Home /News /lifestyle /

உடலை சிறப்பாக சுத்தம் செய்ய கூடிய 4 வழிமுறைகள் இதோ!

உடலை சிறப்பாக சுத்தம் செய்ய கூடிய 4 வழிமுறைகள் இதோ!

உடல் சுத்தம்

உடல் சுத்தம்

உடல் ஆரோக்கியத்தை சமநிலையில் வைக்க முதலில் உடலை முழுவதுமாக சுத்தம் செய்தல் வேண்டும். இதை டீடாக்ஸ் (detox) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதில் உள்ள முக்கியமான 4 முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மனித உடலானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஏராளாமான செல்களின் அமைப்புகளை கொண்டது. நமது உடலை ஆரோக்கியமானதாக மேம்படுத்த பல வகையான ஊட்டசத்துக்கள் அவசியமானது. சில சமயங்களில் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைத்த போதிலும், மனதளவில் நமக்கு சமநிலையற்ற உணர்வு உண்டாக கூடும். இது போன்ற உணர்வுகளையும், உடல் ஆரோக்கியத்தையும் சமநிலையில் வைக்க முதலில் உடலை முழுவதுமாக சுத்தம் செய்தல் வேண்டும். இதை டீடாக்ஸ் (detox) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதில் உள்ள முக்கியமான 4 முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆப்பிள் சிடர் வினிகர் : உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும், ஆப்பிள் சிடர் வினிகர் பெரிதும் உதவுகிறது. இத்துடன் எடை குறைப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தொண்டை புண் மற்றும் பலவற்றையும் சரி செய்ய வழி செய்கிறது. ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள நல்ல நுண்ணுயிரிகள் செரிமானப் பாதையில் ஆரோக்கியமான செயல்பாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் ரிஃப்ளக்ஸ் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் பொட்டாசியம் அளவைக் குறைப்பது போன்ற ஆபத்துகளும் இதில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இவற்றை அதிக அளவு எடுத்து கொள்ள கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  
View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)


 

வாய் கொப்பளித்தல் : எண்ணெய்யை கொண்டு தினமும் வாய் கொப்பளிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். குறிப்பாக உடல் முழுவதும் சுத்தமாகும். இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்கும். எண்ணெய்யினால் வாய் கொப்பளித்து முடித்தவுடன், ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.

ALSO Read |  பற்களை சுத்தம் செய்ய ஆயுர்வேத முறையில் உள்ள வழிமுறைகள் என்னென்ன..?

இந்த வழிமுறை வாய் ஆரோக்கியத்திற்கும், வெள்ளை பற்களுக்கும் மட்டுமல்லாமல் பொலிவான சருமத்தையும் வழங்குகிறது. மேலும் வாய் துர்நாற்றம் குறைதல், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லுதல், செரிமானத்தை மேம்படுத்துதல், தலைவலியைத் தடுப்பது பல்வேறு நன்மைகள் இதனால் உடலுக்கு கிடைக்கிறது.நிணநீர் மசாஜ் : நிணநீரில் உள்ள பாக்டீரியா மற்றும் அசுத்தமான பொருட்களை நிணநீர் கணுக்கள் வடிகட்டுகின்றது. பின்னர் சுத்தமானவற்றை உங்கள் இரத்தத்தில் சுரக்க செய்கிறது. எனவே நிணநீர் மசாஜ் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. இருப்பினும் உங்களுக்கு செரிமான பிரச்சனைகள், இதய செயலிழப்பு, தொற்றுகள் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் இந்த மசாஜ் முறை செய்ய கூடாது. குறிப்பாக இரத்த ஓட்ட பாதிப்பு அல்லது வீக்கம் உள்ளவர்களுக்கும், உடல் உபாதைகளால் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இது சிறந்ததாக உள்ளது.சௌனாஸ் : இது ஒரு வகையான நீராவி முறையாகும். இதை கொண்டு உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய முடியும். அதே போன்று இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை சீராக வைக்கும். இருப்பினும் இதய பிரச்சனை உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்யலாமா என்று தங்கள் மருத்துவரிடம் கேட்டு கொள்ள வேண்டும். வாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கவும், மனநோய்க்கான ஆபத்தை குறைக்கவும் இந்த முறை உதவுகிறது.

மேற்சொன்ன எல்லா வழிமுறைகளையும் செய்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவரிடம் அவசியம் ஆலோசிக்க வேண்டும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Apple cider vinegar, Detox, Oil Pulling

அடுத்த செய்தி