இதற்கு காரணம் நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது மலம் கழிக்கும்போது சிரமம் இருப்பின் உருவாகிறது. இது அனைத்து வயதினருக்கும் பாலின பாகுபாடின்றி ஏற்படுகிறது. மூல நோயின் அறிகுறியாக அரிப்பு, வலி, அசௌகரியம் , குடல் இயக்கம் குறைபாடு மற்றும் இரத்தக்கசிவு போன்றவை இருக்கும். இதற்கு ஆய்வக சோதனைகள் பொதுவாக தேவையில்லை, ஆனால் நோயாளிகள் ப்ராக்டோஸ்கோபி அல்லது சிக்மாய்டோஸ்கோபிக்கு உட்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்படி உங்களுக்கு அதிக தொந்தரவை உண்டாக்கும் மூல நோய் ஏற்பட அன்றாட பழக்கங்களே காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது அதிக எடை தூக்குதல், குறைந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், காரமான மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், உடல் பருமன், நீண்ட நேரம் அமர்ந்தே இருத்தல் , மலம் கழிக்க சிரமப்படுதல் போன்றவையே மூலம் உருவாக காரணமாக அமைகின்றன.
மூலத்தை சரி செய்ய உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி போதுமான நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது, பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவது, பழங்கள், தண்ணீர் போதுமான அளவு குடிப்பது போன்றவை மூல நோயை சரி செய்ய உதவுகின்றன.
இன்றைய உணவு முறையில் நன்கு எண்ணெயில் வறுக்கும் ஸ்பைசி உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது உணவு பழக்கத்தை சீரற்றதாக மாற்றுகிறது. இதனால் செரிமானமும் தோய்வடைகிறது. அடுத்ததாக தண்ணீர் குறைவாக குடிப்பதும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. காஃபின் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் குடல் இயக்க செயல்பாடுகள் தாமதமாகும். இதனால் மூலம் உருவாக காரணமாக அமையும். யாரெல்லாம் தொடர்ச்சியாக மலச்சிக்கல் மற்றும் மலம் கழிப்பதில் சிரமப்படுகிறார்களோ அவர்களுக்கு மூலம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Also Read : உங்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருதா..? கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கலாம்... செக் பண்ணுங்க..!
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் :
நம் தினசரி உணவு சீரான ஊட்டச்சத்து கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் ஆகியவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதோடு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
மூலத்திற்கான சிகிச்சையில் இருக்கும்போது சாப்பிட வேண்டியவை :
டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ள ஆயுர்வேத நிபுணர் விகாஸ் சாவ்லா கூறியிருப்பதில் “ மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பருப்பு வகைகளை சாப்பிடுவது சிறந்தது. இது எளிதாக செரிமானமடையும். அதோடு வயிறு கோளாறு, எரிச்சல், அழற்சி போன்றவற்றிலிருந்து நிவாரணமளிக்கிறது. முழு தானியங்களான அரிசி, சோளம், ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவை மூல நோய் சிகிச்சையின்போது தவிர்க்கக்கூடாத உணவுகளாகும்.
ஏனெனில் அவை உங்கள் செரிமானத்தை மிக எளிமையாக்கும். அதோடு ஒட்டுமொத்த வயிறு செயல்பாட்டையும் எளிதாக்கும். மூல நோயிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தால் எண்ணெய் உணவுகளை தவிர்க்காதவரை அது சாத்தியமில்லை. புரக்கோலி, சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட் மற்றும் முள்ளங்கி ஆகியவை அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளாகும் “ என கூறியுள்ளார்.
மூல நோய்க்கான சிகிச்சை :
”மூல நோயை சரி செய்ய பெரும்பாலானோர் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கின்றனர். ஆனால் இதற்கு வீட்டு வைத்தியங்கள் ஒருபோதும் தீர்வாகாது. அவை ஒருவேளை தற்காலிக நிவாரணம் அளிக்கலாம். எனவே மூலத்திற்கு சரியான சிகிச்சை முறை அவசியம்.
இதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படும். லேசர் மூலம் செய்யப்படும் இந்த முறையில் ஒரே நாளில் உங்கள் மூலப் பிரச்சனைக்கு தீர்வு கிஐக்கும். இதற்கு 15 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என சொல்லப்படுகிறது. லேசர் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை முடிந்த பின் அப்போதே நிவாரணம் பெற்று வீட்டிற்கு செல்லலாம்” என்கிறார் சஜீத் நாயர் ( பொதுநல அறுவை சிகிச்சை நிபுணர்).
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Constipation, Piles, Stomach Bloating