ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிரசவத்திற்கு பின் உள்ள காலங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.!

பிரசவத்திற்கு பின் உள்ள காலங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.!

New Mom

New Mom

Postpartum Periods | பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக உங்களுக்கு உண்டாகும் இந்த சிவப்பு வெளியேற்றம் என்பது உடல் வெளியிடும் திசு, இரத்தம் மற்றும் கழிவுகள் ஆகும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் குழந்தை பெற்றவுடன், ஹார்மோன்கள் மாற்றம் மற்றும் புதிய வாழ்க்கை முறையில் ஈடுபடுதல் மிகவும் சவாலான ஒன்று. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு உண்டாகும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சமாளிப்பது என்பது அனைவரையும் கவலையடையச் செய்யும் ஒரு விஷயம் என்றே கூறலாம்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலம் பற்றிய உங்களின் பல கேள்விகளுக்கு, இந்த பதிவு உதவும்.

பிரசவத்திற்குப் பிறகு முதல் மாதவிடாய் காலம்

பிரசவத்திற்குப் பிறகு ஆறு முதல் எட்டு வாரங்களில் உங்களின் முதல் மாதவிடாய் காலம் ஆரம்பமாகும் என HEALTHLINE அறிக்கை கூறுகிறது. பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக உங்களுக்கு உண்டாகும் இந்த சிவப்பு வெளியேற்றம் என்பது உடல் வெளியிடும் திசு, இரத்தம் மற்றும் கழிவுகள் ஆகும்.

இந்த கட்டத்தில் நீங்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்வதாக ஒரு கட்டுரை கூறுகிறது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதாரப் பொருட்களால், யோனி கிழிதல், காயங்கள், அரிப்பு மற்றும் தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கும். பல பெண்களுக்கு, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் வரை, மாதவிடாய் இல்லாமலும் இருப்பதுண்டு.

மாதவிடாய் ஏற்படாமலே பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் கர்ப்பம்

கர்ப்பம் என்பது அரிதானது தான், ஆனால் பிரசவத்திற்குப் பிறகு வரும் காலகட்டத்தில், உங்களுக்கு மாதவிடாய் இல்லாமல் இருந்தாலும் கூட. அல்லது தாய்ப்பால் மாதவிடாய் ஏற்படுவதைத் தடுக்கிறது என்றாலும், கர்ப்பத்திலிருந்து பாதுகாப்பை வழங்காது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

Also Read : Hymen Myths: கன்னித்திரை பற்றி இன்னும் எவ்வளவு காலம் இதையே சொல்லுவீங்க..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கவில்லையானால், பிரசவத்திற்குப் பிறகு 25 நாட்களுக்குப் பின் உங்கள் உடல் அண்டவிடுப்பைத் தொடங்கும். தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க, கருத்தடை மருந்துகள் ஒரு ஊடகமாகப் பயன்படுத்த வேண்டும் என WHAT TO EXPECT என்ற கட்டுரை பரிந்துரைக்கிறது. எனினும், ஹார்மோன் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்,ஏனெனில் அவை பால் விருத்தியை பாதிக்கலாம்.

பிரசவத்திற்குப் பிந்தைய காலங்கள் வழக்கத்தை விட வித்தியாசமாக இருக்கலாம் என HEALTHLINE கட்டுரை கூறுகிறது, பிரசவத்திற்குப் பிந்தைய மாதவிடாய் பெரும்பாலும் பிரசவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து வேறுபடுகிறது. பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில், உடல் மீண்டும் ஒரு வழக்கமான மாதவிடாய் சுழற்சியை உண்டாக்கும்.

இந்நிலையில் அதிக இரத்த ஓட்டத்தைத் தவிர, சிறு சிறு இரத்த உறைவு கட்டிகள், நீண்ட ஒழுங்கற்ற சுழற்சி , வழக்கமான தசைப்பிடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இரத்த வெளியேற்றம் ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்க நேரிடும். ஆனால் சிறிது நாட்களுக்கு பின் உங்கள் சுழற்சி வழக்கமானதாக மாறும்.

கர்ப்பத்திற்கு முன்பு உங்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் இருந்திருதால், லேசான இரத்தப்போக்கு ஏற்ப்படும் வாய்ப்புள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், உங்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் இருந்தால், இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் எனவும் கூறுகிறது.

Also Read : புரோபயோடிக் உணவுகள் பெண்ணுறுப்பு தொற்று அபாயங்களை தடுக்கிறது - ஆய்வு

கருத்தடை மருந்துகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்

கர்ப்பத்திற்குப் பிந்தைய காலத்தில் நாம் உபயோகிக்கும் கருத்தடை அல்லது கட்டுப்பாட்டு விருப்பங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை வெவ்வேறு வழிகளில் பாதிக்கலாம் என்று PARENTS கட்டுரை கூறுகிறது. நீங்கள் வாய்வழி கருத்தடைகளை உட்கொண்டால், கருப்பையக சாதனத்தை (IUD) சரிசெய்ய வேண்டும் அல்லது ஈஸ்ட்ரோஜனைக் கொண்ட ஒரு விருப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது உங்களுக்கு ஏற்படக்கூடிய அதீத இரத்தப்போக்கை இலகுவாக்கும்.

இருப்பினும், non-hormonal copper (IUD) மாதவிடாய் சுழற்சியை நீட்டித்து அதிகமான இரத்த போக்கை ஏற்படுத்தும். அதில் உள்ள உலோகத்தால் இந்த அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இருப்பினும், உங்களுக்கான கருத்தடை அல்லது கட்டுப்பாட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.

Also Read : மழைக்காலங்களில் தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகக் காம்பில் தொற்று ஏற்பட என்ன காரணம்..? தடுக்கும் வழிமுறைகள்

மன அழுத்தத்தால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பாதிப்பு

GOOD RX HEALTH என்ற கட்டுரையில் மன அழுத்தம் உங்கள் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மாற்றும் என்றும், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறுகிறது.மேலும் இது பிரசவத்திற்குப் பிந்தைய கட்டத்தில் தூக்கமின்மையை ஏற்படுத்துவதோடு, உங்களுக்கு அதிக இரத்தப்போக்கையும் உண்டாக்கும் அல்லது மாதவிடாய்களைத் தவிர்க்கலாம் எனவும் கூறுகிறது.

எனவே, PARENTS கட்டுரை நீங்கள் ஒரு சீரான உணவை சாப்பிட்டு, முடிந்தவரை தூங்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும், மேலும் உங்கள் மாதவிடாய் சுழற்சியை காலெண்டரைப் பின்பற்றுங்கள் எனவும் கூறுகிறது.

Also Read : கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்... அதிக இரத்தப்போக்கு... ஆய்வில் வெளியான உண்மை..!

இருப்பினும், பிரசவத்திற்குப் பிறகு உங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் இயல்பானது, மேலே குறிப்பிட்டுள்ளவைகள் அசாதாரணமானது என்று உங்களுக்கு தோன்றினால், உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

First published:

Tags: New Mom, Post Pregnancy Side effects