கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறீர்களா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்..

கண்களை பராமரியுங்கள்

கண் பார்வை பிரச்சனைகள் நீடித்தால், பின் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி போடும் நிலைமை வந்துவிடும். இதற்கு மேற்சொன்னவைகளை பின்பற்றினால் நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள்.

  • Share this:
இந்த நவீன உலகில் நாம் பார்க்கும் வேலை முதல் படிக்கின்ற விஷயங்கள் வரை எல்லாம் டிஜிட்டல் ஸ்க்ரீனில் உள்ளது. அதிலும் இந்த கொரோனோ (Corona) கால கட்டத்தில் 24 மணி நேரமும் வொர்க் ப்ரம் ஹோம் (WFH) என கம்ப்யூட்டர்/லேப்டாப் ஸ்க்ரீன் முன்பே இருக்க வேண்டியுள்ளது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் ஸ்க்ரீன்களின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.

மாணவர்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைன் மொபைல் வகுப்புகள் மூலம் கற்று வருகின்றனர். ஒரு பக்கம் இந்த தொழில் நுட்பம் நமக்கு வசதியை ஏற்படுத்தி தந்தால் கூட மறுபக்கம் நமக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்தை இந்த டிஜிட்டல் ஒளித் திரைகள் பாதிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம். அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.பாமிங்  :

உங்கள் கண்களை நிதானப்படுத்தவும், சோர்வில் இருந்து மீளவும் இந்த பயிற்சியை முயற்சிக்கவும். இந்த பயிற்சியை செய்வதற்கு, உங்கள் முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். சில ஆழமான சுவாசங்களை எடுத்து, ஓய்வெடுங்கள். பிறகு உங்க இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றுக்கொன்று உரசுங்கள். இப்பொழுது சூடான உள்ளங்கைகளை உங்க கண் இமைகளுக்கு மேல் வையுங்கள். கைகளில் இருந்து வரும் வெப்பம் உங்கள் கண்களால் முழுமையாக உறிஞ்சப்படும் வரை அதே நிலையில் இருங்கள். இந்த மிதமான வெப்பம் உங்க கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் சோர்வை போக்கும். இதே முறையை 5- 10 முறை திரும்ப செய்யுங்கள்.

பக்கவாட்டு பார்வை பயிற்சி  :

குறிப்பாக நீண்ட நாள் வேலைக்குப் பிறகு இந்த உடற்பயிற்சி உங்கள் கண் தசைகளை நீட்டவும், கண்களை தளர்த்தவும் உதவுகிறது. இதனை செய்ய காலை முன்னால் நீட்டி நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். இடது முஷ்டியை மூடி இடது முழங்காலில் வைக்கவும். உங்க கட்டை விரலானது மேல்நோக்கி இருக்க வேண்டும். உங்க கண்களை நேர்கோட்டில் வைத்து நேராக பாருங்கள். அதே நிலையில் தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை வெளியே விட்டு உங்க இடது கட்டை விரலில் கவனம் செலுத்துங்கள். பிறகு மூச்சை உள்ளே இழுத்து உங்க கண்களை மையப்படுத்துங்கள். இதே மாதிரி வலது கட்டை விரலைக் கொண்டு செய்யுங்கள். இரண்டு கட்டை விரல்களுக்கும் 3-5 முறை திரும்ப திரும்ப செய்யுங்கள். பிறகு உங்க கண்களை மூடி ஓய்வு பெறுங்கள்.கண் உருட்டல் :

இந்த யோகா பயிற்சி உங்கள் பார்வை நரம்புகளை வலுப்படுத்தவும், கண்களை வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது.இதைச் செய்வதற்கு கண்களை திறந்து கொள்ளுங்கள். இப்பொழுது 15 முறை உங்க கண்களை சிமிட்டுங்கள். பிறகு கண்களை மூடிக் கொண்டு ஆழமாக மூச்சை உள்ளே இழுங்கள். 30 விநாடிகள் வரை மூச்சை உள்ளே இழுக்கவும். திரும்பத் திரும்ப கண் சிமிட்டுதலை ஏற்படுத்துங்கள் மற்றும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். இதை ஒரு 10-15 முறை திரும்பத் திரும்ப செய்யுங்கள்.

அருகில் மற்றும் தொலைதூர கண் பார்வை பயிற்சி :

இந்த உடற்பயிற்சி கண்களிலுள்ள சிலியரி தசைகளுக்கான உடற்பயிற்சி ஆகும். இது கண்ணின் லென்ஸை சரிசெய்து நமது ஒட்டுமொத்த பார்வையின் வரம்பையும் தரத்தையும் மேம்படுத்துகிறது. இதைச் செய்ய ஒரு நிதானமான முறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். தொலைதூரத்தில் ஒரு புள்ளியை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் கையை நீட்டித்து கொண்டு , உங்கள் கட்டைவிரலை செறிவு புள்ளியின் அடியில் இருக்குமாறு வைத்து பாருங்கள். உங்கள் கட்டைவிரலின் நுனி மற்றும் தொலைதூர புள்ளி என அருகில் மற்றும் தொலைதூர பார்வையை செலுத்த வேண்டும். இதை மறுபடியும் மறுபடியும் என பார்வையை மாற்றி மாற்றி செய்யுங்கள். இந்த உடற்பயிற்சியை 15 தடவை செய்ய வேண்டும். 15 முறை செய்த பிறகு உள்ளங்கை பாமிங் மூலம் உங்க கண்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ஓடும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பார்த்த பின்பு கண் பயிற்சி 

இது ஒரு அதிசயமான யோகா பயிற்சி என்றே கூறலாம். தங்கள் திரைகளில் அதிக நேரம் செலவிட இந்த பயிற்சி உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது நரம்பு வலிமையை மீட்டெடுக்கிறது மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. இதைச் செய்ய உங்கள் கண்களுக்கு முன்னால் ஒரு கடிகாரத்தை படத்தை சித்தரித்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் பார்வையை 12 மணியில் வைக்கவும். சில விநாடிகள் கண் பார்வையை அங்கேயே வைத்து பிறகு கண்களை 6 மணிக்கு கொண்டு வாருங்கள். கண் இமைகளை 10 முறை மேலே மற்றும் கீழ்நோக்கி இதே மாதிரி நகர்த்துங்கள். உங்கள் பார்வை சீராகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். கிடைமட்ட கண் அசைவுகளுக்கு மீண்டும் செய்யவும். இதற்கு ஒன்பது மணி முதல் மூன்று மணி வரை நகர்த்துங்கள். கண் இமைகளை 20 முறை சிமிட்டாமல் நகர்த்த முயலுங்கள்.

கண் பார்வை பிரச்சனைகள் நீடித்தால், பின் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி போடும் நிலைமை வந்துவிடும். இதற்கு மேற்சொன்னவைகளை பின்பற்றினால் நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள்.
Published by:Sivaranjani E
First published: