ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களே!... 35 வயது ஆயிடுச்சா? - கண்டிப்பா யோகா பண்ணுங்க…

பெண்களே!... 35 வயது ஆயிடுச்சா? - கண்டிப்பா யோகா பண்ணுங்க…

யோகா

யோகா

Yoga Fore Women | 35 வயது ஆன பெண்கள் நீண்டகால நோய்களை தவிர்க்க கண்டிப்பாக யோகா பயிற்சி செய்ய வேண்டும் என இயற்கை மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

35 வயது ஆன பெண்கள் நீண்டகால நோய்களை தவிர்க்க கண்டிப்பாக யோகா பயிற்சி செய்ய வேண்டும் என இயற்கை மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

இந்தியாவின் ஆதிக் கலையான யோகாசனம் தற்போது உலக நாடுகளில் மிகவும் வரவேற்பு பெற்ற உடற்பயிற்சி கலையாக கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தை கொஞ்சமும் விட்டுக்கொடுக்க விரும்பாத பல வெளிநாடுகளில் கூடு யோக கலை விருப்பமுடன் கற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட யோகா தினம் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று உலக நாடுகள் பலவும் யோகாவின் பெருமையை உணர்த்தும் வகையில் யோகப் பயிற்சி மேற்கொள்கின்றன. ஆனால் யோகாவின் பிறப்பிடமான நமது நாட்டில் யோகாவை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் எனற கேள்விக்கு ஏமாற்றம் தான் பதிலாக அமையும். மிகவும் சொற்பமான அளவில் தான் யோக பயிற்சி இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது.

யோகப் பயிற்சி உடற்பயிற்சி மட்டுமல்ல.. சில நோய்களை போக்கும் மருந்தாகவும், சில நோய்களை நெருங்கவே விடாத அருமருந்தாகவும் செயல்படுகிறது. குறிப்பாக பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு யோகாசனம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் தான் பெண்களுக்கு சில நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் இருக்க யோகாசனம் செய்யுங்கள் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதிலும் 35 வயது ஆன பெண்கள் கண்டிப்பாக சில யோகாசனங்களை வழக்கமாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.

Read More : உங்க உடலில் சூரிய ஒளியே படவில்லை எனில் இத்தனை பிரச்சனைகளை சந்திப்பீங்க..!

நாற்பது வயது ஆன பெண்கள் மாதவிடாய் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சீரான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட ஆசனங்கள் மிக முக்கியம் என அறிவுறுத்துகிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். பருவமடைந்த பிறகு மாதவிடாய் பெண்களுக்கு ஹார்மோன் எழுச்சியை ஏற்படுத்துகிறது. நாற்பது வயது ஆகும் பொது மாதவிடாய் சுழற்சி மெதுவாக நிற்கத் தொடங்கும். அப்போது உண்டாகும் ஹார்மோன்கள் பிரச்னையால் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். அது போன்ற ஹார்மோன் சிக்கல்களை குறிப்பிட்ட யோகாசனங்கள் மூலம் மிக எளிதாக சமாளிக்கலாம் என நம்பிக்கை தருகிறார்கள் மருத்துவர்கள்.

ஹார்மோன் முரண்பாடுகளால் பெண்களுக்கு தைராய்டு சுரப்பிகள், கர்பப்பை உள்ளிட்டவைகள் கடுமமையான மாற்றத்தை சந்திக்கின்றன. அந்த மாற்றங்களை முறைப்படுத்தாவிட்டால் பல்வேறு நீண்டகால நோய்கள் பெண்களுக்கு ஏற்பட்டு விடும். 40 முதல் 55 வயதாகும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும் போது ஓஸ்ட்ரோஜென் புரோஜெஸ்ட்ரோன் திரவங்கள் சுரப்பது குறையத்தொடங்கும். இது உடம்பை நிலையாக வைத்திருக்க உதவும் நமது மூளையின் ஆழத்தில் இருக்கும் ஹைபோதாலமஸ் என்னும் சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும். இந்த ஹைபோதாலமஸ் மற்றும் தைராய்டு சுரப்பிகள் தான் உடல் வெப்பநிலையை சீராக்கி, சரியான முறையில் பசி மற்றும் தாகத்தை தூண்டுதல், இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல், தூக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான வேலைகளை செய்கிறது.

ஹைபோதாலமஸ் சுரப்பி பாதிக்கப்பட்டால் நமது உடலின் அன்றாட செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். அதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் சில குறிப்பிட்ட யோக பயிற்சிகள் மேற்கொண்டால் இது போன்ற பிரச்னைகளை எளிதாக சமாளிக்கலாம். இதனால் முறையான யோக ஆசிரியரின் அறிவுரை மற்றும் கண்காணிப்போடு 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யோகாசனம் செய்வது நல்லது என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனையாகும்..

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Health Benefits, Yoga, Yoga Health Benefits