இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிக அச்சமடையக்கூடிய நோயாக கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVDs) மாறியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO) கணிப்பின் படி, இதயம் தொடர்பான நோய்கள் உலகளவில் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் கார்டியோவாஸ்குலர் நோய்களால் இறந்துள்ளனர், அவர்களில் 85 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறந்துள்ளதாக தெரிகிறது.
மாரடைப்பு மற்றும் இதயக் குழாய் அடைப்பு ஆகியவை மிகவும் பொதுவானது, ஆனால் சில வகை கார்டியோவாஸ்குலர் நோய்கள் கடுமையானவை மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்தானவை ஆகும். தமனிகளில் ஏற்படும் அடைப்பால், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இரத்தம் இல்லாமல், இதயம் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாது, இதனால் இதய தசைகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
ஒருகால கட்டம் வரை மாரடைப்பு என்பது முதியவர்களுக்கு வரக்கூடியது என்ற நிலை மாறி, தற்போது 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவு முறை, வாழ்க்கை முறை, சரியான உறக்கமின்மை, மன அழுத்தம், வேலைப்பழு, உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் மாரடைப்பு வர சில உடல் நல பிரச்சனைகளும் காரணமாக அமைகின்றன. அதில் முக்கியமான 4 பிரச்சனைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. உயர் ரத்த அழுத்தம்:
உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்கள் மற்றும் பிற இரத்த நாளங்களுக்கு எதிரான இரத்தத்தின் விசை மிக அதிகமாக இருக்கும்போது ஏற்படுக்கூடியது ஆகும். இதனால் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் ஓட்டம் குறைகிறது. இது உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க இதயத்தை தூண்டுகிறது. இது இடது வென்ட்ரிக்கிள் தடிமனாவதற்கு வழிவகுப்பதோடு, மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதய நோய்களின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பொதுவாக, உயர் இரத்த அழுத்தம் 140/90 க்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது, மேலும் அழுத்தம் 180/120 ஐத் தாண்டினால் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதால், உயர் ரத்த அழுத்தத்தை மருத்துவ உலகம் ‘சைலண்ட் கில்லர் 'என அழைக்கிறது.
Tuberculosis : காசநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
2. கெட்ட LDL கொழுப்பின் ஆரோக்கியமற்ற அளவு:
ரத்தில் உள்ள கொழுப்பு இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று LDL, அதாவது குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம். மற்றொன்று HDL என அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் ஆகும். இதில் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம், பொதுவாக ‘கெட்ட கொழுப்பு’ என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது அதிகரிக்கும் போது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இதயத்தை செயலிக்க செய்யும் அளவிற்கு ஆபத்தானது. தமனிகளில் கெட்ட கொழுப்பின் அதிகரிப்பு இரத்த நாளங்களைச் சுருக்கி, இதயம், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. அதேசமயம் HDL எனப்படும் "நல்ல" கொழுப்பு பல்வேறு இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.
3. ரத்தத்தில் உயர் சர்க்கரை அளவு (அ) நீரழிவு நோய்:
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தமனிகளை நீண்ட காலத்திற்கு சேதப்படுத்தி, அதனை சுருங்கவோ அல்லது சுருக்கவோ செய்யலாம். நீரழிவு நோய் ரத்தத்தில் சர்க்கரையை உருவாக்குவதாலும் இது நிகழ்கிறது. ஏனெனில் உங்கள் உடலில் உள்ள அனைத்து சர்க்கரையையும் பயன்படுத்த முடியாது. எனவே இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களை அடைத்து சேதப்படுத்துகிறது.
4. கவனிப்பட வேண்டிய மாரடைப்பின் அறிகுறிகள்:
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) வெளியிட்டுள்ள மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை மற்றும் அறிகுறிகள் இதோ...
* மார்பு வலி மற்றும் அசௌகரியம்
* மூச்சு திணறல்
* ஒன்று அல்லது இரண்டு கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிறு உட்பட உடலின் மேல் பகுதியில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படுதல்.
* வியர்வை அல்லது லேசான தலைவலி
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுவது நல்லது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.