பழக்கத்தை கைவிடுவதும் விந்தணுக்கள் உற்பத்திக்கு உதவக்கூடியதாகும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, ஆண்கள் ஆல்கஹால், கஞ்சா, கோகோயின் போன்ற போதைப் பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது விந்தணு உற்பத்தியை குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Low Sperm Count, Male infertility