Home /News /lifestyle /

சொரியாசிஸ் எதனால் ஏற்படுகிறது..? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன..?

சொரியாசிஸ் எதனால் ஏற்படுகிறது..? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன..?

சொரியாசிஸ்

சொரியாசிஸ்

சொரியாசிஸ் என்பது பரவும் வகை நோயாகும். லேசான தடிப்புத் தோல் அழற்சி கூட உடலில் குறிப்பிடத்தக்க வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

சரியாக தோலை கவனிக்காவிட்டால் தோல் அழற்சி அதாவது சொரியாசிஸ் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகமாக செயல்படும் போது தடிப்புத் தோல் அழற்சி ஏற்படுகிறது. ஆரோக்கியமான தோல் திசுக்களைத் தாக்குகிறது. இது வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, தோலின் செல் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதன் விளைவாக தோல் அரிப்பு,தோலில் வலி போன்றவை ஏற்படும்.

வீக்கங்கள் சிவப்பு அல்லது வெள்ளை நிற அசடுகள் போன்று காணப்படும். பெரும்பாலும் சொரியாசிஸ் உச்சந்தலையில், முழங்கால்களில், முதுகு அல்லது முழங்கைகளில் தோன்றும். மும்பையை சேர்ந்த தோல் மருத்துவர் ஸ்ரீசந்த் ஜி.பராஸ்ரமணி இது பற்றி கூறும் போது, ‘சோரியாசிஸ் என்பது கட்டுப்படுத்தக்கூடியது ஆனால் குணப்படுத்த முடியாது என்கிறார்.

மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த நோயைப் பற்றி பல தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். இது நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. இது அவரது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி போன்ற சிகிச்சை முறைகளில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் சிகிச்சை தோல்வியிலேயே முடிகிறது. இவற்றிக்கான சிகிச்சை செலவும் அதிகம். இதனால் தோல் அழற்சியானது மேலும் அதிகரிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இந்த நோய் குறித்து அவர் விளக்கிய தகவல்கள் குறித்து இங்கு காண்போம்.அழற்சி :

சொரியாசிஸ் என்பது பரவும் வகை நோயாகும். லேசான தடிப்புத் தோல் அழற்சி கூட உடலில் குறிப்பிடத்தக்க வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். எந்தவொரு சிகிச்சை மேற்கொள்வதற்கும் முன்னர் தோல் மருத்துவர்களை ஆலோசித்து எடுக்க வேண்டும்.

பிரச்சனைகள் :

தோல் அழற்சியுடன் வாழ்பவர்களின் உடலில் கொமொர்பிடிட்டிகள் அதிக அளவில் உருவாகும். இவற்றுள் மிகவும் பொதுவானது சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் ஆகும். இது 30 சதவீத சொரியாசிஸ் நோயாளிகளை பாதிக்கிறது. இது மூட்டுகளில் ஏற்படக் கூடிய அழற்சி நோயாகும். இதன் விளைவாக மூட்டுகளில் விறைப்பு, வலி, துடித்தல், வீக்கம் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்ட கால மூட்டு சேதம் ஏற்படலாம்.

இன்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையா? நீங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கும் ஆய்வு..

சில சந்தர்ப்பங்களில் மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 நீரழிவு நோய் மற்றும் அழற்சி குடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரல் நோய், வளர்சிதை மாற்ற குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிக்கப்படுதல் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவை தொடர்புடைய பிற உடல்நலப் பிரச்சினைகளும் அடங்கும்.சிகிச்சைகள் :

தடிப்புத் தோல் அழற்சியானது பிளேக்குகள் உருவாவதற்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இவை மிகவும் வேதனையாக மாறலாம். கடுமையான அரிப்பு ஏற்படலாம். இத்தகைய தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உயிரியல் மற்றும் சில மேம்பட்ட சிகிச்சை முறைகள் மூலம் இந்த நோய் வெடிப்புகளை நிறுத்த முடியும்.

பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய உதவும் BE FAST முறை : தெரிந்துகொள்ளுங்கள்

மன ஆரோக்கியம் :

தடிப்புத் தோல் அழற்சியானது ஒரு நபரின் தனிப்பட்ட மன நலத்திலும், உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.குறிப்பாக முகம் அல்லது கைகள் போன்ற பொதுவாகக் காணக்கூடிய பகுதிகளில் சொரியாசிஸ் இருந்தால் துன்பத்தை ஏற்படுத்தலாம். இது மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட உளவியல் நிலைகளை உருவாக்க கூடும். ஒருவரின் தடிப்பு தோல் அழற்சியை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வதன் மூலம், அவர்களின் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.என்ன செய்ய வேண்டும்? :

முதலில் தோல் மருத்துவரை அணுக வேண்டும். தடிப்புத் தோல் அழற்சியை ஒரு எளிய உடல் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். ஒருவரின் தடிப்புத் தோல் அழற்சியின் தீவிரத்தைப் பொறுத்தே முழுமையான சிகிச்சைத் திட்டத்தை அமைக்க முடியும். மருத்துவர் அளிக்க கூடிய மருந்துகள் அந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.

இது நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது என்று புரிந்து கொள்ள வேண்டும். சொரியாசிஸ் சிகிச்சையின் முக்கிய நோக்கம் வீக்கம் மற்றும் பிளேக்குகளைக் குறைப்பதாகும். தற்போது ​​தடிப்புத் தோல் அழற்சியை பாதுகாப்பாகவும், திறம்படவும் சிகிச்சையளிக்கவும் உயிரியல் உள்ளிட்ட புதிய, மேம்பட்ட மற்றும் புதுமையான சிகிச்சைகள் உள்ளன. அவற்றின் மூலம் இந்த நோய்களை குணப்படுத்த முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health issues, Psoriasis

அடுத்த செய்தி