மாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரைகளால் மூன்று வழிகளில் பெண்களுக்கு பாதிப்பு...!

சில நேரங்களில் அவை கருத்தடை மாத்திரைகளாகவும் செயல்படுகின்றன.

மாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரைகளால் மூன்று வழிகளில் பெண்களுக்கு பாதிப்பு...!
மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரை
  • News18
  • Last Updated: February 14, 2020, 4:04 PM IST
  • Share this:
பெண்கள் முக்கிய நிகழ்ச்சிகள், திருமணம், பார்ட்டி, கோவில் நிகழ்ச்சி, பண்டிகை நாட்கள், உள்ளூர் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக மாதவிடாய் தள்ளிப் போக வேண்டி மாத்திரைகளை உட்கொள்வார்கள். அதேபோன்று மாதவிடாய் குறிப்பிட்ட நாளில் வராமல் 2, 3 நாள் தள்ளிப்போகும்.

இப்படி உடல் இயற்கையாக செய்யக்கூடிய நிகழ்வை மாத்திரை உட்கொண்டு அதன் செயல்பாட்டிற்கு தடுப்பணையாக்கும் இந்த செயல் பெண்களின் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கிறது.

இந்த மாத்திரைகளை சில காரணங்களுக்காக தொடர்ந்து உட்கொண்டு வருகிறார்கள் எனில் அது அவர்களுடைய மாதவிடாய் நாளை பாதிக்கிறது. இதனால் தேதியும் மாறிப்போகும். அப்படி தள்ளிப் போய் வரும் மாதவிடாய் அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிறு வலியை உண்டாக்கும். இவற்றையெல்லாம் விட அவை பெண்களின் கருப்பையை பாதித்து கருத்தரித்தலையும் பாதிக்கிறது. சில நேரங்களில் அவை கருத்தடை மாத்திரைகளாகவும் செயல்படுகின்றன.
இந்த கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதில் 20 சதவீதம் பெண்கள் அதிகமான இரத்தப் போக்கால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை அந்த மாதத்தில் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மாதவிடாய் தள்ளிப்போதல் மாத்திரைகளை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்துவது vein thrombosis எனப்படும் நரம்புகள் உறைதல் பிரச்னை மற்றும் நுரையீரல் அடைப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தானது. இந்த மாத்திரைகள் கல்லீரலில் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்குகின்றன. இதனால் நீங்கள் பிற காரணங்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளின் தாக்கத்தையும் குறைக்கின்றன.இதைத் தொடர்ந்து உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு, எதிர்பாரதவிதமான வெஜினாவில் இரத்தம் வடிதல், வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்ற பிரச்னைகளும் வரும்.

 

 

 

 

 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்