ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவில் தூங்காமல் இருப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

இரவில் தூங்காமல் இருப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

இன்சோம்னியா

இன்சோம்னியா

அமெரிக்காவின் ஜான் ஹாக்கிங் பல்கலைக்கழகத்தில் உறக்கத்திற்கும் மன அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி ஒரு குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது அதில் இன்சோம்னியா பாதிக்கப்பட்ட நபர்கள் நன்றாக உறங்கும் நபர்களை விட 10 மடங்கு அதிக அளவில் மன அழுத்தத்தை உணர்வதாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்சோம்னியா எனப்படும் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்றாகஉறங்கும் நபர்களை விட பத்து மடங்கு அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. நாள் முழுவதும் ஓடியாடி அலைந்து விட்டு இரவில் நன்றாக உறங்கினால் மட்டுமே அடுத்த நாளுக்கான வேலைகளை செய்வதற்கு உடல் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். ஆனால் இந்த தூக்கம் குறையும் பட்சத்தில் பலவித பிரச்சனைகள் ஏற்படலாம். கவனம் சிதறுதல், ஞாபக மறதி, உடல் சோர்வு இது மட்டுமல்லாமல் நீண்ட காலத்தில் பாதிப்பு தரக்கூடிய உடல்நிலை கோளாறுகளும் ஏற்படலாம்.

ஆரோக்கியமான மனிதர் கண்டிப்பாக குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அவர்களின் வயது மற்றும் செய்யும் வேலைகளின் அடிப்படையில் இது மாறுபடலாம். எது எப்படி இருந்தாலும் சரியான தூக்கமின்மையால் மன அழுத்தம், உடல் நலக் கோளாறுகள் ஆகியவை ஏற்படலாம். மேலும் உடலளவிலும் மனதளவிலும் பெரிய பாதிப்புகளும் இதனால் ஏற்படக்கூடும். சரியாக தூங்காமல் இருப்பதால் ஏற்படும் ஐந்து முக்கிய பாதிப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.

டிமான்டியா:

நீங்கள் தூங்குவதற்கு ஏற்ப உங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மாறுபடும். குறைந்த அளவில் தூங்கும் போது பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன இதில் முக்கியமான ஒன்று டிமான்டியா எனப்படும் நோய். சரியான தூக்கமின்மையால் தவிக்கும் 50 அல்லது 60 வயது உடைய நபர்களை இந்த நோய் தாக்குகிறது. இதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கவில்லை எனினும் மறதி மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. எனவே வீட்டில் உள்ள முதியவர்கள் சரியாக தூங்காமல் இருந்தாலோ இந்த டிமான்டியா நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தாலோ அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் சரியான சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.

Also Read : அடிக்கடி முதுகு வலி ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான அறிகுறியா..?

மன அழுத்தம்:

அமெரிக்காவின் ஜான் ஹாக்கிங் பல்கலைக்கழகத்தில் உறக்கத்திற்கும் மன அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி ஒரு குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது அதில் இன்சோம்னியா பாதிக்கப்பட்ட நபர்கள் நன்றாக உறங்கும் நபர்களை விட 10 மடங்கு அதிக அளவில் மன அழுத்தத்தை உணர்வதாக தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி குழுவில் ஒருவரான மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான “பேட்ரிக் ஹெச் பினான்” என்பவரிடம் இதை பற்றி பேசிய போது, “சரியான தூக்கமின்மை மனதளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் இதனால் ஏற்படும் மன அழுத்தம் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். இது மாத கணக்கிலோ அல்லது வருட கணக்கில் கூட தொடர்ந்து வரலாம். மேலும் சிலருக்கு மன அழுத்தம் இருப்பதாலேயே கூட சரியான அளவில் தூங்க முடியவில்லை. எனவே சரியான தூக்கமின்மையால் மன அழுத்தம் ஏற்படுகிறதா அல்லது மன அழுத்தத்தினால் சரியாக தூங்க முடியவில்லையா என்பதை கண்டறிந்து அதன் மூல காரணத்தை சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read : சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

வளர்ச்சிதை மற்றும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு:

சரியான தூக்கம் இன்மையால் உடலில் ஹார்மோன் சுரப்பது பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சரியான அளவில் நடைபெறாமல் உடல் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு உதவி செய்யும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதால் தசைகள் வளர்வதிலும், சேதமடைந்த செல்களை புதுப்பிப்பதிலும் மேலும் சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும் பல பிரச்சனைகளை இது உண்டாக்குகிறது. மேலும் உடலின் கடிகாரம் போன்று செயல்படும் பிட்யூட்டரி சுரப்பியும் சரியான அளவில் சுரக்காமல் போகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்:

போதுமான தூக்கம் இல்லையெனில் அவை நேரடியாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்க கூடும். உங்கள் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதும் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதும் நீங்கள் தூங்கும் நேரத்திலேயே உங்கள் உடலானது செய்து முடிக்கிறது. எனவே நீங்கள் சரியாக தூங்காத போது இந்த பாதிப்புகள் முழுமையாக சரி செய்யப்படாமல் நாளடைவில் இவை பெரிதாகி உங்கள் உடல் நலத்தை நிரந்தரமாக பாதிக்கக்கூடும். எனவே உங்களால் சரியாக தூங்க முடியவில்லை எனில், தூங்கும் நேரத்திற்கு சில மணி நேரம் முன்பாக உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடல் களைப்பாகி தானாகவே நம் உடல் தூக்கத்திற்கு தயாராகிவிடும்.

Also Read :  கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் தாமதம் ஆகிறது : ஆய்வில் உறுதி..!

சுவாச கோளாறுகள்:

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது உங்களது சுவாசக் குழாய் மற்றும் மூச்சு விடுவது சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் காய்ச்சல், சளி மற்றும் பல சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படலாம் முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. மேலும் நீங்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கும் போது சரியான தூக்கமின்மையால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நீங்கள் மிக எளிதான ஒரு குறியாக மாறிவிடுகிறீர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Health issues, Sleepless