ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பகாலத்தில் காலையில் ஏற்படும் குமட்டல் , பிரட்டல்களை சமாளிக்க இந்த எளிய முறைகளை பின்பற்றுங்கள்..!

கர்ப்பகாலத்தில் காலையில் ஏற்படும் குமட்டல் , பிரட்டல்களை சமாளிக்க இந்த எளிய முறைகளை பின்பற்றுங்கள்..!

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

கர்ப்பகாலத்தில் ஏற்படும் இந்த மசக்கை, குழந்தை பிறப்பு வரை நீடிக்காது என்றாலும், இதனை எதிர்கொள்வது சில நேரங்களில் மிகவும் கடினமாகத் தோன்றும்

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :

மார்னிங் சிக்னெஸ் எனப்படும் மசக்கை கர்ப்பகாலத்தில் பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது. இதற்கான தீர்வுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான தருணங்களில் ஒன்று. அத்தனை சந்தோஷம் மற்றும் புதிய மாற்றங்கள் ஆகியவை கருவுறும் பெண்களின் வாழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில், மார்னிங் சிக்னெஸ் எனப்படும் மசக்கை பெரும்பாலான கர்ப்பிணிகளை பாடாய் படுத்துகிறது.

மார்னிங் சிக்னெஸ் இதன் பெயருக்கு ஏற்ப, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்த உடன் சோர்வு, வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற அசாதாரண உணர்வுகளை எதிர்கொள்வார்கள். சிலருக்கு முதல் டிரைமஸ்டர் எனப்படும் கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்கள் வரை இருக்கும். ஆனால், சிலருக்கு. குழந்தை பிறக்கும் வரை மசக்கை தொந்தரவு இருக்கும்.

hCG எனப்படும் கர்ப்பகால ஹார்மோன் உடலில் சுரப்பதற்கு எதிர்வினையாக உடலின் வெளிப்பாடு தான் இந்த தலைசுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு. குறிப்பாக, இந்த அறிகுறிகள் அனைத்தும், கர்பத்தின் அறிகுறிகள் ஆகும். கர்ப்பிணிகள் ஒரு சில வாசனைக்கு ஒவ்வாமை இருக்கும், வாந்தி வருவது போன்ற உணர்வு தோன்றும். Gag-reflex வளர்ச்சியின் காரணமாகவும் இது ஏற்படலாம்.

உங்கள் காலை நேரம் மசக்கையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, சில வழிமுறைகள் உள்ளன. இவை மார்னிங் சிக்னெஸ் அறிகுறிகளை குறைத்து, உங்கள் காலை நேரத்தை தொந்தரவு இல்லாததாக மாற்றும்.

தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள் :

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கர்ப்பிணி பெண்களுக்கு, உடலுக்கு போதிய நீர் கிடைக்கவில்லை என்றால், வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றை தூண்டி விடும். உடலில் நீர் வற்றியிருப்பது மசக்கையை மோசமாக்கும்.

எனவே, ஹைட்ரேஷன் அளவு குறையாமல் இருக்க மூலிகை, மென்மையாக்கும் பானங்கள், தேநீர் மற்றும் பல பானங்களை குடிப்பது காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் மற்றும் சோர்வை போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும். எனவே, போதிய அளவு தண்ணீர் குடிப்பதை மறக்கக் கூடாது.

தாய்ப்பால் கட்டிக்கொண்டால் உடனே சரி செய்யும் பாட்டி வைத்தியங்கள்..!

ஒரு நாளைக்கு 6 சிறிய அளவு உணவுகள் :

கர்ப்பிணிகள் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வழக்கமாக காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று சாப்பிடாமல், உண்ணும் அளவை ஆறு பகுதியாகப் பிரித்து, அவ்வப்போது சாப்பிடலாம்.

உணவை 6 சிறிய பகுதிகளாக பிரித்து உண்பது செரிமானம் ஆவதை எளிதாக்கும். அது மட்டுமின்றி, வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வைத் தடுக்கும். மேலும், அதிகமாக உண்ணும் போது, வயிறு உப்பசம், வாந்தி ஏற்படுவதையும் தடுக்கும்.

குறிப்பு: இரவு உறங்கும் முன்பு அல்லது காலையில் எழுந்தவுடன் புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். உணவு செரிமானம் ஆவதை குறைக்கும் என்சைம் வெளியேற்றத்தை புரதம் தடுக்கிறது. எனவே, குமட்டல், வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் ஆகியவற்றைத் தடுக்கிறது.

எலுமிச்சை மற்றும் புதினா நறுமணம் : 

கர்ப்பகாலத்தில் ஒரு சில வாசனைகள் பெண்களுக்கு குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். சில நறுமணங்களை நுகரும் போது, மிகவும் புத்துணர்வூட்டும் உணர்வு தோன்றும். குறிப்பாக, சிட்ரஸ் வகை பழங்களை நுகரும் போது, குமட்டல் உணர்வு குறையும். அது மட்டுமின்றி, வாயுத்தொல்லை, வாந்தி உணர்வு, செரிமான அசௌகரியமான ஆகியவற்றையும் இந்த நறுமணங்களை நுகர்வதால் குறைக்க முடியும்.

எலுமிச்சை பானம் அல்லது எலுமிச்சை சேர்க்கப்பட்ட பானங்கள் மார்னிங் சிக்னெஸ் அறிகுறிகளில் இருந்து விடுவிக்கும். எலுமிச்சையைப் போலவே, புத்துணர்ச்சியூட்டும் புதினாவும்! ஒன்றிரண்டு புதினா இலைகளை மேல்லுவதும் அல்லது புதினா வாசனையை நுகர்வதும் பெரிதும் உதவியாக இருக்கும்.

உங்கள் கைப்பையில், எப்போதும் எலுமிச்சை மற்றும் / அல்லது புதினாவை வைத்திருப்பது உதவும்.

சர்க்கரை அல்லது இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைக்கவும் : 

கர்ப்பகாலத்தில் அவ்வபோது பசி எடுப்பது போன்ற உணர்வு தோன்றும். சில குறிப்பிட்ட சுவையை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற கிரேவிங்க்ஸ் ஏற்படும். சிலர் புளிப்பான உணவை விரும்புவார்கள். சிலர் காரமான உணவுகளை விரும்புவர்கள். நீங்கள் இனிப்பை விரும்பினால், உங்களின் உணவுப்பழக்கத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிகளவில் இனிப்புப் பண்டங்களை உண்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மேலும் இது மார்னிங் சிக்னெஸ் அறிகுறிகளை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல், கட்டுப்பாடில்லாமல் இனிப்பை உண்பது, கலோரிக்களையும் அதிகரித்து, எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப்படங்களை குறைவான அளவில் உண்ண வேண்டும்.

ஆனால், இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கிரேவிங்க்ஸ் இருக்கும் போது, ஆரோக்கியமான இனிப்புப் பண்டங்களை சாப்பிடலாம்.

ப்ரீநேட்டல் யோகா :

ப்ரீநேட்டல் யோகா என்பது பிரவசத்துக்கு முந்தைய காலத்தில் செய்யக்கூடிய யோகா பயிற்சி.

தினசரி யோகா பயிற்சி, பிரசவத்தை எளிதாக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைப்பேறை மட்டும் சுலபமாக்காமல், மார்னிங் சிக்னெஸ் தொந்தரவையும் குறைக்கிறது.

கர்ப்பிணிகளுக்காகவே ப்ரீநேட்டல் யோகா எனப்படும் பிரசவத்துக்கு முந்தைய யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளன. இந்த யோகா பயிற்சியை தினசரி செய்யும் போது, உங்கள் உடல் ஸ்ட்ரெட்ச் ஆகி, உடலின் அனைத்து பாகங்களுக்கும், உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. அதிக ஆற்றல் பெற்று, புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு யோகா உதவுகிறது. உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் யோகா உதவுகிறது. ப்ரீநேட்டல் யோகா, மனதை அமைதியாக்குகிறது. அசௌகரியமான உணர்வு, சோர்வு ஆகியவற்றை நீக்க, தினசரி குறைந்த பட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை யோகா செய்வது பலனளிக்கும்.

சரியான நேரத்தில் கைகொடுக்கும் வைட்டமின்கள் :

கர்ப்பகாலத்தில் கூடுதலாக ஊட்டச்சத்து தேவைப்படும். ஆரோக்கியமான உணவுகளில் சில நேரங்களில் முழு ஊட்டச்சத்து கிடைக்காது. இந்த நேரத்தில், உங்களுக்கு கைகொடுப்பது ப்ரீநேட்டல் சப்ளிமென்ட்ஸ். கருவுற்ற காலம் தொடங்கி பிரசவம் வரை, 9 மாதங்களுக்கு வைட்டமின் மற்றும் மினரல்கள் சப்ளிமென்ட்களும் உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து வழங்குகிறது.

வைட்டமின் B6 மார்னிங் சிக்னெஸ் மற்றும் கர்ப்ப கால கிராமப்களை தீர்ப்பதில் பெரிய பங்கை வகிக்கிறது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கிய உதவிக்குறிப்பு :

கர்ப்பகாலத்தில் ஏற்படும் இந்த மசக்கை, குழந்தை பிறப்பு வரை நீடிக்காது என்றாலும், இதனை எதிர்கொள்வது சில நேரங்களில் மிகவும் கடினமாகத் தோன்றும்.

இது தற்காலிகமானது தான். மசக்கையை அதிகரிக்கும் அனைத்து காரணிகளையும் தவிர்த்தால், உங்கள் கர்ப்பகாலம் முழுவதும் மகிழ்ச்சியாக உணரலாம்.

நேர்மறையான விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி, கர்ப்பகாலத்தை ஆரோக்கியமாக மாற்றாலாம். உங்கள் குட்டிக் குழந்தையை ஏந்தும் நாள் நொடியில் வந்துவிடும்!

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Pregnancy Sickness