• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பகப் புற்றுநோய் : ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பகப் புற்றுநோய் : ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பகப் புற்றுநோய்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பகப் புற்றுநோய்

பெரும்பாலான நேரங்களில், புதிய தாய்மார்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தையை பராமரிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும்.

  • Share this:
கர்ப்ப காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு, ஒரு பெண்ணின் உடல் குறிப்பிடத்தக்க உடலியல் மாற்றங்கள் மற்றும் உணர்ச்சி எழுச்சிக்கு உட்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் கருப்பைக்குள் வளரும் கருவுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதற்காக சில உடலியல் மாற்றங்களை அனுபவிக்கின்றனர்.

கருவுற்றிருக்கும் காலம் முழுவதும் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்ற இறக்கம் வேகமாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் நாளமில்லா அமைப்பில் தீவிர மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் ஹைபோதாலமிக் ஆக்ஸிஸை தடுக்கிறது. அதன் விளைவாக, மாதாந்திர மாதவிடாய் சுழற்சியை அடைகிறார்கள்.

பெண்கள் குழந்தையைப் பெற்ற பிறகு, பல புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். தூக்கமில்லாத இரவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் தொடங்கி பல புதிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையே மாறிவிடும். இதற்கிடையில் தங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான புதிய தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உணர்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் காலம் பெரும்பாலும் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் இடையிலான பிணைப்பு நேரமாகக் கருதப்படுகிறது, அதேசமயம் இந்த நேரத்தில், புதிய தாய்மார்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள்.

பெரும்பாலான நேரங்களில், புதிய தாய்மார்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தையை பராமரிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும். ஏனெனில் பல பெண்கள் குழந்தை பிறப்புக்குப் பின் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.



பெரும்பாலும் இது ஆரம்ப நிலையில் கண்டறியப்படாமல் அலட்சியம் காட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது புதிதாகப் பிறந்த தாய்மார்கள், பால் குழாய்களில் பால் கட்டிக்கொள்வதாக நினைத்து இந்தக் கட்டிகளைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் இவை மார்பக புற்றுநோயின் தீவிர எச்சரிக்கை அறிகுறிகளாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகங்களில் பால் கட்டிகள் ஏற்படுவது பொதுவானது. அதேசமயம் இந்த கட்டிகள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் மிகவும் ஒத்ததாக இருக்கும்.

மார்பகப் புற்றுநோயானது இந்தியப் பெண்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகக் கருதப்படுகிறது. இது பெண் புற்றுநோயாளிகளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14 சதவிகிதம் ஆகும். மார்பக புற்றுநோய் புள்ளிவிவரங்களின் சமீபத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும், இந்தியாவில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதைக் கண்டறிவதாக கூறப்படுகிறது.

Child Health : கொரோனாவிற்கு பிறகு குழந்தைகளின் உணவு பழக்கம் முற்றிலுமாக மாறியுள்ளது -அதிர்ச்சி தகவல்

அரம்ப நிலையிலேயே எப்படி கண்டறிவது..? அறிகுறிகள் என்ன..?

முலையழற்சி - முலையழற்சி என்பது தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் மிகவும் பொதுவான தொற்று ஆகும். இது மார்பக திசுக்களின் வீக்கம் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பால் குழாய் அடைப்பு அல்லது பாக்டீரியாக்கள் மார்பகத்திற்குள் நுழைகின்றன. இது பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் முதல் மூன்று மாதங்களுக்குள் நிகழ்கிறது மற்றும் முலையழற்சியின் சில முக்கிய அறிகுறிகள் - மார்பக மென்மை, வீக்கம், வலி மற்றும் காய்ச்சல்.

வழக்கமான சோதனைகள் - தாய்மை என்பது நிறைய மாற்றங்கள் மற்றும் சவால்களை உள்ளடக்கியது. ஆனால் அதேசமயம் நீங்கள் உங்கள் உடலில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய மாற்றத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். ஏதேனும் கடினமான வலி, கணமான உணர்வை அனுபவித்தால் உடனே மருத்துவரை அனுகவும். கட்டிகள் வலியற்றதாக இல்லாவிட்டாலும், மருத்துவரை பார்ப்பது அவசியம். உடல் வெளியிடும் எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்வது எப்போதும் அவசியம்.



Invasive Ductal Carcinoma (IDC) - IDC என்பது ஒரு வகை புற்றுநோயாகும். இது வளர்வதற்கு பால் குழாயில் வளரும் மற்றும் நார்ச்சத்து அல்லது கொழுப்பு திசுக்களை ஊடுருவும் கருவியாக பயன்படுத்துகிறது. IDC மார்பக புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமாக அறியப்படுகிறது மற்றும் அனைத்து மார்பக புற்றுநோய் கண்டறிதல்களில் 80% இந்த அறிகுறியே உள்ளது. IDCக்கான சில பொதுவான அறிகுறிகளில் மார்பகத்தில் சொறி அல்லது சிவத்தல், மார்பகத்தில் வீக்கம், மார்பகத்தில் கூர்மையான வலி போன்றவையாகும். புற்றுநோயின் இந்த வடிவத்தில் ஆரம்பகால நோயறிதல் எளிதில் குணப்படுத்தக்கூடியது.

3% குழந்தைகளை பாதிக்கும் Obstructive Sleep Apnea.. எதனால் ஏற்படுகிறது? எப்படி சிகிச்சை அளிக்கலாம் ?

மார்பக வீக்கம் - தாய்ப்பால் கொடுக்கும் முதல் சில மாதங்களில் அதிகப்படியான பால் சுரப்பது பொதுவான ஒன்று. ஆனால், குழந்தைக்கு சரியான வேளையில் பால் கொடுத்து வந்தால், உடல் தேவைக்கேற்ப பாலை சுரக்கும். பாலும் கட்டாது, வலி இருக்காது. இவற்றை சரியாக செய்தும், காரணமே இல்லாமல் தாங்கமுடியாத வலியை மார்பகங்களில் உணர்கிறீர்கள் அல்லது வீக்கமாக உணர்கிறீர்கள் எனில் மருத்துவரை அனுகவும்.

எந்த அசாதாரண வெளியேற்றத்தையும் கவனிக்காதீர்கள் - தாய்ப்பால் கொடுக்கும் போது நீர் அல்லது பால் போன்ற வெளியேற்றம் பொதுவாகவே இருக்கும். இருப்பினும் நீண்ட நேரம் அல்லது எப்போதும் அதிகப்படியான பால் வெளியேற்றம் , நீர் கசிவு இருப்பது எச்சரிக்கையின் அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் தாமதம் உயிருக்கு ஆபத்தானது.



தாய்மை என்பது புதிய தாய்மார்களுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும். அதேசமயம் பிறந்த குழந்தையுடன் பிணைப்பை உருவாக்க மிக முக்கியமான நேரமும் இதுதான். குழந்தையை வளர்ப்பதில் மூழ்குவது முற்றிலும் இயல்பானது என்றாலும், உங்கள் உடலைப் புரிந்துகொள்வதும், ஆபத்தான விஷயங்களை தவிர்ப்பதற்கான வழியாகவும் இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: