உடல் எடை சீக்கிரமே குறைய வேண்டுமா..? இரவு உணவில் இந்த மாற்றங்களை செய்து பாருங்கள்..!

உடல் எடை சீக்கிரமே குறைய வேண்டுமா..? இரவு உணவில் இந்த மாற்றங்களை செய்து பாருங்கள்..!

மாதிரி படம்

அவ்வாறு டையட் பின்பற்றும் பெரும்பாலானோர் இரவு 7 மணிக்கு பிறகு அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
உடல் எடையை குறைக்க திட்டமிடுவோர் உடனடியாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதையே பெரும்பாலானோர் செய்தும் வருகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால், எடையை குறைக்க திட்டமிடுகிறவர்கள் தங்கள் உணவு பழக்க வழக்கங்களிலும் சில கட்டுபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு, உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் எல்லாமே பயனற்றதாகிவிடும். குறிப்பாக, காலை உணவை நாம் தவிர்க்க முடியாது. ஒருவர் காலை உணவை சரிவர உட்கொள்ளவில்லையென்றால் அவர் அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு உணவு சாப்பிடுவதில் சில விஷயங்களை பின்பற்றினால், நிச்சயமாக மாற்றத்தை காணலாம்.

டின்னர் (dinner) நேரத்தை மாற்றுங்கள்

எடையை குறைக்க நினைப்பவர்கள் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக உணவருந்த வேண்டும். அவ்வாறு டையட் பின்பற்றும் பெரும்பாலானோர் இரவு 7 மணிக்கு பிறகு அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் 3 அல்லது 4 மணி நேரங்களுக்கு முன்னதாக உணவருந்தும் ஒருவர் கண்டிப்பாக அதன்பிறகு நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொள்ளவே கூடாது.மூளையை திருப்திபடுத்துங்கள் (Trick your Brain)

சிலர் சாப்பிடும்போது கவனம் சாப்பாட்டில் இல்லாமல் வேறு ஏதேனும் ஒன்றை நினைத்துக்கொண்டு உணவருந்துவார்கள். அப்போது வயிற்றுடனான தொடர்பை மூளை இழந்திருக்கும். அதனால், தம்மை அறியாமலேயே கூடுதலாக உணவருந்துவார்கள். அதற்கு காரணம், வயிற்றுடனான தொடர்பை மூளை இழந்து, அவர்களை சாப்பிடுவதற்கு மேலும் தூண்டும். அத்தகைய சூழலில் பெரிய தட்டுகளில் உணவருந்தாமல், சிறிய தட்டில் நிரம்ப உணவிட்டு உணவருந்துங்கள். அப்போது, உங்கள் மூளை நீங்கள் தேவையான அளவு உணவருந்திவிட்டீர்கள் என உணர்த்தும். இதனால், அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.

தினமும் இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதுதான் உங்கள் பழக்கமா..? இதை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஆபத்து உங்களுக்குத்தான்..!

ஜீரணிக்க அதிகநேரமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

டையட் (Diet) பின்பற்றுவோர் ஜீரணிக்க (digest) அதிகநேரமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகள் மெதுவாக ஜீரணமாகி, சர்க்கரையின் அளவையும் மெதுவாக ரத்தநாளங்களில் விடும். அதனால், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், விரைவாக பசி எடுக்காது. அதிகப்படியான புரத உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகள் ஜீரமடைவதற்கு நீண்ட நேரமாகும். அதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, பயறு வகைகள் (grains) மற்றும் பாலாடைக்கட்டி (cheese)ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் :

வேலைக்கு சென்று திரும்பிய களைப்பில் பெரும்பாலானோர் இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளை பார்த்தவாறு நீண்டநேரம் உணவருந்துவார்கள். அப்போது, தங்களை அறியாமலேயே தேவைக்கும் அதிகமான கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ளவார்கள். இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உணவில் மட்டுமே கவனம் செலுத்தி உணவருந்த வேண்டும். தேவைப்பட்டால், மியூசிக் கேட்கலாம்.பசித்தால் முன்கூட்டியே உணவருந்துங்கள் :

மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கும்போது, உங்களுக்கு பசித்தால் அப்போது நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். அதற்காக, நொறுக்குத்தீனிகளை அதிகளவு வாங்கி உட்கொள்ளக்கூடாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேவையான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், இரவு உணவையும் குறிப்பிட்ட கலோரிக்குள் இருக்குமாறு உட்கொள்ள வேண்டும்.

இந்த டையட் முறையாக பின்பற்றி வந்தால், நிச்சயமாக உங்களின் எடையை குறைக்கும் முயற்சியில் நிச்சயம் மாற்றம் தெரியும். மேலும், உடற்பயிற்சியையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
Published by:Sivaranjani E
First published: