Home /News /lifestyle /

குளிர் காலத்தில் வரக்கூடிய காது தொடர்பான தொற்றுக்களை எளிதாக தடுக்கும் 5 வழிகள்!

குளிர் காலத்தில் வரக்கூடிய காது தொடர்பான தொற்றுக்களை எளிதாக தடுக்கும் 5 வழிகள்!

Ear Infections

Ear Infections

Ear Infections | உங்களுக்கு சளி அதிகமாக இருந்தால் காதுகளில் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
குளிர் காலம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு நோய்கள் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக காது தொடர்பான பிரச்சனைகள் அதிகம் உருவாகும். இவற்றை சரிசெய்ய பல வழிகளை முயற்சித்து வருவோம். பொதுவாக காதில் ஏற்பட கூடிய பெரும்பாலான தொற்றுக்கள் சில காரணிகளால் உருவாகுகிறது. தொண்டையில் தொற்று, இருமல், காய்ச்சல், ஒவ்வாமை அறிகுறிகள் அல்லது சுவாச நோய்களின் மூலமாக இவை ஏற்படுகிறது. இதனால் உட்புறத்தில் இருந்தே அதிக பாதிப்புகள் வந்து விடுகிறது. எதனால் இப்படிப்பட்ட தொற்றுகள் காதில் உருவாகுகிறது, இதை எப்படி தடுப்பது போன்றவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

அறிகுறிகள்
காதுகளில் தொற்று ஏற்பட்டால் அவற்றை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். காது வலி அல்லது காதில் அசௌகரியமாக உணர்தல், பாதிக்கப்பட்ட காதில் கேட்கும் திறனை இழந்தால், குமட்டல், வயிற்றுப்போக்கு, காது தொற்றால் காது கேளாமை, லேசான தலைவலி, உடல்நிலை மாற்றம் ஆகிய அறிகுறிகளை கொண்டு இதை தெரிந்து கொள்ளலாம். இதனை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வந்தாலே போதும். காதுகளில் தொற்று ஏற்படாது.

சளி தொல்லை
உங்களுக்கு சளி அதிகமாக இருந்தால் காதுகளில் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, சளி உருவாவதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு உங்கள் கைகளை எப்போதும் நன்கு கழுவுங்கள். குறிப்பாக உங்கள் வாயைத் தொடும் முன் அல்லது சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக கழுங்கள். மேலும் நோய்வாய்ப்பட்ட நபர்களிடமிருந்து விலகி இருப்பதால் சளி உங்களுக்கு பரவாது.

Also Read : இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே வைட்டமின் டி மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துங்கள்..!

நாசி வழியை சுத்தம் செய்தல்
மூக்கு பகுதியில் நாசி குழாயின் அடிப்பகுதியான நாசோபார்னெக்ஸில் இருந்து ஒவ்வாமை மற்றும் மாசுக்களை அகற்ற தினசரி எச்சில் உற்பத்தி நடைபெறுகிறது. இது காதுகளில் தொற்று ஏற்படுத்தாமல் இருக்க வழி செய்கிறது. எனவே இந்த பகுதியில் நச்சுக்கள் சேராமல் பார்த்து கொள்ளுங்கள்.

காய்ச்சல்
பொதுவாக காய்ச்சல், சளி போன்றவை உருவாகாமல் பார்த்து கொள்ளுங்கள். குளிர் காலங்களில் அடிக்கடி காய்ச்சல், சளி வருவதால் காதுகளில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே தற்போதைய நிலையில் அடிக்கடி வெளியில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தால் கிருமிகளின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

Also Read : கொரோனாவிடம் இருந்து நுரையீரலை காப்பாற்றும் சுவாசப் பயிற்சி : செய்வது எப்படி?

அலர்ஜி
குளிர் காலங்களில் அதிக அளவில் அலர்ஜி ஏற்படும். இவற்றை தடுக்க ப்ளோநேஸ் மற்றும் நாசோநெக்ஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்தலாம். இதனால் காது பகுதியில் பெரிய அளவில் தொற்றுகள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் மோசமான வலியும் காதில் உருவாகாது.

வறண்ட காதுகள்
காதுகளை வறட்சியாக வைத்து கொள்வது தான் நல்லது. குறிப்பாக குளிக்கும்போது அவற்றில் நீர் புகுந்து கொண்டால் உடனடியாக சுத்தம் செய்து விடுங்கள். இல்லையேல் இதுவே காதுகளில் தொற்றுகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக மாறி விடும்.
Published by:Selvi M
First published:

Tags: Ear care, Health, Winter

அடுத்த செய்தி