• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மூட்டு விறைப்புத்தன்மை கொண்டவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன..?

மூட்டு விறைப்புத்தன்மை கொண்டவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன..?

மூட்டு விறைப்புத்தன்மை

மூட்டு விறைப்புத்தன்மை

குளிர்காலத்தில் மூட்டுகள் நெகிழ்வு தன்மையை இழந்து, வலி அதிகரித்து விறைப்பாகக் காணப்படும். மூட்டுகளில் பாதிப்பு இல்லாதவர்களுக்குக் கூட, சில நேரங்களில் குளிர் காலத்தில் மட்டும் மூட்டு வலி, வீக்கம் மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

  • Share this:
எலும்பு மற்றும் மூட்டுகளில் பாதிப்பு உள்ளவர்கள், அல்லது எலும்பு மற்றும் மூட்டு நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்காலம் கடினமானதாகவே இருக்கும். குளிர்காலத்தில் மூட்டுகள் நெகிழ்வு தன்மையை இழந்து, வலி அதிகரித்து விறைப்பாகக் காணப்படும். மூட்டுகளில் பாதிப்பு இல்லாதவர்களுக்குக் கூட, சில நேரங்களில் குளிர் காலத்தில் மட்டும் மூட்டு வலி, வீக்கம் மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மிதமான உடற்பயிற்சி மற்றும் மூட்டுகளில் மசாஜ் செய்வது ஒரு அளவுக்கு உதவியாக இருந்தாலும் நீங்கள் சாப்பிடும் உணவுகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.

உணவுக்கும் மூட்டில் ஏற்படும் விறைப்பு தன்மைக்கும், வலிக்கும் உள்ள தொடர்பு என்ன?

மூட்டு பிரச்சினைகளுக்கு ஆர்த்தரைட்டிஸ் போன்ற நோய்கள் காரணமாக இருக்கலாம் அல்லது காயங்களாலும் மூட்டு வலி ஏற்படலாம். சில உணவுகள் தசைகளை தளர்வடையச் செய்வதை தடுத்து, மூட்டு வலி மற்றும் இறுக்கத்தை அதிகப்படுத்தும். எதுவாக இருந்தாலும் குளிர் காலத்தில் மூட்டு வலி, வீக்கம் மற்றும் அழற்சி ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க, இந்த 5 உணவுகளை நீங்கள் குறைவாக உண்ண வேண்டும்.

உப்பை குறைவாக உண்ண வேண்டும் :

ஆர்த்ரைடிஸ் பவுண்டேசன் கூற்று படி உணவில் உப்பை குறைவாகவே உண்ண வேண்டும். குறைவான உப்பு, உடலில் இருக்கும் கால்சியம் சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அதிக உப்பு சாப்பிட்டால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, துளைகள் ஏற்பட்டு, ஆட்டோ-இம்யூன் குறைபாடான ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு உடையக்கூடிய அபாயங்கள் ஏற்படும்.

அது மட்டுமின்றி, அதிக உப்பு சாப்பிட்டால் உடலில் உள்ள திசுக்களில் அதிகப்படியான நீர் தேங்கும் அபாயம் இருக்கின்றது. இவை அனைத்துமே மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், மூட்டுகளில் விறைப்புத் தன்மையை உண்டாக்கும். எனவே உணவில் உப்பை குறைந்த அளவில் உண்ண வேண்டும். அது மட்டுமின்றி, அதிக உப்பு உள்ள பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.



சர்க்கரை மற்றும் இனிப்புப் பொருட்களை உண்பதை தவிர்க்கவும் :

உங்கள் மூட்டு பாதிப்புகள் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றால் ஏற்படும் போது, நீங்கள் பல உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பேக்கரி அயிட்டங்கள், இனிப்புகள், கேக்குகள், பாக்கெட்டுகளில் வரும் இனிப்பு உணவுகள், பானங்கள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதிகமான இனிப்புகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகளை தீவிரப்படுத்தும்.

குளிர்காலத்திற்கு ஏற்ப உங்கள் வாழ்க்கைமுறை பழக்கங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

சிவப்பு இறைச்சி உண்பதை குறைக்க வேண்டும் :

மட்டன் ஆகியவை சிவப்பு இறைச்சியாகக் கருதப்படுகிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருந்தாலும், அதிக அளவில் சாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளன. இந்த கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மேலும் இது நேரடியாக மூட்டுகளின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வலியை தீவிரமாக்கும்.



பசையம் நிறைந்திருக்கும் உணவுகள் :

க்ளூட்டன் என்பது பார்லி, கோதுமை, போன்ற தானியங்களில் அதிகம் காணப்படும். இது, ஒரு சிலருக்கு உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம், பாதிப்பு கொண்டவர்கள் குளிர்காலத்தில் முற்றிலுமாக க்ளூட்டன் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மது அருந்தக்கூடாது :

மூட்டு நோய்களால் அவதிப்படுபவர்கள் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மது அருந்துவது ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை அதிகப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. எனவே மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதனை அறவே தவிர்த்து விடுவது நல்லது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: