ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வயது என்பது பொருட்டல்ல..! சேலையில் ஜிம் ஒர்க்அவுட் செய்து அசத்தும் 56 வயதான சென்னை பெண்...

வயது என்பது பொருட்டல்ல..! சேலையில் ஜிம் ஒர்க்அவுட் செய்து அசத்தும் 56 வயதான சென்னை பெண்...

சேலையில் ஜிம் ஒர்கவுட் செய்து அசத்தும் 56 வயதான சென்னை பெண்.!

சேலையில் ஜிம் ஒர்கவுட் செய்து அசத்தும் 56 வயதான சென்னை பெண்.!

புடவை அணிந்த 56 வயதான அந்த பெண் தனது மருமகளுடன் இணைந்து ஜிம்மிற்கு சென்று தீவிர ஒர்கவுட்ஸில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. உடல்நலக்குறைவு இருந்த போதிலும் கூட ஜிம்மில் ஒர்கவுட் செய்து வருவதை பற்றிய அவரது உத்வேகமான கதையோடு அவர் அசால்ட்டாக செய்யும் கடினமான ஒர்கவுட்ஸ்களின் வீடியோவும் ஷேர் செய்யப்பட்டுள்ளது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போதைய காலகட்டத்தில் சீரான டயட் மற்றும் தினசரி தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கிறார்கள். வயது ஏற ஏற உடலை வலுவாக, சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பழக்கங்களை பின்பற்றுவது அவசியமாகிறது.

இருப்பினும் 50 வயதுக்கும் மேற்பட்ட ஒருநபர் தனது வேலைகளை மெதுவாக செய்வார், ஈஸியான உடல் செயல்பாடுகள் அல்லது ஒர்கவுட்ஸ்களை மட்டுமே செய்ய விரும்புவார். ஆனால் சென்னையை சேர்ந்த ஒரு பெண் இந்த பொதுவான எண்ணத்தை தவிடு பொடியாக்கி இருக்கிறார். 56 வயதான சென்னைப் பெண்ணின் உத்வேகம் தரும் கதை சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

உடல்நலக்குறைவு இருந்த போதிலும் கூட ஜிம்மில் ஒர்கவுட் செய்து வருவதை பற்றிய அவரது உத்வேகமான கதையோடு அவர் அசால்ட்டாக செய்யும் கடினமான ஒர்கவுட்ஸ்களின் வீடியோவும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான இன்ஸ்டா ரீலானது ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் மெட்ராஸ் பார்பெல் உள்ளிட்ட இன்ஸ்டா அக்கவுண்ட்ஸ்களால் கூட்டாக ஷேர் செய்யப்பட்டுள்ளது. வயது என்பது வெறும் எண் தான் என்பதை இந்த வைரல் வீடியோ சரியாக காட்டுகிறது.

புடவை அணிந்த 56 வயதான அந்த பெண் தனது மருமகளுடன் இணைந்து ஜிம்மிற்கு சென்று தீவிர ஒர்கவுட்ஸில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவானது ஊக்கமளிக்கும் கதையை அந்த 56 வயதான குறிப்பிட்ட பெண்மணி டெக்ஸ்ட்டில் கூறுவதை உள்ளடக்கி இருக்கிறது. "எனக்கு கடுமையான முழங்கால் மற்றும் கால் வலி இருப்பது கண்டறியப்பட்டபோது இந்த ஃபிட்னஸ் ஜர்னி அனைத்தும் தொடங்கியது" என்றும் அந்தப் பெண்ஷேர் செய்து கொண்டுள்ளார்.


எனக்கு இப்போது 56 வயதாகிறது, இன்னும் தொடர்ந்து வொர்க் அவுட் செய்கிறேன். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதிலிருந்து உங்கள் உடை கூட உங்களை தடுக்க கூடாது! நானும் என் மருமகளும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறோம். நான் முதலில் ஜிம்மிற்குச் சென்றபோது எனக்கு 52 வயது. எனது வலிகளுக்கான சிகிச்சை பற்றி சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வரும் என் மகன் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியில் அவரது பரிந்துரைப்படி ஜிம் ஒர்கவுட்ஸ்களில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறேன். எனது மகன் வைத்திருக்கும் ஜிம்மின் பெயர் Madras Barbell. எனது மருமகளுடன் சேர்ந்து நான் ஒர்கவுட்ஸ் செய்ய துவங்கினேன். வெயிட் லிஃப்டிங் மற்றும் பவர் லிஃப்டிங், ஸ்க்வாட்ஸ் போன்ற பயிற்சிகள் எனது வலிகளை குணப்படுத்தியது. நாங்கள், ஒரு குடும்பமாக, எங்கள் உடலை ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பாக மற்றும் வலுவாக வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் செய்வதுதான் பெஸ்ட்..! எப்படி தெரியுமா.? 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதில் இவரது முழு அர்ப்பணிப்பை கண்டு நெட்டிசன்கள் பிரமிப்பு அடைந்துள்ளனர். யூஸர்களில் ஒருவர் புடவை கட்டிய பெண் தானே என்று ஏளனம் பேசும் பலருக்கு இவரது செயல் அருமையான பதிலாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்து உள்ளார். மற்றொரு யூஸர் கூறுகையில் இது அனைவருக்கும் சிறந்த உத்வேகம் மற்றும் ஊக்கமளிக்கிறது. குறிப்பாக ஒரு புத்தகத்தை அதன் அட்டையின் மூலம் மதிப்பிடக்கூடாது என்ற பழமொழிக்கு ஏற்ப இவரது செயல் உள்ளது, மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். வீடியோ தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் தங்கள் ஃபிட்னஸை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் மக்களுக்கு இவர் இப்போது ஒரு உத்வேகமாக மாறி இருக்கிறார்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Exercise, Workout