உங்கள் பற்கள் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

உங்கள் பற்கள் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

மாதிரி படம்

எனாமலை அரிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் சீஸ் மற்றும் பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை எப்போதும் சாப்பிடுங்கள்.

  • Share this:
பற்களை வெண்மையாக்குவதற்கு எண்ணற்ற தயாரிப்புகள் இப்பொது கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை ப்ளீச் வகையை சேர்ந்தவை. அவை வெண்மையாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்குவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த பதிவை அவசியம் படியுங்கள். ஆனால் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன்பு, உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக ஏன் மாறுகிறது என்பதைப் பற்றி காண்போம்.

பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு என்ன காரணம்?

உங்கள் பற்கள் கறையாகவும், மஞ்சள் நிறமாகவும் தோற்றமளிக்க பல்வேறு காரணிகள் உள்ளன. சில உணவுகள் உங்கள் பற்களின் வெளிப்புற அடுக்காக இருக்கும் எனாமலை கறைபடுத்தும். மேலும், உங்கள் பற்களில் படியும் பிளேக் கூட உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்க காரணமாக அமையும். நிறமாற்றம் வழக்கமான சுத்தம் மற்றும் வெண்மை வைத்தியம் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம்.

ஆனால் சில நேரங்களில், பற்களும் முழுவதும் மஞ்சள் நிறமாகத் தெரியும். ஏனெனில் அவை கடினமான எனாமலை அரித்து, அடியில் உள்ள டென்டினை வெளிப்படுத்துகிறது. டென்டின் இயற்கையாகவே மஞ்சள் எலும்பு திசு ஆகும். இது எனாமலுக்கு அடியில் உள்ளது. இருப்பினும் உங்கள் பற்களை வெண்மையாக மாற்ற சில எளிய இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றை குறித்து காண்போம்.



ஆயில் புல்லிங் பயிற்சி செய்யுங்கள்

ஆயில் புல்லிங் என்பது ஒரு பாரம்பரிய தீர்வாகும். இது வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இந்த நடைமுறையில் உங்கள் வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது மூலம் பிளேக்காக மாறும் பாக்டீரியாக்களை அகற்றி உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும்.

ஆயில் புல்லிங் செய்ய மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் சூரியகாந்தி மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை. நீங்கள் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இதில் உள்ள லாரிக் அமிலம் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனுக்காக சிறப்பாக அறியப்படுகிறது. தினசரி ஆயில் புல்லிங் செய்வது பிளேக் மற்றும் ஈறு அழற்சியுடன் வாயில் உள்ள பாக்டீரியாவைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் பாக்டீரியாவைக் குறைக்கிறது. இந்த பாக்டீரியா பிளேக் மற்றும் ஈறு அழற்சிக்கு காரணமாகிறது. ஆயில் புல்லிங் செய்ய, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உங்கள் வாயில் வைத்து, உங்கள் பற்கள் வழியாக எண்ணெயைத் நன்கு புல்லிங் செய்யவும். எண்ணெய் இழுப்பது ஒரு பாதுகாப்பான நடைமுறை மற்றும் இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.



பேக்கிங் சோடாவுடன் பல்துலக்குங்கள்:

பேக்கிங் சோடா இயற்கையாகவே வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் பற்பசையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. இது பற்களில் உள்ள கறைகளை துடைக்க முடியும். இது வாயில் கார சூழலை உருவாக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கிறது.

பேக்கிங் சோடா உங்கள் பற்களை வெண்மையாக்கும் என்று அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பேக்கிங் சோடாவைக் கொண்ட பற்பசையானது குறிப்பிடத்தக்க வெண்மை விளைவைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து, அதனுடன் பல் துலக்கலாம். நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதனை செய்யலாம்.



ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவர். இது உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாவையும் கொல்லும். பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் காரணமாக ஹைட்ரஜன் பெராக்சைடு பல ஆண்டுகளாக காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

பேக்கிங் சோடா மற்றும் 1 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட பற்பசை கணிசமாக வெண்மையான பற்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மற்றொரு ஆய்வில், பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட பற்பசையை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தும் போது 6 வாரங்களில் 62 சதவீத வெண்மையான பற்களுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹைட்ரஜன் பெராக்சைடை டையலூட் செய்து பயன்படுத்தும் போது பாதுகாப்பானது. அதன் அதிகப்படியான பயன்பாடு பல் உணர்திறன் மற்றும் ஈறு எரிச்சலை ஏற்படுத்தும். நீங்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்த திட்டமிட்டால், எந்தவொரு பக்க விளைவுகளையும் தவிர்க்க 1.5 அல்லது 3 சதவீதம் மட்டுமே எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல் துலக்குவதற்கு முன்பு இதை மவுத்வாஷாகவும் பயன்படுத்தலாம். நீங்கள் அதை பேக்கிங் சோடாவுடன் கலந்து பல் துலக்கலாம்.



பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் மெல்லும்போது அது உங்கள் பற்களில் படிந்திருக்கும் பிளேக்கை தடுக்க உதவும். ஸ்ட்ராபெர்ரி மற்றும் அன்னாசி ஆகியவற்றையு சாப்பிடுவதால் உங்கள் பற்களை வெண்மையாகும் என்று கூறப்படுகிறது.

வீட்டுச் சூழலை மாற்ற இந்த பாசிடிவ் விஷயங்களால் வீட்டை அலங்கரியுங்கள்..!

பற்களில் கறை படியாமல் இருக்க இந்த விஷயங்களை கடைபிடியுங்கள்:

* காபி, சிவப்பு ஒயின், சோடா மற்றும் டார்க் பெர்ரி ஆகியவற்றை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். இவை அனைத்தும் பற்களைக் கறைபடுத்துவதில் பிரபலமானவை. இந்த பொருட்களை நீங்கள் முற்றிலும் தவிர்க்க தேவையில்லை. ஆனால் அவற்றின் உட்கொள்ளலை நீங்கள் குறைக்கலாம்.

* புகையிலை பிடிப்பதை தவிர்க்கவும். சிகரெட்டை புகைப்பதால் பற்களில் நிறமாற்றம் ஏற்படலாம்.



 

* சர்க்கரை அதிகமாக உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். அதிகப்படியான சர்க்கரை, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பிளேக் மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரை உணவை உட்கொண்ட உடனேயே பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* எனாமலை அரிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் சீஸ் மற்றும் பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை எப்போதும் சாப்பிடுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: