முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு நாளைக்கு 30 நிமிடங்காவது உங்களுக்குப் பிடித்த பாட்டைக் கேளுங்கள்..! ஏன் தெரியுமா..?

ஒரு நாளைக்கு 30 நிமிடங்காவது உங்களுக்குப் பிடித்த பாட்டைக் கேளுங்கள்..! ஏன் தெரியுமா..?

இசை

இசை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு நாளைக்குக் குறைந்தது 30 நிமிடங்களாவது உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டால் இதயத்திற்கு நல்லது என சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி நெஞ்சு வலி, மனப் பதட்டம் போன்றவற்றையும் குணப்படுத்தும் மருத்துவம் இசைக்கு உண்டு என கண்டுபிடித்துள்ளனர். மேலும் இசையைக் கேட்பதும் ஒருவித சிகிச்சைதான் என்கிறது ஆய்வு. இதை பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தெரப்பியாகக் கையாண்டால் இதய பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என பெல்கிரேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.

”இந்த இசைத் தெரப்பியானது முதல்முறை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் வராமல் இருக்க சிறந்த வழி” என ஆய்வின் தலைவர் ப்ரெட்ராக் மிட்ரோவிக் (Predrag Mitrovic) கூறுகிறார்.

செர்பியாவில் உள்ள மருத்துவ மையத்தில் மாரடைப்பு ஏற்பட்ட 350 நோயாளிகளுக்கு தினமும் இசையைக் கேட்க வைத்து இந்த ஆய்வைக் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவர்களைக் கண்காணித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

”அவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் அந்த இசையைக் கேட்கின்றனர். பின் அந்த இசைக்குள்ளேயே மூழ்கி, இசையை ரசிக்கத் தொடங்குகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் இசைக்கு இணங்க உடலும் அதில் ஒன்றி விடுகிறது “ என்கிறார் தலைமை ஆய்வாளர்

இப்படி தினமும் இசையைக் கேட்க வைத்ததில் ஏழு ஆண்டுகள் கழித்து அவர்களை சோதனைச் செய்ததில் அவர்களுக்கு பதட்டம், நெஞ்சுவலி, மாரடைப்பு என எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் இருந்துள்ளது.

எனவே வழக்கமான மருத்துவ சிகிச்சைகளை காட்டிலும் இந்த இசைப் பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

First published:

Tags: Lifestyle