Home /News /lifestyle /

Chaga tea : சாகா மஷ்ரூம் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

Chaga tea : சாகா மஷ்ரூம் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

மஷ்ரூம் டீ

மஷ்ரூம் டீ

சாகா மஷ்ரூம்களின் சாறுகள் மண்ணீரல் (spleen ) லிம்போசைட்டுகளைத் தூண்டுவதற்கு உதவும் என்று கண்டறியப்பட்டது. இது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

2 ஆண்டுகளாக நீடித்து வரும் பெருந்தொற்று ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்கால வீட்டு வைத்தியம் உள்ளிட்டவற்றின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தினசரி நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக தேநீர் இருந்து வருகிறது. ஆனால் சாகா டீ (Chaga tea) அல்லது மஷ்ரூம் டீ (Mushroom tea) என்றும் அழைக்கப்படும் டோட்ஸ்டூல் டீ-க்கு (Toadstool tea) மாறுவது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் எளிதான வழியாகும்.

சுவாரஸ்யமாக சாகா டீ என்றும் அழைக்கப்படும் மஷ்ரூம் டீயின் ஆன்ட்டிஆக்ஸிடன்ட் மற்றும் ORAC (oxygen radical absorbance capacity) மதிப்பெண் 146,700 ஆகும். அதாவது ஒரு சாதாரண கப் சாகா டீ ஒரு வழக்கமான கப்பா டீயைவிட அதிக நன்மைகளை கொண்டு இருக்கும்.மேலும் இந்த டீ உங்களை மன நிம்மதியாகவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவும். நீங்கள் மஷ்ரூம் டீக்கு மாற தேவையான காரணங்கள் இங்கே..

சாகா டீ என்றும் அழைக்கப்படும் டோட்ஸ்டூல் டீ சாகா மஷ்ரூம்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது . இதில் செல் மீளுருவாக்கம் (cell regeneration) மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இருப்பதால் ஏற்படும் செல்களின் சேதத்தை குறைக்கிறது மற்றும் பல வகை புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. எனவே மஷ்ரூம் டீ-க்கு மாறுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க ஒரு சிறந்த வழி.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்:

பல விலங்கு மற்றும் சோதனைக் குழாய் ஆய்வுகள் சாகா மஷ்ரூம்கள் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் மெதுவாக்கும் என்று காட்டுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவை புற்றுநோய் கட்டியின் அளவை சுமார் 40% வரை குறைத்தது கண்டறியப்பட்டது. ஒரு சோதனைக் குழாய் ஆய்வில், சாகா மஷ்ரூம் சாறு மனித கல்லீரல் செல்களில் புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பது கண்டறியப்பட்டது. மஷ்ரூம் டீ-யின் வழக்கமான மற்றும் மிதமான நுகர்வு கல்லீரல் அல்லது இரைப்பை குடல் புற்று நோய்களை தடுக்கும்.



அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி..

மஷ்ரூம் டீ பாரம்பரியமாக அதன் குணப்படுத்தும் நன்மைகள் மற்றும் அதன் லேசான இனிப்பு சுவைக்காக விரும்பி பருகப்படுகிறது. ஆய்வுகளின்படி, சாகா மஷ்ரூம்களின் சாறுகள் மண்ணீரல் (spleen ) லிம்போசைட்டுகளைத் தூண்டுவதற்கு உதவும் என்று கண்டறியப்பட்டது. இது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

உங்கள் டீ மற்றும் காபியில் சர்க்கரையின் அளவை கட்டாயம் குறைக்க வேண்டும் : ஏன் தெரியுமா?

வைரஸ் எதிர்ப்பு பண்புகள்:

மஷ்ரூம் டீ-யில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட விலங்குகள் மீதான ஆய்வின்படி, Chaga mushroom சாறுகள் ஹெபடைடிஸ் சி வைரஸில் சிறந்த தாக்கத்தை வெளிப்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த மஷ்ரூமின் சாறு வெறும் 10 நிமிடங்களில் வைரஸின் தொற்று அளவை 100 மடங்கு குறைத்தது. எனினும் வைரஸ் தடுப்பு சிகிச்சைகளில் இந்த Chaga காளான்களின் தாக்கத்தை மேலும் உறுதிப்படுத்த நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.



உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:

ஆய்வு ஒன்றின் படி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (oxidative stress) உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் காரணங்களில் ஒன்றாகும். எனவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டீ அல்லது உணவுகளுக்கு மாறுவது oxidative stress-ஐ குறைக்க உதவுகிறது. மேலும் இந்த மஷ்ரூம் டீயை மிதமான அளவில் குடிப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Herbal Tea, Tea

அடுத்த செய்தி