உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருப்பது ஒருவருக்கு சிறுநீரக நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் இந்த அபாயங்கள் உங்களிடம் இல்லையென்றாலும் முக்கியமான உறுப்பான கிட்னிகளை கவனித்து கொள்வது எப்போதுமே மிகவும் முக்கியம்.
ஏனென்றால் நம்முடைய கிட்னிகளுக்கு ஓய்வே இல்லை, நம் ரத்தத்தை வடிகட்டுவதில் துவங்கி உடலில் இருந்து கழிவுகளை நீக்குவது வரை அவை 24 மணி நேரமும் வேலை செய்கின்றன. கிட்னிகளின் முக்கிய வேலை நச்சு கலந்த ரத்தத்தை சுத்தப்படுத்துவதும், கழிவுகளை சிறுநீராக மாற்றுவதும் ஆகும். ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 160 கிராம் எடை கொண்டது மற்றும் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. நம் உடலில் இருக்கும் 2 கிட்னிகளும் சேர்ந்து ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 200 லிட்டர் திரவத்தை வடிகட்டுகின்றன. இவை உடலில் உள்ள மற்ற ரசாயனங்களின் அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன.
இந்நிலையில் சிறுநீரக நோய் ஒரு முக்கிய பொது சுகாதார கவலையாக இருக்கிறது. சிறுநீரக நோய் மிகவும் தீவிரமாகும் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகும். துரதிர்ஷ்டவசமாக கண்டறியப்படும் நேரத்தில் ஒருவருக்கு டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். பிரச்சனை தொடங்கும் முன் சிறுநீரக நோயை கண்டுபிடிப்பதே இதற்கு தீர்வு.
இங்கே உங்கள் சிறுநீரகங்களை நன்றாக பராமரிப்பதற்கான சில அற்புத வழிகளை இங்கே பார்க்கலாம்...
உடலை ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்:
நிறைய தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதை எல்லோரும் அறிவோம். இது நம் உடலைஹைட்ரேட்டாக வைத்திருப்பதோடு கிட்னிகள் சரியாக செயல்படவும் உதவும். எனவே தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதைஉறுதி செய்யுங்கள். உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது நம் உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வடிகட்ட பெரிதும் உதவுகிறது.
ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம்:
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நம் உடல் உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் கிடைப்பதை உறுதி செய்கிறது. உங்கள் டயட்டில் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளை சேர்ப்பது கிட்னிகள் உட்பட பல உறுப்புகள் சீராக செயல்பட உதவுகின்றன.
தேவையற்ற அல்லது அதிகம் மருந்து எடுப்பதை தவிர்க்கவும்:
தலைவலி, உடல்வலி அல்லது மூட்டு வீக்கம் உள்ளிட்ட சில சிக்கல்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாகவே மருந்துகளை எடுத்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். மருத்துவரின் அறிவுரையின்றி நீங்களாகவே சுயமருத்துவ முறையில் எடுத்து கொள்ளும் மருந்துகள் பல நாட்கள் பயன்படுத்தும் போது இப்பழக்கம் கிட்னிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கார்போஹைட்ரேட் உணவுகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்
புகைபழக்கத்தை கைவிடுங்கள்:
உங்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் இப்போது முதல் படிப்படியாக கைவிட முயற்சி செய்யுங்கள். புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என தெரிந்தும் அப்பழக்கத்தை நீங்கள் தொடர்வது ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தின் வாய்ப்பை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதை உணருங்கள்.
தவறாமல் உடற்பயிற்சி:
தினசரி ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தவறாமல் செய்யப்படும் உடற்பயிற்சி சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளை வராமல் தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்கிறது. எனவே உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney