ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ் செய்தபோது பெண்ணுக்கு ஸ்டிரோக் பாதிப்பு : என்ன காரணம்..?

பியூட்டி பார்லரில் ஹேர் வாஷ் செய்தபோது பெண்ணுக்கு ஸ்டிரோக் பாதிப்பு : என்ன காரணம்..?

ஸ்டிரோக்

ஸ்டிரோக்

எல்லோருக்கும் இந்த அபாயங்கள் கிடையாது என்றாலும், செய்தியில் குறிப்பிட்டதைப் போல நோய் பாதிப்பு உள்ளவர்கள், வயதான பெண்மணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், இல்லத்தரசிகள் என எல்லோருக்கும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய எளியமுறை அழகுக் குறிப்புகளை பின்பற்றும் அதே வேளையில், மாதத்திற்கு ஒருசில முறையேனும் பார்லர் செல்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.

வெறுமனே முக அழகு என்பதையும் தாண்டி சரும பாதுப்பிற்கு தேவையான சிகிச்சைகளும் பார்லரில் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, கூந்தல் அழகை மேம்படுத்துவதற்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

தலைக்கு மசாஜ் செய்வது, ஷாம்பூ அப்ளை செய்து தலையை மட்டும் தண்ணீரில் அலசுவது என பல விதமான சேவைகள் பார்லரில் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்படி தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக பார்லர் செல்லும் பெண்களுக்கு ஸ்டிரோக் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நாம் இதுவரை கேள்விபட்டதே கிடையாதே என்று அதிர்ச்சியாக இருக்கிறதா? கவலை வேண்டாம், லட்சத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறதாம்.

இருப்பினும், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும், என்னென்ன முன்னெச்சரிக்கை தேவை, யாரெல்லாம் பார்லரை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம் தானே!

50 வயது பெண்ணுக்கு பாதிப்பு

50 வயது பெண் ஒருவர் அண்மையில் பார்லர் சென்று ஹேர் வாஷ் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பெண்ணுக்கு தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டன. இதையடுத்து, குடல்நோய் சிகிச்சை நிபுணரை அவர் அணுகினார். அங்கு அவருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், நரம்பியல் மருத்துவரின் ஆலோசனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

Also Read : பார்லரில் ஃபேஷியல் செய்த பின் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க...

இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கு நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார், அந்தப் பெண்ணுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பரிசோதித்த நிலையில், அவருக்கு ஸ்டிரோக் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஹைதராபாதைச் சேர்ந்த அந்த மருத்துவர், இந்த அனுபவத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

எதனால் ஏற்பட்டது இந்த பாதிப்பு?

பார்லரில் இதற்கு முன்பு நீங்கள் ஹேர் வாஷ் செய்திருப்பீர்கள். அதை எப்படி செய்வார்கள். நம்மை சாய்வான இருக்கையில் அமர வைத்து, நம் தலை மட்டும் ஷவருக்கு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அதாவது, நம் கழுத்தை நீண்ட தூரம் நீட்டியபடி ஒரே பொசிஷனில், சிறிது நேரம் அசையாமல் இருக்க வேண்டும். இங்குதான் சிக்கல் வருகிறது.

Also Read : பொடுகு தொல்லையை போக்க வெங்காயமும் தேங்காய் எண்ணெயும் போதுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

நீங்கள் வயதானவர், உங்களுக்கு ஏற்கனவே ஹைப்பர்டென்சன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது என்றால், கழுத்தை இப்படி வைத்திருக்கும் சமயத்தில் ரத்தக் குழாய்களில் கசிவு ஏற்படலாம் அல்லது ரத்தக் குழாய்கள் வெடிக்கலாம். ரத்தக் குழாய்கள் மீது அதிகமான அழுத்தம் நிகழுவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

எல்லோருக்கும் இந்த அபாயங்கள் கிடையாது என்றாலும், செய்தியில் குறிப்பிட்டதைப் போல நோய் பாதிப்பு உள்ளவர்கள், வயதான பெண்மணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஸ்டிரோக் அறிகுறிகள்

உங்களுக்கு ஸ்டிரோக் நிகழ இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

சாதாரணமாக குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் ஆகிய பிரச்சினைகளுடன் ஒரு கை முன்னெப்போதும் இல்லாத வகையில் செயலிழந்தைப் போல காணப்படும். முகம் கோணுவதைப் போல இருக்கும், பேச்சு குளறும், நடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும், மொத்தத்தில் நீங்கள் நிலையாக இருக்க முடியாது, கண் பார்வை மங்கும். இவை எல்லாமே ஸ்டிரோக் வருவதற்கான அறிகுறிகள். இவை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Stroke