உடலுக்கு எந்த ஒரு வேலையையும் தராத தற்போதைய நவீன கால உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் பலரில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த மூன்று தசாப்தங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் தீவிர பாதிப்பை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தற்போது மக்கள் அனுபவித்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தைராய்டு கோளாறு.
தைராய்டு கோளாறு என்றால் என்ன?
தைராய்டு என்பது ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது கீழ் கழுத்தின் நடுவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குகிறது. இந்த ஹார்மோன்கள் ஒருவரில் வளர்ச்சி, செல் பழுது மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் இந்த சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, அது சோர்வு, முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, குளிர்ச்சியை உணர்தல் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
தைராய்டு சுரப்பிக்கும் உங்கள் உணவு பழக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?
தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் - குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் - அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும். இரண்டு நிலைகளும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும் சில நோய்களால் ஏற்படுகின்றன. தைராய்டு நோயின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சத்தான மற்றும் சீரான உணவு மட்டும் தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவாது.
சரியான மருந்துகளுடன் நீங்கள் சத்தான உணவுகளை சாப்பிடும் போது, அவை தைராய்டு பிரச்சனைகளால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைகின்றன. அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது தைராய்டு அறிகுறிகளைக் குறைக்க உதவும். அப்படியானால் உங்கள் தினசரி உணவில் நீங்கள் சாப்பிட வேண்டிய நான்கு முக்கிய பழங்கள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
1. ஆப்பிள்
உலகளவில் மிகவும் பிரபலமான பழம் ஆப்பிள். இது ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும். மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக நிர்வகிக்கலாம் மற்றும் உங்கள் தைராய்டு சுரப்பியை வேலை செய்யும் நிலையில் வைத்துக்கொள்ளலாம். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட உதவும் ஆப்பிள் உங்கள் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் பழம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
2. பெர்ரி
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், தைராய்டு உறுப்புகளுக்கு பெர்ரி பழம் மிகச் சிறந்தது. அவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டவும், சீராக செயல்படவும் உதவுகின்றன. பெர்ரிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து ஒருவரை பாதுகாக்கின்றன. நீங்கள் நீரிழிவு மற்றும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பெர்ரி சிறந்த தீர்வாக இருக்கும். தினமும் ஸ்ட்ராபெரி, புளுபெர்ரி அல்லது இந்திய ஜூஜூப் (பெர்) அல்லது காட்டு ப்ளூபெர்ரி (ஃபால்ஸ்) ஆகிய வகைகளை சாப்பிடலாம்.
3. ஆரஞ்சுபழம்
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரஞ்சுபழம், ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, உங்கள் செல்களை சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது. அதுவே, வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கிறது. தோல் சேதத்தை தடுக்கிறது மற்றும் காயங்களை சரிசெய்ய உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அதன் செயல்பாட்டை பாதிக்கும்.
இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் : சரி செய்யும் வழிகள் இதுதான்
4. அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் உடலைப் பாதுகாக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி உள்ளது. இது தைராய்டின் அறிகுறிகளில் ஒன்றான சோர்வை கட்டுப்படுத்த உதவும். அன்னாசிப்பழம் புற்றுநோய், கட்டி மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகச்சிறந்தது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
தைராய்டு சுரப்பியின் செயல்திறனில் பாதிப்பு இருந்தால் ஒருவர், கோயிட்ரோஜன்கள் உள்ள சில உணவுகளை தவிர்க்க வேண்டும். கீழ்காணும் உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை பின்வருமாறு,
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்: கேக், குக்கீகள், சிப்ஸ்
சோயா அடிப்படையிலான உணவுகள்: டோஃபு, டெம்பே, எடமாம் பீன்ஸ், சோயா பால் போன்றவை.
பானங்கள்: காபி, கிரீன் டீ மற்றும் ஆல்கஹால்.
பழங்கள்: பீச், பேரீச்சம்பழம். இந்த உணவுகளை தைராய்டு கோளாறு உள்ளவர்களில் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.