கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய எளிய யோகாசனங்கள்!

கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய எளிய யோகாசனங்கள்!

சௌகரியமான உடை : பொதுவாக கர்ப்பகாலத்தில் தளர்ந்த உடைகளையே அணியச் சொல்வார்கள். இறுக்கமான உடை அசௌகரியத்தை அளிக்கும், வயிற்றில் குழந்தை உலாவ முடியாது என்பார்கள். அதுமட்டுமன்றி வயிற்றின் அழுத்தம் கூடுதலானால் வாயுத்தொல்லையும் அதிகரிக்கும். எனவே தளர்ந்த உடைகளே அணிய வேண்டும்.

கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. ஒருவர் ப்ரக்னன்ட்டாக இருக்கும்போது தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் சில யோகாசனங்கள், தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கிறது.

  • Share this:
'தாய்மை' என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. கர்ப்பம் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவற்றைச் சிக்கலானதாகவும், அச்சப்படும் ஒன்றாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. ஒருவர் ப்ரக்னன்ட்டாக இருக்கும்போது தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த நேரத்தில் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா? என்ற சந்தேகம் பல பெண்களுக்கு உள்ளது.

கர்ப்ப காலத்தில் சில யோகாசனங்கள், தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கிறது. மேலும் டெலிவரி நேரத்தில் கர்பிணிகளை சாந்தமாகவும், மனதிடத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. யோகாவை தாய்மார்கள் சரியாக செய்துவந்தால் தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் உடலும் மனமும் மென்மையாகும்.

ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியம். கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கார்டியோ மற்றும் கஷ்டமான உடற்பயிற்சி முறைகளைத் தவிர்க்கவும். இல்லையென்றால் இது குமட்டலின் நிலையை அதிகரிக்கக்கூடும், மேலும் கருவின் வளர்ச்சியையும் தடுக்கும். உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் அகற்றக்கூடிய ஈஸியான போஸ்களைப் கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டும் என்று இமயமலை சித்தர், கிராண்ட் மாஸ்டர் அக்ஷர் (Akshar) கூறியுள்ளார். கர்ப்ப காலத்தில் உடலை கடுமையாக வளைத்து செய்யப்படும் பயிற்சிகள், குதித்து செய்யும் பயிற்சிகள் அல்லது கை கால்களை நீண்ட நேரம் நீட்டி உடலுக்கு வலியை தரும் பயிற்சிகளை செய்யவே கூடாது. பின்வரும் யோகப்பயிற்சிகள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்தது அதை இப்போது காண்போம்.

பத்த கோணாசனம் (Baddha Konasana):

பத்த கோணாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள்.

Baddha Konasana
பத்த கோணாசனம்


செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும், இரு முழங்கால்களையும் மடக்கி உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும்படி வைக்கவும். கைவிரல்களை ஒன்றாக சேர்த்து, ‘உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இது பத்த கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்நிலையில் 5 முதல் 10 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கூட ஆசனத்தில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம். வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த ஆசன பயிற்சியை செய்யலாம். இந்த யோகப் பயிற்சியை செய்வதால், இடுப்பு எலும்பு நன்கு விரிவடைந்து உடல் பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து இந்த யோகப் பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

குறிப்பு : ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

பீஜ் தியான் / ஆரம்ப் தியான்

நம் கலாச்சாரத்தில், முன்னர் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளே ஒவ்வொரு ஆசனங்களை குறித்தது. காலமாற்றத்தினால் இப்பொழுது பல கர்ப்பிணிகளுக்கு வீட்டு வேலைகள் மிகவும் எளிதாக அமைவதால் அவர்களால் ஒரு சில வேலைகளை செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது. அந்த வகையில் மேற்சொன்ன பீஜ் தியான் / ஆரம்ப் தியான் ஆசனங்களை ஒரு நல்ல யோகா நிபுணரின் ஆலோசனையுடன் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

சுகாசனம் (Sukhasana):

‘சுக’ என்றால் அனுகூலமான துன்பமில்லாத என்று பொருள். ஆசனம் என்றால் இருக்கை.

Sukhasana
சுகாசனம்


செய்முறை: இந்த ஆசனத்தில் அமர்வது சுலபமாகவும் சுகமாகவும் இருப்பதால் சுகாசனம் என்று அழைக்கப்படுகிறது. முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது, வலது காலை ஒன்றன் பின் ஒன்றாக மடக்கவும். வலது பாதம் இடது தொடையின் கீழும், இடது பாதம் வலது காலின் கீழும் இருக்கட்டும். மார்பை நிமிர்த்தவும். தலை, கழுத்து, முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி முழங்காலின் மேல் வைத்து கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும் சின்முத்திரையைப் பற்றிய விளக்கம் அடுத்து வரும் ஆசனத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ஜாரி ஆசனம் (Marjariasana):

மார்ஜாரி என்றால் பூனை என்று பொருள். பூனை முதுகை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் வளைப்பது போல் இந்த ஆசனம் அமைந்திருப்பதால் மார்ஜாரி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.

Marjariasana
மார்ஜாரி ஆசனம்


செய்முறை: தரை விரிப்பின் மேல் மண்டியிட்டு அமரவும். (வஜ்ராசனம் பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும்). முன் வளைந்து தோள்களுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். கைகளை நேராக்கவும், கை, மணிக்கட்டுகளுக்கு நேராக இருக்கும்படி அகற்றி வைக்கவும். உடல் முன்னோக்கியோ, பின் நோக்கியோ போகாதபடி இடுப்பிலிருந்து புஜம் வரைக்கும் உள்ள உடல் பாகம் சமமாக இருக்கட்டும். இது மார்ஜாரி ஆசனத்தின் முதல் நிலை. மூச்சை உள்ளுக்குள் இழுத்து, தலையை மேலே உயர்த்தவும். அதே சமயம் முதுகை கீழ்நோக்கி நன்றாக வளைக்கவும். இந்த நிலையில் 35 வினாடி மூச்சை அடக்கி வைக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை இரு கைகளுக்கு இடையில் உள் நோக்கி வளைத்து முதுகை மேலே தூக்கவும். இந்த நிலையில் மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுக்காமல் 35 வினாடி அப்படியே இருக்கவும். இது மார்ஜாரி ஆசனத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யலாம்.

அதோ முகோ ஸ்வாசனா (Adho Mukhi Marjari Asana) : இந்த யோகா (Yoga) சனம் ஓய்விற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இது அமைதிப்படுத்தி உடலுக்குச் சக்தியினை அளிக்கின்றது.

சித்தோஹம் கிரியா (Siddhohum Kriya):

கிரியா என்றால் உள்நிலை செயல்பாடு என்று பொருள். உள்நிலை செயல்பாட்டில் உடல் மற்றும் மனத்தின் ஈடுபாடு கிடையாது. ஏனென்றால் உடலும், மனமும் இன்னமும் உங்களுக்கு வெளியாட்கள்தான். உங்கள் சக்திநிலையின் மூலம் ஒரு செயலைச் செய்ய, தேவையான அளவு நிபுணத்துவம் உங்களுக்கு இருந்தால், அது கிரியா. வெளிநிலையில் ஒரு செயல் செய்தால், அதன் பெயர் கர்மா. உள்நிலை செயல்பாட்டை கிரியா என்று அழைக்கிறோம்.

இது மனதை அமைதிப்படுத்தி உடலுக்கு புத்துயிர் அளிக்கிறது, மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நீக்குகிறது. கர்ப்பிணிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்தத்தையும் சமப்படுத்தவும் இது உதவுகிறது.



கர்ப்பிணிப் பெண்ணின் உடலின் தசைகள் மற்றும் தசைநார்கள் வலுப்பெற மகப்பேறுக்கு முந்தைய யோகா உதவுகிறது, இதனால் குழந்தை வளர்ந்து கருப்பையில் விரிவடையும் போது கீழ் முதுகு மற்றும் கால்களில் ஏற்படும் வலியைப் போக்க யோகா உதவுகிறது.

ALSO READ | உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!

யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் விரைவாக நடக்கும்.
Published by:Sankaravadivoo G
First published: