Home /News /lifestyle /

கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதையெல்லாம் சொன்னா நம்பாதீங்க : கட்டுக்கதைகளும்... உண்மைகள்

கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதையெல்லாம் சொன்னா நம்பாதீங்க : கட்டுக்கதைகளும்... உண்மைகள்

eye

eye

Eye Health | நம்முடைய கண்களை கவனித்து கொள்வது, கண் பாதுகாப்பு மற்றும் கண் பாதிப்பு போன்றவை பற்றி பல கட்டுக்கதைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. கண் பராமரிப்பு தொடர்பான தவறான நம்பிக்கைகளை உடைக்க கூடிய சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்...

கண், காது, மூக்கு, வாய், மெய் உள்ளிட்ட நமது ஐம்புலன்களில் மக்கள் இழக்க விரும்பாத முக்கியமான ஒன்று பார்க்கும் திறன். நமது பார்வை மிகவும் விலைமதிப்பற்றதாக இருப்பதால் கண் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் பார்க்கும் திறன். பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர்கள் அல்லது ஏதேனும் நோய் அல்லது விபத்தில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் முயற்சியில் கடுமையாக போராடுவதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில் நம்முடைய கண்களை கவனித்து கொள்வது, கண் பாதுகாப்பு மற்றும் கண் பாதிப்பு போன்றவை பற்றி பல கட்டுக்கதைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. கண் பராமரிப்பு தொடர்பான தவறான நம்பிக்கைகளை உடைக்க கூடிய சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்...

1. கண் பயிற்சிகள் கண்ணாடி அணிவதற்கான தேவையை நீக்கும் அல்லது தாமதமாக்கும்:

இல்லை, கண் பயிற்சிகள் நம் பார்வை திறனை மேம்படுத்தவோ, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவோ அல்லது கண்ணாடி அணிவதற்கான தேவைகளை தாமதப்படுத்தவோ செய்யாது. ஏனென்றால் நம் பார்வை திறன் என்பது கண் இமைகளின் வடிவம் மற்றும் கண் திசுக்களின் ஆரோக்கியம் போன்றவற்றை பொறுத்தது. கண் பயிற்சிகள் இவற்றில் எதையும் மாற்ற உதவாது. கண் பயிற்சிகள் கண் அழுத்தத்தை குறைக்க உதவுமே தவிர பலர் சொல்வது போல கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாக இல்லை. ஏனென்றால் கண் பயிற்சிகள் கண் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை.



2. மங்கலான வெளிச்சத்தில் படிப்பது பார்வையை மோசமாக்கும்:

மங்கலான வெளிச்சம் கண்பார்வை அல்லது கண் ஆரோக்கியத்தை பாதிக்காது. இருப்பினும் இந்த பழக்கம் கண்களை விரைவாக சோர்வடைய செய்யும். எனவே உங்கள் ரீடிங் லேம்ப்பின் ஒளி நேரடியாக புத்தகத்தில் படும்படி வைக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உடல் எடை குறையவில்லையா..? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

3. கண்களின் ஆரோக்கியத்திற்கு கேரட் சிறந்த உணவு:

வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கேரட் உண்மையில் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் கேரட் மட்டும் தான் கண்களின் ஆரோக்கியத்திற்கான உணவு என்று பலரும் கூறுவார்கள். வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட் வைட்டமின்களை கொண்ட ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் பார்வையை மேம்படுத்துவதற்கு மிகவும் சிறந்தது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவ கூடும். இருப்பினும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் கூட கிட்டப்பார்வை மற்றும் தூரபார்வை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவாது.



4. கான்டாக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடி அணிபவர்கள் எப்போதும் போட்டு கொண்டே இருக்க தேவை இல்லை :

கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ்கள் அணிய வேண்டும் என்று மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்பட்டால், எப்போதும் நீங்கள் அவற்றை அணிவது அவசியம். சிலர் எப்போதும் இவற்றை அணிய தேவை இல்லை, கண்ணாடிக்கு ஓய்வு கொடுப்பது உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது போல என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையில்லை. உண்மையில் கண்ணாடிகளை அணியாமல் விடுவது பார்வையை மோசமாக்குவது அல்லது கண் நோயை ஏற்படுத்துவது போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் கண்களை எளிதில் சோர்வடைய செய்யும்.

கண்களை சுற்றிலும் எரிச்சல் இருக்கிறதா.? அடிக்கடி வறண்டு போகிறதா.? AC காரணமாக இருக்கலாம்..!

5. நாள் முழுவதும் கம்பியூட்டர் ஸ்கிரீனை பார்ப்பது கண்களுக்குக் கேடு:

கம்பியூட்டர் பயன்படுத்துவதால் உங்கள் கண் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படாது. இருப்பினும், நாள் முழுவதும் ஸ்கிரீனை பார்ப்பது சோர்வுற்ற கண்களுக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்பவர்கள் இயல்பாக கண் இமைக்க மாட்டார்கள். இதனால் கண்கள் வறண்டு போகும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க உதவும் 20 -20 -20 விதியை பின்பற்றலாம். அடிக்கடி உங்கள் கண்களை சிமிட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Eye care, Myths

அடுத்த செய்தி