எந்த ஒரு கோவிட்-பாசிட்டிவ் நபருடனும் தொடர்பு கொள்ளாத போதும் கூட, சிலர் எப்படி கோவிட்-19 நோய்த்தொற்றை பெறுகின்றனர் என்கிற கேள்வி பலரையும் மன உளைச்சலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாக்குகிறது.
கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் என்பதை நாம் அனைவரும் அறிந்தது போலவே, இந்த வைரஸ் நெருங்கிய தூரத்திலோ அல்லது உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி உரையாடலை நிகழ்த்தும் தூரத்திலும் கூட பரவுகிறது என்பதையும் அறிய வேண்டும். இது தவிர்த்து வேறு எந்தெந்த வழியாக கோவிட் 19 வைரஸின் பரவல் நிகழலாம் என்கிற காரணங்கள் இதோ:
முன்-அறிகுறி கொண்ட நபர்களிடம் இருந்து..
ஒரு நபர் முதலில் வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அது சார்ந்த அறிகுறிகளை பெறும் நிலையே, முன்-அறிகுறி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, கோவிட் தொற்றுள்ளவர்கள், அதற்கான அறிகுறிகள் தோன்றும் 2 - 3 நாட்களுக்கு முன்பாகவே பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கலாம். நமது அருகில் இருக்கும் முன்-அறிகுறி உள்ள நபர், அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நபரைப் போலவே தொற்றுநோயைப் பரப்பும் திறன் கொண்டவர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Also Read : கொரோனாவிடம் இருந்து நுரையீரலை காப்பாற்றும் சுவாசப் பயிற்சி : செய்வது எப்படி?
மிகவும் குறுகிய இடைவெளியில்..
நீங்களும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபரும் மிகவும் குறுகிய எல்லைக்குள் இருந்தால், உங்களுக்கு எளிதில் தொற்று ஏற்படும். பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் அல்லது சுவாசம் ஆகியவற்றிலிருந்து வரும் சிறிய திரவத் துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. இப்படியாக ஒருவர் காற்றில் இருக்கும் திரவத் துகள்களுடன் தொடர்பு கொண்டவுடன், குறிப்பிட்ட வைரஸ் ஆனது கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக பாதிக்கப்படாத நபரின் உடலுக்குள் நுழைகின்றன. எனவே காற்றோட்டம் இல்லாத, நெரிசலான இடத்தில் இருக்கும்போது இந்த காரணத்தின் கீழ் உங்களுக்கு தொற்று ஏற்படலாம்.
அறிகுறியற்ற நபர்களிடம் இருந்து..
ஒருவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார், ஆனால் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்த மாட்டார். ஏனெனில் நோய்த்தொற்றின் வெளிப்பாடு உங்கள் உடலால் தூண்டப்படும் நோயெதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது. இவர்கள் தங்களுக்குள் வைரஸ் இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். இப்படியான நபர்களுடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், நீங்களும் வைரஸைப் பெறுவீர்கள்,
Also Read : இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்தினாலே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்...
டெஸ்ட் எடுத்து பார்ப்பதை தவிர்ப்பவர்களிடம் இருந்து...
டெஸ்ட் செய்து பார்ப்பது தான் கோவிட்-19 நோய்த்தொற்றைத் தீர்மானிக்கும் முக்கிய மற்றும் பிரதான வழிமுறை ஆகும். ஆனால் இதை அனைவரும் செய்வதில்லை. பெரும்பாலான கோவிட்-19 அறிகுறிகள் ஜலதோஷத்தின் அறிகுறிகளுடன் சேர்வதால், பலரும் டெஸ்ட் செய்வதை தவிர்த்து விட்டு, ஜலதோஷத்திற்கான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம், பாதிக்கப்பட்ட நபரின் தொற்று குறைவதற்குள் மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது.
ஓமிக்ரான் மாறுபாடு மிகவும் அறிகுரியற்றது!
கோவிட்-19 தொற்றின் இந்த சூப்பர் ஸ்ப்ரெட் வேரியண்ட் ஆனது எந்த வகையான கடுமையான அறிகுறிகளையும் காட்டாது, இது மிகவும் அறிகுறியற்றது. இந்த வைரஸின் ஆக்ரோஷமான தன்மையால், வெளியில் இருக்கும் எவருமே இதனிடம் இருந்து தப்பிப்பது கடினம். இதுவரை, ஓமிக்ரான் மாறுபாட்டுடன் தொடர்புடைய 9,000 கோவிட்-19 கேஸ்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, Covid-19, Health