ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தாய்பால் கொடுக்கும் பெண்கள் தியானம் செய்வது இவ்வளவு  நன்மைகளை கொடுக்குமா..? 

தாய்பால் கொடுக்கும் பெண்கள் தியானம் செய்வது இவ்வளவு  நன்மைகளை கொடுக்குமா..? 

தியானம்

தியானம்

குழந்தைக்கு சரியான நேரத்தில் உணவளிப்பது முதல் அதனை உறங்க வைப்பது வரை பல விஷயங்கள் உள்ளன. அதேபோல் புதிய தாய்மாருக்கு குழந்தை பெற்ற பிறகு ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க தாய்மார்கள் தியானம் மேற்கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெண்மை தாய்மையில் நிறைவு பெறுவதாக கருத்து உண்டு, அந்த தாய்மையும் பெருமகிழ்ச்சி அடையும் தருணமாக பிள்ளை வளரும் ஒவ்வொரு தருணமும் மாறுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மிக அழகான அனுபவங்களில் ஒன்றாக தாய்மை உள்ளது. அதே நேரத்தில், இது மிகவும் சவாலான காலகட்டமாகவும் இருக்கிறது. முதல் முறையாக குழந்தை பெற்ற புதிய தாய் என்றால் நீங்கள் பிள்ளையின் ஒவ்வொரு அசைவில் தொடங்கி மில்லியன் கணக்கான விஷயங்களை வரை கவனிக்க வேண்டும்.

குழந்தைக்கு சரியான நேரத்தில் உணவளிப்பது முதல் அதனை உறங்க வைப்பது வரை பல விஷயங்கள் உள்ளன. அதேபோல் புதிய தாய்மாருக்கு குழந்தை பெற்ற பிறகு ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க தாய்மார்கள் தியானம் மேற்கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. பகலில் சிறிது நேரம் தியானம் செய்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது உண்மையிலேயே நன்மை பயக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாயாக நீங்கள் தியானம் செய்ய வேண்டிய காரணங்கள் கட்டாயமானவை, மேலும் அவை மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவலாம்.

சமீபத்தில், நடிகை நேஹா தூபியாவின் தாய்ப்பால் மற்றும் பெற்றோருக்கான முயற்சியான 'ஃப்ரீடம் டு ஃபீட்' இன்ஸ்டாகிராம் கணக்கு, புதிய தாய்மார்களுக்கு தியானம் எப்படிப்பட்ட நன்மைகளைக் கொடுக்கும் என்பதை விளக்குகிறது. அதில் உள்ள சாரம்சங்களைக் கொண்டு முக்கியமான 5 விஷயங்களை நாங்கள் உங்களுக்கு பட்டியலிட்டுள்ளோம்.

தாய்பால் சுரப்பை மேம்படுத்தும்:

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க தியானம் உதவும். ஒரு ஆய்வு முடிவின் படி, “ தவறாமல் தியானம் செய்யும் பாலூட்டும் தாய்மார்களின் குழு சராசரியாக 500 சதவிகிதம் பால் உற்பத்தியை அதிகரித்திருப்பது” கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தையை புத்திக்கூர்மை கொண்டவராக மாற்றும் பழக்க வழக்கங்கள்..!

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்:

தாய்மை அடையும் சமயத்தில் பெண்ணின் உணர்ச்சியானது ரோலர்கோஸ்டர் சவாரி போல் சில சமயங்களில் அதிகமாகவும், சில சமயங்களில் மிகவும் குறைந்த அளவிலும் இருக்கும். எனவே, இந்த மாதிரியான சமயத்தில் தியானம் ஒருவரை அமைதியாகவும் அமைதியுடனும் வைத்திருக்க உதவுகிறது.

உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தும்:

புதிதாக தாயாக மாறியுள்ள பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்ததில் இருந்து விடுதலை பெற தியானம் ஒரு சிறப்பான வழியாகும். உங்களைப் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மந்தநிலை ஆகியவற்றிலிருந்து விலக்கி வைக்கவும் இது உதவுகிறது.

கர்ப்பகால யோகா வகுப்புகளில் பயிற்சி பெறுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

உங்களுக்கான நேரம்:

முதன் முறையாக தாயான பெண்ணுக்கு குழந்தையை சுற்றியே உலகம் சுழலுமோ தவிர, தன்னை கவனித்துக்கொள்ள தனியாக நேரம் இருக்காது. குழந்தையை குளிப்பாட்டுவது, பாலூட்டுவது, சீராட்டி தூக்க வைப்பது என குழந்தையை சுற்றியே தாயின் முழு கவனமும் இருக்கும். எனவே ஒரு முழு நீளமான நாளில் தனக்கென நேரம் ஒதுக்கி சிறிது நேரம் தியானம் செய்வது நிம்மதியைக் கொடுக்கும்.

தன்னம்பிக்கை மற்றும் இணைப்பு

உடலில் ஹார்மோன் மாற்றம், பதற்றம், வலி, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளுடன் நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தியானம் தன்னம்பிக்கை கொடுக்கும் விஷயமாக அமையும். உங்கள் திறன்கள், உங்கள் உடல் மற்றும் உங்கள் குழந்தையின் திறன்களில் நம்பிக்கையைப் பெறவும் இது உதவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breastfeeding, Yoga