முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு சிறப்பாக உதவும் தேங்காயின் நன்மைகள்!

தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு சிறப்பாக உதவும் தேங்காயின் நன்மைகள்!

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

Thyroid : இதற்கு ஹார்மோன்களின் சீரற்ற உற்பத்தி தான் முக்கிய காரணமாக உள்ளது. இதை சரி செய்ய மாத்திரைகளை காலையில் எழுந்த உடனே உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்றைய உலகில் நோய்கள் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நோய்களின் உற்பத்தி பல மடங்கு பெருகி விட்டது. நோய்கள் நமது சீரற்ற வாழ்க்கை முறையினால் வந்து விடுகிறது. இது ஒவ்வொரு மனிதர்களின் உடல் அமைப்புக்கும் ஏற்ற மாதிரி பாதிப்புகளையும் தரும். அந்த வகையில் தைராயிட் என்பது இன்றைய கால கட்டத்தில் பலரை வாட்டி வதைக்கும் நோயாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலினருக்கும் தைராய்டு நோய் பாதிப்பு பெருகி வருகிறது.

இதற்கு ஹார்மோன்களின் சீரற்ற உற்பத்தி தான் முக்கிய காரணமாக உள்ளது. இதை சரி செய்ய மாத்திரைகளை காலையில் எழுந்த உடனே உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், இதை நாம் சாப்பிடும் உணவின் மூலமும் கட்டுக்குள் வைக்க முடியும். இதற்கு நாம் சாதாரணமாக கருத கூடிய தேங்காய் உதவுகிறது. ஆம், தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த பதிவில் தேங்காயை பயன்படுத்தி எப்படி தைராயிட் பாதிப்பிற்கு தீர்வு காணலாம் என்பதை குறித்து பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் : தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய பயன்களை கொண்டது. இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் இது கொழுப்பை குறைக்க உதவும் மற்றும் உங்கள் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களின் உட்புற உடல் வெப்ப நிலையானது அதிகமாக இருப்பதால், கைகள் மற்றும் கால்கள் குளிர்ச்சியாக இருக்கும். தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

நாமக்கல்: சாகும்வரை உழைத்துக்கொண்டிருப்பேன் – இளநீர் கடைக்காரரின் தன்னம்பிக்கை!
இளநீர் : தென்னை மரத்தின் எல்லா வகையான உறுப்புகளும் பல வகையில் நமக்கு நன்மைகளை தர கூடியவை. தைராய்ட் பாதிப்பு உள்ளவர்கள் வாரத்திற்கு 3-4 முறை இளநீர் குடித்து வரலாம். இது உடலில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். சளி தொல்லை இருப்பவர்கள் இதை தவிர்த்து விடலாம்.

தேங்காய் சட்னி : நாம் சாப்பிட கூடிய பல உணவுகள் மருத்துவ குணம் நிறைந்தவை. அந்த வகையில், வீடுகளில் பரவலாக தேங்காய் சட்னி என்பது அத்தியாவசிய உணவாக தயார் செய்யப்படுகிறது. காலை அல்லது இரவு உணவின் போது தோசை அல்லது இட்லிக்கு சிறந்த ஒரு சட்னி இதுவே. இதை சாப்பிட்டு வந்தாலும் உங்களுக்கு இதன் பயன்கள் முழுவதும் கிடைக்கும்.

தேங்காய் உருண்டை : சிலருக்கு தேங்காயை வெறுமனே சாப்பிட பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவு தேங்காய் உருண்டை. அதாவது வெல்லத்தினால் செய்ய கூடிய தேங்காய் உருண்டை. சிறு வயதில் இதை சிறந்த தின்பண்டமாக சாப்பிட்டு வருவோம். ஆனால், இப்போது நாம் இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை உண்பதில்லை. எனவே, வெல்லம் சேர்த்த தேங்காய் கேக் அல்லது தேங்காய் உருண்டையை கூட தைராய்ட் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

First published:

Tags: Health, Thyroid