• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • WFH காரணமாக பத்தில் 4 இந்திய பெண்கள் கவலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்- ஆய்வு

WFH காரணமாக பத்தில் 4 இந்திய பெண்கள் கவலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்- ஆய்வு

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கடமைகளுக்கு இடையில் ஊக்கமின்மை காரணமாக ஏமாற்றப்படுகிறார்கள்.

 • Share this:
  பெண் பணியாளர்களின் தொழில் வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பான பிங்க் லேடர் (Pink Ladder) வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில் பணிபுரியும் 10 பெண்களில் நான்கு பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழ்நிலையுடன் தொடர்புடைய கவலை மற்றும் மன அழுத்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. 

  அதாவது, இரட்டை சுமை நோய்க்குறியால் (double burden syndrome) பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தரவுகளை இந்த ஆய்வு கொண்டு வந்தது. ஏனெனில் பெண்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கடமைகளுக்கு இடையில் ஊக்கமின்மை காரணமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

  கடந்த சில மாதங்களாக வெளியான பல ஆய்வுகள், வேலைக்கும், வீட்டிற்கும் இடையிலான எல்லைகள் எவ்வாறு பெண் ஊழியர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் வீட்டுவேலை அலுவலக வேலை காரணமாக பல பெண்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். இதே சூழ்நிலை இந்தியாவிலும் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான மெக்கின்சி அறிக்கையின்படி, அக்டோபர் 2020 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் சோர்வடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவில் நான்கு பெண்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பணிநேரத்தை குறைத்துக்கொள்ளவோ அல்லது அலுவலக பணிகளை முற்றிலுமாக கைவிடுவதைப் பற்றியோ சிந்திக்கிறார்கள்.  கணினி பார்வை மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான மேட் ஸ்ட்ரீட் டென் நிறுவனத்தின் இணை அமைப்பாளர் அஸ்வினி அசோகன் கூறியதாவது, " கொரோனாவுக்கு பிந்தைய உலகம் குடும்பம் மற்றும் பராமரிப்பின் அழுத்தங்களை பெண்கள் எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதைப் பெரிதாக்கியது. வீட்டில் போதுமான ஆதரவு இல்லாவிட்டால் பெண்கள் உண்மையில் வேலை செய்ய முடியாது என்ற உண்மையை குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கும், வேலையைக் கையாளுவதற்கும் இடையில் அதிக அழுத்தம் இருப்பதால், எதிர்காலத்தில் அதிகமான பெண்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்கும் - ஆய்வு..!

  கொரோனா வைரஸால் பெருந்தொற்றால் வேலை கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றம் பல பெண்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரித்திருந்தாலும், எங்கிருந்தும் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற நெகிழ்வுத்தன்மையை வழங்கியிருந்தாலும், பணியிடத்திற்கு செல்வதற்கான பயண நேரத்தை மிச்சப்படுத்தியிருந்தாலும், பெருகிய எண்ணிக்கையிலான பெண் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை ஒரு சுமையாகவே கருதுகிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  மேலும் இதுகுறித்து மல்டிவர்சல் அட்வைசரியின் நிர்வாக பங்குதாரர் பிரியா செட்டி ராஜகோபால் கூறியதாவது, பெண்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்ப்பது கடினமாக இருக்கிறதா என்றால் ஆம் என்று தான் சொல்வேன். காலம் காலமாக பெண்கள் ஒரு முதன்மை பராமரிப்பாளராக வீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அலுவலகத்தில் இருந்து வரும் வேலைகள் பெண்களுக்கு வேலை மற்றும் வீட்டு வேலைகளுக்கு இடையே ஒரு தெளிவான பிரிப்பை அனுமதித்தன" என்று கூறியுள்ளார். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை உலகளவில் ஏற்றுக்கொள்வது தொழில்முறை உலகின் ஆதிக்கத்தை இழக்க வழிவகுத்திருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: