இந்தியாவில் தொற்றுநோயால் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாக தகவல்

2016 ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவில் 74, 000 தீர்க்கமுடியாத , குணப்படுத்த முடியாத இறப்புகள் நடந்துள்ளன.

Web Desk | news18
Updated: March 15, 2019, 5:00 PM IST
இந்தியாவில் தொற்றுநோயால் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாக தகவல்
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 5:00 PM IST
நிமோனியா, காசநோய் போன்ற தொற்றுநோய்களால் 46 சதவீதம் இந்தியச் சிறுவர்கள் இறந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தொற்றுநோயால் இந்தியாவில் இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டுதான் அதிகரித்துள்ளதாகவும், அதுவும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்தான் அதிகமாக இறந்துள்ளதாகக் கூறியுள்ளது டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு. இந்த ஆய்வு இந்தியா மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் நாடுகளான சீனா, மெக்ஸிகோ, பிரேஸில் ஆகிய நாடுகளிலும் ஆய்வை நடத்தியுள்ளது. இதன் ஆய்வு அறிக்கையை தி லன்ஸட் ஜர்னலில் (The Luncet Jurnal )2 வெளியிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 74, 000 தீர்க்கமுடியாத , குணப்படுத்த முடியாத இறப்புகள் நடந்துள்ளன. இந்த எண்ணிகையானது வருடாந்திர இறப்பில் பாதி பங்கைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த நோயால் இறக்கக் கூடிய சிறுவர்களின் எண்ணிகையானது வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் ஆண்டு இறப்பைக் கணக்கிடுகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றன.

இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2005 முதல் 2016-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட ஆய்வில், 2.5 லட்சம் சிறுவர்கள் தொற்றுநோயால் இறந்துள்ளனர். இந்த நாடுகள் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் 5 முதல் 14 வயது கொண்ட சிறுவர்களை 40 சதவீதம் கொண்டிருக்கின்றன.

இந்தியாவை மட்டும் எடுத்துக்கொண்டால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட  சிறுவர்களை சீனாவோடு ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. பிரேஸில் மற்றும் மெக்ஸிகோ 10 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டொரண்டோ பல்கலைக் கழக பேராசிரியர் பிரபாட் ஜஹா பேசுகையில், “இதில் பல இறப்புகள் தவிர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இருப்பினும் சரியான மருத்துவம் எடுத்துக்கொள்ளாததாலேயே இறப்புகள் நேர்த்துள்ளன. இறந்த சிறுவர்களின் அறிக்கைகள் மற்றும் தகவல்களை பார்த்ததில், அவை குணப்படுத்தக் கூடியவையாகவே இருந்தன. 5 - 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் இறப்பு என்பது உலகெங்கிலும் காண்பது என்பது அரிதானது. குறைவான மருத்துவச் செலவு, எளிதான மருத்துவ சேவை, சாத்தியமான மருத்துவம் போன்றவை இருந்தால் இந்த இறப்புகளைக் கட்டுப்படுத்தலாம்“ என்று கூறியுள்ளார்.

அதேபோல் தொற்றுநோய்கள் இல்லாமலும் இந்த நாடுகளில் இன்றும்  சிறுவர்களின் இறப்பு அதிகமாகவே உள்ளது எனக் கூறுகிறது. அதாவது சாலை விபத்து, காயங்கள், புற்றுநோய், நரம்பியல் நோய்கள் போன்ற காரணங்களாலும் 5 முதல் 4 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் இறப்பு அதிகமாக உள்ளது. அதுவும் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மற்றும் சீனாவில் சாலை விபத்தால் இறக்கும் சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...