குளிர்காலத்தில் கூந்தலின் வறட்சி, சருமம் வறண்டு போவது, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக் கூடிய அபாயம் ஆகியவை பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் சாத்தியம் உள்ளது. அதேபோல குளிர் காலத்தில் சளி இருமல் காய்ச்சல் ஆகியவையும் புதிதல்ல. குளிர்காலத்தில் செரிமான சக்தி அதிகமாக இருப்பதாலும், உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருப்பதற்கும், கதகதப்பாக உணர்வதற்கும் பொதுவாகவே சூடான உணவுகளையும் விதவிதமான இனிப்பு மற்றும் பானங்களையும் சாப்பிடுகிறோம்.
இதனால் பற்களின் ஆரோக்கியம் குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பற்கூச்சம் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்.
ஏன் குளிர்காலத்தில் அதிகமாக பற்கூச்சம் ஏற்படுகிறது?
பற்களின் எனாமல் சுருங்குகிறது:
பொதுவாகவே கோடை காலத்தில் பற்கள் இயற்கையாக விரிவடையும் தன்மையும், குளிர்காலத்தில் சுருங்கும் தன்மையும் கொண்டுள்ளது. பற்களின் மேற்புறத்தில் இருக்கும் எனாமல் என்ற லேயர் குளிர் அதிகமாக இருக்கும் இப்பொழுது சுருங்கி விடும். இதனால் பற்களில் லேசான விரிசல் ஏற்படலாம். இது பற்கூச்சத்தை அதிகப்படுத்துகிறது.
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்:
நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் பற்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதையும் தீர்மானிக்கின்றது. செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் பல பண்டிகைகள் குளிர் காலம் முடிவடையும் வரை நீளும். அதில் மிகப்பெரிய பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என்று பல்வேறு பண்டிகைகள் முழுவதும்
விதவிதமான உணவு பண்டங்கள் இனிப்புகளும் ஒரு அங்கமாக இருக்கின்றது. எனவே அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடும் பொழுது அது பற்களை பாதித்து சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது.
சளி மற்றும் சைனஸ் தொற்று:
பொதுவாகவே குளிர்காலத்தில் டெம்பரேச்சர் குறையும் பொழுது சளி காய்ச்சல் மற்றும் சைனஸ் தொற்று ஆகியவை அதிகமாக இருக்கும். சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களுடைய மூச்சுக்குழல், சுவாசிக்கும் குழாய், மற்றும் தொண்டை பகுதி அனைத்துமே சுருங்கிவிடும். எனவே இது உங்கள் பற்களில் இருக்கும் நரம்புகளை பாதித்து வலி மற்றும் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கும்.
ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவு அல்லது சைவ உணவு இரண்டில் எது பெஸ்ட்..?
சோம்பேறித்தனம்:
சோம்பேறித்தனத்தால் பற்கூச்சம் அதிகரிக்கிறது என்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கலாம். ஆனால் குளிர் காலத்தைப் பொறுத்தவரை சில்லென்ற பருவநிலை நம்மை சோம்பேறிகளாக மாற்றுகிறது. ஹைபர்நேஷன் மோடு என்று கூறப்படும் அளவுக்கு எதையுமே செய்யாமல் கதகதப்பான ஆடைகளை அணிந்து கொண்டு நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் பலர் இருப்பார்கள்.
குளிப்பது, முறையாக பல் துலக்குவது வாயை சுத்தம் செய்துகொள்வது என்ற அடிப்படையான சில விஷயங்கள் கூட செய்ய வேண்டுமா? என்ற அளவுக்கு ஒரு சிலர் மிகப்பெரிய சோம்பேறியாக இருப்பார்கள். மேலும், சில்லென்று தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்று சிலர் தயங்கி, வழக்கமாக அன்றாடப் பழக்க வழக்கங்களை கூட சிலர் செய்ய தயங்குவார்கள். இது பற்களை பாதிக்கும்.
மேலும், அதிகப்படியான குளிர்ச்சியை நம் உடலால் தாங்கிக் கொள்ள முடியாதது போல, அது நேரடியாக பற்களையும் பாதிக்கிறது.
குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பற்கூச்சத்தை எப்படி சரி செய்வது?
குளிர்காலத்தில் அவ்வபோது மூக்கடைப்பு, சளி மற்றும் மூச்சுவிடுவதில் சிற்பம் ஏற்படும்போது வாயை திறந்து மூச்சு விடும் பழக்கம் காணப்படுகிறது. குளிரில் நேரடியாக பற்களை வெளிப்படுத்தும் போது அது எனாமல் மற்றும் வாயில் பற்களை இணைக்கும் நரம்புகளையும் பாதிக்கிறது. எனவே வாயைத் திறந்து சுவாசிக்காமல், மூக்கு வழியாகவே சுவாசிக்கவும்.
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பாக இருப்பதற்கு மாஸ்க் பயன்படுத்துகிறோமோ, அதே போல குளிர்காலம் முழுவதுமே நீங்கள் எப்போது வெளியில் சென்றாலும் மாஸ்க் பயன்படுத்தி, உங்கள் வாயை மூடிக் கொள்வது பற்களை பாதுகாக்கும்.
சாப்பிட்ட பிறகு வயிறு வீக்கத்தால் அவஸ்தைபடுகிறீர்களா..? தவிர்க்க இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க
குளிர்காலத்தில் என்றால் சுடச்சுட உணவு சாப்பிடுவது, சூடான பானங்களை குடிப்பது மற்றும் கோடை காலம் என்றால் சில்லென்ற உணவுகளையும் பானங்களையும் குடிப்பது அந்தந்த பருவத்திற்கேற்றவாறு உணவுகளை சாப்பிடுவது வழக்கம். ஆனால் இவ்வாறு அதிகப்படியான சூடாகவோ குளிர்ச்சியாகவோ எதை சாப்பிட்டாலும் அது நேரடியாக பற்களை பாதிக்கும். எனவே குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உங்கள் உணவுகளையும், பானங்களையும் சாப்பிடுங்கள்.
அடிக்கடி வெளியில் செல்வீர்கள் அல்லது நாள் முழுவதும் நீங்கள் வெளியில் தான் வேலை செய்ய வேண்டும் என்றால், உங்கள் பற்கள் பாதிக்காமல் இருக்க மவுத்-கார்டை பயன்படுத்துங்கள்.
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு பல் மருத்துவரை சந்தித்து ஒரு முறை பற்களை சுத்தம் செய்து கொள்வது மற்றும் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது குளிர்காலத்தில் பற்கூச்சம் ஏற்படாமல் தடுக்க உதவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Teeth, Tooth care