முதுகு வலி என்பது இன்றைக்கு அனைவரும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் 50 வயதைக் கடந்தால் தான் முதுகு வலி என்பது ஏற்படும். ஆனால் மாறிவரும் உணவு முறைகளால் முதுகுவலி என்பது இளம் தலைமுறையினருக்கும் இப்பிரச்சனை அதிகமாகிவிட்டது. ஆரம்பத்திலேயே இதற்குத் தீர்வு காணவில்லை என்றால் என்றால் வயதாகும் போது இதனால் அதிக பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடும்.
முதுகு வலிக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணம் போன்றவை தற்காலிகமானதாகத் தான் தீர்வு கொடுக்கும். எனவே இந்நேரத்தில் நீங்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், யோகா தான் சிறந்த தீர்வாக இருக்கும். இதோ முதுகு வலி பிரச்சனையைப் போக்குவதற்கு என்னென்ன ஆசனங்களை நீங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
சேதுபந்தாசனா:
பிரிட்ஜ் போஸ் என்றழைக்கப்படும் சேதுபந்தாசனம் முதுகெலும்பு மற்றும் வயிற்றைப் பலப்படுத்துகிறது. மேலும் முதுகெலும்பை வலுப்படுத்தி வலியைப் போக்கவும் உதவியாக உள்ளது.
செய்முறை: முதலில் நீங்கள் படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் மடித்து புட்டத்துக்கு அருகில் வைக்க வேண்டும். கால் மூட்டுகள் வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும். வலது கணுக்காலை வலது கைகளாலும், இடது கணுக்காலை இடது கைகளாலும் பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இடுப்பைத் தூக்கி இரண்டு தோள்களுக்கு இடையே எவ்வளது தூரம் இருக்கிறதோ அதே அளவு தூரம் கால் பாதங்களுக்கு இடையே பாலம் போன்ற போஸில் நிற்க வேண்டும்.
பாலாசனம்:
குழந்தையின் போஸ் அல்லது பாலாசனம் செய்யும் போது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்குவதற்கு உதவியாக உள்ளது. இதோடு முதுகு மற்றும் கழுத்தில் வலியை போக்குவதற்கும் சிறந்த வழியாக உள்ளது.
செய்முறை:
குழந்தை முதன் முதலில் எப்படி உட்காருகிறதோ? இதுப்போன்று செய்யும் ஆசனம் தான் இது. உங்களின் குதிகால் மற்றும் முழங்கால்களில் ஒன்றாக உட்கார்ந்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் முன்னோக்கி குனிந்து, நெற்றியை தரையில் வைத்து, கைகளை முன்னால் நீட்ட வேண்டும். இப்படி நீங்கள் 5 நிமிடங்கள் செய்யும் போது முதுகெலும்பு வலுப்பெறுகிறது.
சுப்த மத்ஸ்யேந்திரசனம்:
முதுகு எலும்பின் இயக்கத்திற்கு உதவும் ஆசனம் தான் சுப்த மத்ஸ்யேந்திரசனம். இந்த ஆசனம் முதுகு மற்றும் தோள்பட்டை தசைகளை உறுதியாக்குகிறது.
செய்முறை: இந்த ஆசனம் செய்முறை முதலில் நீங்கள் படுத்துக்கொண்டு உங்களது கைகளை பக்கவாட்டிலம், முழங்கால்களை நீட்ட வேண்டும். பின்னர் உங்களது முழங்கால்களை நெருக்கமாக வைத்துக்கொண்டு உங்களது கால்களை மெதுவாக இடது பக்கமாக நீட்டவும். இறுதியில் ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ள வேண்டும்.
ஸ்பிங்க்ஸ் போஸ் (சலம்பா புஜங்காசனம்) :
நடு முதுகு வலியைப் போக்கும் ஆசனம் தான் ஸ்பிங்க்ஸ் போஸ் அதாவது சலம்பா புஜங்காசனம். இந்த ஆசனம் செய்யும் போது ஏற்படும் மென்மையான பின் வளைவு மன அழுத்தத்தைப் போக்க உதவுவதோடு முதுகெலும்பைப் பலப்படுத்துகிறது.
நடுத்தர முதுகுவலியைக் குறைக்க மற்றொரு சிறந்த ஆசனம் ஸ்பிங்க்ஸ் போஸ் அல்லது சலம்பா புஜங்காசனம். இந்த மென்மையான பின் வளைவு மன அழுத்தத்தை போக்க உதவுகிறது மற்றும் உங்கள் பிட்டம் மற்றும் முதுகெலும்பை பலப்படுத்துகிறது.
அர்த்த மத்ஸ்யேந்திரசனம்: (அமர்ந்துள்ள முதுகுத்தண்டு முறுக்கு போஸ்)
இந்த ஆசனம் முதுகுவலியைப் போக்க உதவுகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் பாயில் நேராக உட்கார்ந்து உங்களது கால்களை குறுக்கு நிலையில் வைக்க வேண்டும்.
பின்னர் உங்களது இடது கையை உங்களது வலது முழங்காலின் வெளிப்புறத்திலும், வலது கையை உங்கள் முதுகுப்பின்னால் வைத்து முதுகுத்தண்டுக்கு ஆதரவளிக்க வேண்டும். தொடர்ந்து வலது பக்கம் மெதுவாக திரும்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் போது முதுகுவலி பிரச்சனையை நீங்கள் தீர்க்க முடியும். எனவே இனி நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.