Home /News /lifestyle /

50 வயதை கடந்துவிட்டீர்களா..? இந்த ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துங்க...

50 வயதை கடந்துவிட்டீர்களா..? இந்த ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துங்க...

ஊட்டச்சத்துக்களில் கவனம்

ஊட்டச்சத்துக்களில் கவனம்

50 வயதை கடந்த பெரியவர்களுக்கு, இளையவர்களைக் காட்டிலும் மிக கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை தேவைப்படும். கீழ்காணும் ஊட்டச்சத்துக்களில் உங்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது என்றால், அதை உணவு மூலமாக அல்லது ஊட்டச்சத்து மருந்துகள் மூலமாக என எப்படி ஈடு கட்டுவது என்று மருத்துவ நிபுணரை ஆலோசிக்கவும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நாம் உண்ணும் உணவு மூலமாக நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் போன்றவை நம் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக, 50 வயதை தாண்டியவர்களுக்கு ஓஸ்டியோஃபோரெசிஸ் அல்லது ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கு உடலில் ஊட்டச்சத்துக்கள் அவசியமாகும். உணவு மூலமாக போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறாதவர்கள் மாத்திரை, கேப்சூல், பவுடர், ஜெல், லிக்யூட் போன்ற பல வடிவங்களில் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.

பெரியவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்

50 வயதை கடந்த பெரியவர்களுக்கு, இளையவர்களைக் காட்டிலும் மிக கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை தேவைப்படும். கீழ்காணும் ஊட்டச்சத்துக்களில் உங்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது என்றால், அதை உணவு மூலமாக அல்லது ஊட்டச்சத்து மருந்துகள் மூலமாக என எப்படி ஈடு கட்டுவது என்று மருத்துவ நிபுணரை ஆலோசிக்கவும்.

கால்சியம் :

அனைத்து வயதிலும் நமது எலும்புகளை பலமாக வைத்துக் கொள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகியவை அவசியமாகும். ஆண், பெண் இருவருக்குமே வயது அதிகரிக்கும்போது எலும்புகள் வலுவிழந்து காயங்கள் உண்டாகக் கூடும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், மீன்கள் போன்ற உணவுகளில் கால்சியம் சத்து உள்ளது.



விட்டமின் டி :

பெரும்பாலான நபர்கள் தங்கள் தேவைக்கும் குறைவான அளவிலேயே விட்டமின் டி எடுத்துக் கொள்கின்றனர். ஆகவே, மருத்துவரை ஆலோசனை செய்து விட்டமின் டி சேர்க்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், உணவு தானியங்கள் அல்லது விட்டமின் டி மருந்து ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

எலும்புகளையும் பாதிக்கும் குடல் புற்றுநோய்... எச்சரிக்கும் 3 அறிகுறிகள் என்னென்ன..? 

விட்டமின் பி6 :

சிவப்பு அணு உற்பத்திக்கு இது மிக, மிக தேவையாகும். உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி போன்றவற்றில் விட்டமின் பி6 சத்து உள்ளது.

விட்டமின் பி12 :

நமது சிவப்பு அணு செல்கள் மற்றும் நியூரான்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது. இளையவர்களுக்கு தேவைப்படுகின்ற அதே அளவு விட்டமின் பி12 பெரியவர்களுக்கும் போதுமானதுதான். ஆனால், பெரியவர்களின் உடலில் இந்த சத்தை உறிஞ்சும் திறன் இல்லாமல் போகிறது.



குறிப்பாக, இறைச்சிகளில் மட்டுமே விட்டமின் பி12 மிகுதியாக உள்ளது என்ற நிலையில், தீவிர சைவப் பிரியர்களுக்கு இந்தச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, பற்றாக்குறை உள்ளவர்கள் மருத்துவர்களை ஆலோசித்து, அதை ஈடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் கூறுவது என்ன..?

பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் எந்த வயதினருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம். அது எதிர்பாராத பக்க விளைவுகளை உண்டு செய்யக் கூடும். அதே சமயம், ஊட்டச்சத்து மருந்துகளை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளாமல் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health tips, Vitamins

அடுத்த செய்தி