ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தொப்பையை குறைக்க இந்த 3 ஆசனங்களை தினமும் செய்யுங்க... அப்புறம் தெரியும் ரிசல்ட்..!

தொப்பையை குறைக்க இந்த 3 ஆசனங்களை தினமும் செய்யுங்க... அப்புறம் தெரியும் ரிசல்ட்..!

யோகாசனம்

யோகாசனம்

இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யும் போது நிபுணர்களின் வழிகாட்டுதலின் பேரில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன். அதிலும் வயிற்றில் சேரும் கொழுப்புகளால் ஏற்படும் தொப்பையினால் இளைஞர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு இதய நோய்கள், டைப் 2 நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களாலும் அவதிப்பட நேரிடுகிறது. இதனையடுத்து தான் எப்படியாவது உடலையும், தொப்பையையும் குறைத்து விட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர்.

டயட், இன்பினிடி டயட், நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற பலவற்றை மேற்கொள்கின்றனர். இருந்தப் போதும் தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தான் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினமும் காலையில் மறக்காமல் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொப்பையை குறைக்க உதவும் யோகாசனங்கள்…

உடலில் கொழுப்புகள் அதிகம் தேங்கும் போது, பல உடல் நல பிரச்சனைகள் நம்மை வேகமாகப் பாதிக்கிறது. அதிலும் வயிற்றில் தேங்கும் கொழுப்புகளைக் கரைப்பது என்பது கடினமாக ஒன்று. இந்நேரத்தில் சில யோகாசனங்களை தினமும் பாலோ செய்ய வேண்டும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

பாத சக்கரசானம்:

உடல் பருமனை குறைப்பது, வயிற்று தசைகளை இறுக்குகிறது மற்றும் வயிற்று மற்றும் முதுகெலும்பு தசைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது பாத சக்கரசானம்.

செய்முறை: முதலில் இரு கால்களை நீட்டி முதுகை வளைக்காமல் நேராக அமர வேண்டும். பின்னர் வலது காலில் கைகளை வைத்து கடிகார திசையில் கைகளை சுழற்ற வேண்டும். 10 முறை இவ்வாறு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து எதிர்திசை நோக்கியும் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக தினமும் காலையில் செய்ய வேண்டும்.

நீங்கள் முதல் முறை இந்த ஆசனத்தை செய்யவுள்ளீர்கள் என்றால், முதலில் ஒரு காலில் இருந்து ஆரம்பியுங்கள். அதன் பின்னர் சிறிது நாள்கள் கழித்து இரண்டு கால்களிலும் செய்ய முயலுங்கள். இந்த ஆசனத்தின் முதுகை முழுவதுமாக வளைத்து கால்களைத் தொடும் போது வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய உதவுகிறது. இதோடு முதுகு, கால்கள் சீராக இயக்கத்துடன் இருப்பதற்கு உதவியாக உள்ளது.

குறிப்பு: இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யும் போது நிபுணர்களின் வழிகாட்டுதலின் பேரில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

படசஞ்சலன் (சைக்கிளிங்):

உடல் ஆரோக்கியம் மற்றும் தொப்பையை குறைக்க உதவியாக உள்ள ஆசனங்களில் ஒன்று தான் படசஞ்சலன் அதாவது சைக்கிளிங் செய்வது போன்ற ஆசனம்.

இதை செய்வதற்கு முதலில் தரையில் நன்றாக படுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் உடலை ரிலாக்ஸ் செய்துவிட்டு உங்களது உள்ளங்கைகளை உடலுக்கு அருகில் வைத்து மேல்நோக்கி வைக்கவும். பின்னர் உங்களது முழங்காலை வளைத்து, தொடைகளை உங்கள் மார்புக்கு அருகில் கொண்டு வர வேண்டும். பின்னர் சைக்கிள் ஓட்டுவது போன்று உங்களது கால்களை இயக்க வேண்டும். பின்னர் முழங்காலை நேராக வைத்து கால்களைத் தரைக்கு அருகில் கொண்டு வர வேண்டும். இதேப் போன்று ஒரு 5 முறை நீங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். போதிய பயிற்சிக்குப் பின்னர் இரண்டு கால்களையும் சேர்த்து மீண்டும் செய்ய வேண்டும்.

குறிப்பு: நீரழிவு நோய், இதயம் அல்லது முதுகுப் பிரச்சனை உள்ளவர்கள் நிபுணர்களின் வழிகாட்டுதலை பெற்று மெதுவாக அணுக வேண்டும்.

சூரிய நமஸ்காரம்:

முழு உடலையும், மனதையும் நிம்மதியாக வைத்திருக்க உதவுகிறது சூரிய நமஸ்காரம். இந்த ஆசனங்கள் நாள் முழுவதும் ஆற்றல் மற்றும் உடலை சமநிலைப்படுத்துகிறது. தொடர்ச்சியாக உங்களது வாழ்க்கையில் நீங்கள் செய்யும் போது உடல் எடை குறைப்பதற்கு உதவியாக உள்ளது. மேலும் தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராக இருப்பதால் பதட்டம் மற்றும் மன அழுத்தம் குறைக்க உதவுகிறது.எனவே இதுபோன்ற ஆசனங்களுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். நிச்சயம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Belly Fat Reduce, Weight loss, Yoga