Home /News /lifestyle /

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கான தீர்வுகள்!

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கான தீர்வுகள்!

தினசரி உடற்பயிற்சி செய்வது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மேஜிக் ஆகும். இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், இனி தினசரி உடற்பயிற்சி செய்வதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டால், அற்புதமான மாற்றத்தை வெகு சில நாட்களிலேயே காணலாம்.

தினசரி உடற்பயிற்சி செய்வது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மேஜிக் ஆகும். இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், இனி தினசரி உடற்பயிற்சி செய்வதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டால், அற்புதமான மாற்றத்தை வெகு சில நாட்களிலேயே காணலாம்.

தினசரி உடற்பயிற்சி செய்வது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மேஜிக் ஆகும். இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், இனி தினசரி உடற்பயிற்சி செய்வதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டால், அற்புதமான மாற்றத்தை வெகு சில நாட்களிலேயே காணலாம்.

மேலும் படிக்கவும் ...
இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் உள்ளன. இது பெண்களின் ஆரோக்கியத்தை பல்வேறு விதமாக பாதிக்கிறது. உதாரணமாக, PCOD, தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஆகியவை மாதவிடாய், கர்ப்பகாலம் மற்றும் மெனோபாஸ் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் பெண்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஹார்மோன் குறைபாடுகள் எல்லாமே சருமத்திலும் பிரதிபலிக்கும். சருமம் வறட்சி ஆவது, பிக்மெண்டேஷன் எனப்படும் சருமத்தின் நிறம் மாறுதல், தீவிரமான முகப்பரு, வயதாகும் அறிகுறிகள் மற்றும் பொலிவு இழப்பு ஆகியவை ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படும் சரும பிரச்சினைகள் ஆகும்.

பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். பின்வரும் ஐந்து பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட சரும பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும்.

தாவர அடிப்படையிலான சைவ உணவுப் பழக்கம் :

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது உங்கள் உடலில் பிரதிபலிக்கும் ‌. சைவ உணவுகள், குறிப்பாக தாவர உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான அனைத்து மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும்.

உலகம் முழுவதுமே பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறி வருகிறது. எந்த கெமிக்கலும் சேர்க்கப்படாத, செயற்கை உட்பொருட்கள் இல்லாத உணவுகளை சாப்பிடும் பொழுது உங்கள் சரும ஆரோக்கியம் மேம்படும். அது மட்டுமின்றி ஆரோக்கியமான தாவர உணவுகளை சாப்பிடும் போது, ஹார்மோன் குறைபாடுகளும் சரியாகும் வாய்ப்பு உள்ளது.

நல்ல தூக்கம் :

ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் போவது அல்லது தூக்கமின்மை நோயால் பாதிக்கப்படுவது, பல்வேறு வகையான உடல்நல கோளாறுகளைக் ஏற்படுத்தும். தூக்கத்திற்கும் ஹார்மோன் குறைபாட்டுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால், அடுத்த நாளே உங்கள் சருமத்தில் வெளிப்படும். நன்றாகத் தூங்கும் போது, மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது உடலில் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மெலடோனின் ஹார்மோன் தேவை.

மனதை ரிலாக்ஸ் செய்யுங்கள் :

பெண்களைப் பொறுத்தவரை மன அழுத்தம் ஏகப்பட்ட உடல்நலக் கோளாறுகளை உண்டாக்குகிறது. தோற்றத்தில், சருமத்திலும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் உண்டாகும் போது, கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது தோற்றப் பொலிவை பாதித்து, சருமத்தில் வயதாகும் அறிகுறிகளை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கார்டிசால் ஹார்மோன் உடல்பருமன், மாதவிடாய் கோளாறு மற்றும் இதய நோயை உண்டாக்கும். இவை அனைத்துமே சருமத்திலும் வெளிப்படும். எனவே, மன அழுத்தத்தை குறைப்பதற்கு உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.

தினசரி 30 நிமிட உடற்பயிற்சி :

தினசரி உடற்பயிற்சி செய்வது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மேஜிக் ஆகும். இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், இனி தினசரி உடற்பயிற்சி செய்வதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டால், அற்புதமான மாற்றத்தை வெகு சில நாட்களிலேயே காணலாம். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் அல்லாமல் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. தினமும் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக இளமையான தோற்றத்தைப் பெற உதவுகிறது.

நீர்சத்து குறையாமல் இருக்க வேண்டும் :

சில ஹார்மோன் குறைபாடுகள் மருந்துகள் உட்கொண்டால் மட்டுமே நிவாரணம் பெற முடியும். அத்தகைய நேரங்களில், உடல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல், உடலில் நீர்ச்சத்தும் குறையாமல் இருக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நீர்சத்து குறைபாட்டை தவிர்க்க உதவுவதோடு, சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். அதிகமாக தண்ணீர் குடிப்பது, சருமத்தை உள்ளிருந்து கிலென்ஸ் செய்து, பொலிவாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க... உங்க ஸ்கின் க்ளோவான தோற்றத்தை பெற வேண்டுமா..? இந்த 5 வகை ஃபேஸ் பேக்கை டிரை பண்ணுங்க..!
Published by:Vaijayanthi S
First published:

Tags: Pimple, Skin Care

அடுத்த செய்தி