முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஏதாவது பிரச்சனை எனில் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்வீர்களா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

ஏதாவது பிரச்சனை எனில் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்வீர்களா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்

தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உடலுக்கும், மனதிற்கும் தீங்கு விளைவிப்பதற்கான அதிகப்பட்ச வயது வரம்பு 15 முதல் 24 ஆண்டுகள் ஆகும். மேலும் self harm அதாவது சுய தீங்கு என்பது பிரச்சனை இல்லை எனவும் சில மனிதர்களின் அடிப்படை மனநிலையில் அறிகுறிகள் என்கின்றனர் மனநல ஆலோசக

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு உடலுக்கும், மனதிற்கும் தீங்கு விளைவிப்பதற்கான அதிகப்பட்ச வயது வரம்பு 15 முதல் 24 ஆண்டுகள் ஆகும். மேலும் self harm அதாவது சுய தீங்கு என்பது பிரச்சனை இல்லை எனவும் சில மனிதர்களின் அடிப்படை மனநிலையில் அறிகுறிகள் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

குழந்தைகள் ஒரு வயதை எட்டியவுடன் இனி எதுவும் சொல்லக்கூடாது என்ற மனநிலைக்கு பல பெற்றோர்கள் வருவதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தங்களைத் தானே காயப்படுத்திக் கொள்வது தான். பெற்றோர்களிடம் அன்பு கிடைக்காமல் இருப்பது, காதல் தோல்வி, நண்பர்களுடன் சண்டை போன்ற பல விஷயங்களுக்கு கைகளை ப்ளேடால் அறுத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அனைவரின் வாழ்விலும் நடத்திருக்கும். குறிப்பாக மனநல நோய்கள், மனச்சோர்வு, பதட்டம், மது அருந்துதல், ஆளுமை குறைவது போன்ற பல விஷயங்கள் சுய தீங்கு மேற்கொள்வதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

அதே சமயம் இது தற்கொலை இல்லை என்றும் ஒரு பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு எடுக்கப்படும் ஒரு உத்தியாக உள்ளது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இருந்தப் போதும் சுய தீங்கு மேற்கொள்ளும் நபர்களில் 9 மடங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும், இவர்கள் 15- 25 வயதுடையவர்கள் தான் என்கிறது ஆய்வுகள். எனவே இந்நேரத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதற்கான முக்கிய 4 மனநிலைகள் என்ன என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்துக் கொள்வோம்.

ஆளுமைக் கோளாறு : சமூகத்தில் அனைவரிடமும் மரியாதையுடனும், மதிப்புடனும் இருக்க வேண்டும் என்பது பொதுவான விஷயம். ஆனால் சில நேரங்களில் சில காரணங்களுக்காக மதிப்பை நாம் இழக்க நேரிடும். அந்த சமயத்தில் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதில் ஏதோ ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தும். எப்படி இதனை சமாளிப்பது? தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என யோசித்தே நம்முடைய மனநிலையை மோசமாக்குகிறோம். இந்நிலையில் தான் தன்னைத்தானே நாம் காயப்படுத்திக் கொள்கிறோம்.

எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா..? இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க...

மனச்சோர்வு : காலையில் எழுந்தவுடன் வழக்கமான வேலைகளை செய்வது. எவ்வித பொழுதுபோக்கும் இல்லாமல் அடைப்பட்டு கிடைப்பது, வேலை பளு போன்றவை நம்மை மனச்சோர்விற்கு ஆளாக்கும். இதனால் சாப்பிடுவது, தூங்குவது போன்ற செயல்பாடுகளில் பாதிப்பை நாம் உணர்கிறோம். இதோடு நம் மீதே நம்பிக்கையற்ற உணர்வு, எரிச்சல், விரக்தி, அமைதியின்மை,உதவியற்ற தன்மை, பொழுது போக்குகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பது, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது. இவையெல்லாம் மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளாகும். இப்பிரச்சனைகள் அனைத்தும் முற்றும் போது தான் சுய தீங்கு விளைவிளைப்பது, தற்கொலை செய்வது போன்ற நிலை ஏற்படுகிறது.

கவலை : கவலை மோசமான வியாதி என்றே சொல்லலாம். எதையெடுத்தாலும் ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற மனநிலை அதிகமாகி கவலையில் ஆழ்ந்துவிடுவோம். பள்ளி, வேலை மற்றும் நம்முடைய குடும்ப உறவுகளில் அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். எப்படியாவது சமாளிப்பது என்ற மனநிலை இருந்தாலும் எவ்வித பணிகளையும் நம்மால் செய்ய முடியாது. எரிச்சல், அமைதியின்மை, கவனமின்மை, தேவையற்ற எண்ணங்கள், தூக்கமின்மை, குமட்டல், படபடப்பு போன்றவை நீங்கள் அனுபவிக்கநேரிடும். இதன் உச்சபட்ச நிலை தான் தற்கொலை எண்ணம்.

வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க...

மனஉளைச்சல் : மன உளைச்சல் அனைவருக்கும் சந்திக்கும் பொதுவான விஷயம். உடல் ரீதியான எதிர்வினைகளுடன் சேர்ந்து அதிர்ச்சியின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது முதல் கனவுகள், ஃபளாஷ்பேக்குகள், பதட்டம், மனச்சோர்வு போன்றவை உங்களை ஒரு மனநிலையில் வைத்திருக்காது. ஏதோ ஒன்றைத் திரும்ப திரும்ப நினைத்து பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது அதிகமாகும்.

எனவே இதுப்போன்ற மனநிலை உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக மனநல ஆலோசகரை  நேரில் சந்தித்து பிரச்சனைக்குத் தீர்வு காண முயலுங்கள்..

First published:

Tags: Mental Health, Mental Stress