Home /News /lifestyle /

நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் 4 மூலிகைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் 4 மூலிகைகள்

மூலிகைகள்

மூலிகைகள்

நம் உடலில் இருக்கும் இம்யூன் சிஸ்டம் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிதமானது முதல் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. சரியான உணவுகளை சாப்பிடாத பொது, நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு பலவீனமாகி அடிக்கடி நோய்தொற்று ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போகும்.

புரதம், வைட்டமின் டி, இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி2 ஆகிய ஊட்டச்சத்து குறைபாடுகள் இந்தியர்களிடையே பரவலாக காணப்படுகிறது. தற்பொழுது மீண்டும் கோவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையிலும், குளிர்காலமும் உடல் நலக் குறைபாட்டை அதிகரிக்கும் நிலையிலும், உடலை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

நம் உடலில் இருக்கும் இம்யூன் சிஸ்டம் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. உடலில் எந்த வகையான தொற்று ஏற்பட்டாலும் சிலருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் தானாகவே சரியாகிவிடும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவானதாக இருக்கும். ஆனால், அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிபப்டையும். ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது, உடலில் நீர்ச்சத்து அளவைப் பாதுகாப்பது, உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மற்றும் நல்ல தூக்கம் ஆகிய நான்கு விஷயங்களின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டாலும் இம்யூனிட்டி பலவீனமாகும்.உணவுகளில் மட்டும் அல்லாமல் நம் நாட்டின் பாரம்பரியமான மூளிகைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றை எதிர்த்து போராடும் பலத்தை அளிக்கிறது என்று இமாலயா வெல்னஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி அசோசியேட்டான மருத்துவர் ஸ்ருதி ஹெக்டே தெரிவித்துள்ளார். மூலிகைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல், மட்டும் anti-inflammatory பண்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி மூலிகைகள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. தினசரி இந்த மூலிகைகளை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பலமாகும். கீழே உள்ள 4 ஆயுர்வேத மூலிகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

சீந்தில் (அம்ருதவல்லி)

குடிச்சி என்று அழைக்கப்படும் சீந்தில்கொடி எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்ட ஆயுர்வேத மூலிகையாகும். ஆயுர்வேதத்தில் இது ‘அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது மரணத்தை வெல்லக் கூடிய தன்மை கொண்ட மருந்து என்பது இதன் அர்த்தம். நீண்டஆயுளுக்கு, மூளை ஆரோக்கியத்திற்கு, நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தி நுரையீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு : எச்சரிக்கும் மருத்துவர்கள்

அஸ்வகந்தா

மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக அஸ்வகந்தாவின் பயன்பாடு இருக்கிறது. அஸ்வகந்தா வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் நிவாரணியாக ஆயுர்வேத மற்றும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்றாக தூங்குவதற்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இது உதவுகிறது.துளசி

சில ஆண்டுகளுக்கு முன் வரை கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் துளசி மாடம் இருக்கும். சுற்றுப்புறத்தில் இருக்கும் அசுத்த காற்றை கிரகித்துக் கொண்டு தூய்மையான ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தன்மை உள்ளது. இதனாலேயே நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தடுக்கும்.

நெல்லி

நெல்லிக்காய் ஒரு அற்புதமான உணவுப்பொருள். ஏகப்பட்ட மருந்துவ மற்றும் குணமாக்கும் பண்புகளை நெல்லிக்காய் கொண்டுள்ளது. உடலில் உள்ள எல்லா பாகங்களும் நெல்லியால் பயனடையும். வைட்டமின் சி, அமினோ அமிலங்கள், பெக்டின் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவை அதிக அளவில் நெல்லயில் உள்ளன. தினசரி ஒரு சிறிய அளவிலான நெல்லிக்காயை சாப்பிட்டு வருவது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும், நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Ayurvedic medicine, Herbal

அடுத்த செய்தி