தலைவாழை இலை போட்டு விருந்து சாப்பிடுவது என்பது யாருக்குத் தான் பிடிக்காது. அப்படி கல்யாண வீட்டிலோ அல்லது பிறந்தநாள் பார்ட்டியிலோ நன்றாக சாப்பிட்ட வயிறு வீங்கியது போல் உணர்வு ஏற்படும். இது திருப்தியாக சாப்பிட்ட உங்கள் உணர்வையே அழிக்க கூடும். அத்துடன் வயிற்று வலி, அசிடிட்டி, குமட்டல் போன்ற அசெளகரியங்களை வேறு அனுபவிக்க நேரிடலாம்.
இது பெரும்பாலும் அதிகப்படியான வாயு உற்பத்திக்கு வழிவகுக்கும் சில உணவுகள் காரணமாக ஏற்படுகிறது. வயிற்றில் சப்தம் மற்றும் ஏப்பம் வருவதற்கு உண்மையான காரணம் வாயு மற்றும் வயிறு முழுமையாக இருப்பதால் தான். சுமார் 16 முதல் 30% பேருக்கு வயிற்று பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது.
நீங்கள் ஒவ்வொரு முறையும் நிறைவாக உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீங்கியது போல் உணர்கிறீர்களா?. அப்படியானால் வயிற்றுக்கு ஒத்துவராத ஏதாவது ஒரு தவறை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். உடற்பயிற்சியாளரும், உணவு நிபுணருமான சோமியா லுஹாடியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வயிறு வீங்க காரணமாக அமையும் தவறுகள் குறித்து விளக்கியுள்ளார்.
சாப்பிட்ட பிறகு வயிறு வீங்க 3 காரணங்கள்:
1. வேகமாக சாப்பிடுவது:
வேகமாக சாப்பிடும் போது, நமக்கே தெரியாமல் அதிக காற்றை விழுங்குகிறோம். இதனால் வயிற்றில் வாயு நிரம்பி, வீங்கியது போன்ற அசெளகரியத்தை தருகிறது. எனவே சரியாக அளவு உணவை வாயில் போட்டு, மெதுவாக மென்று சாப்பிடுவதை வழக்கமாக்க வேண்டும். அப்போது தான் உணவு பற்களால் நன்கு அரைக்கப்பட்டு, செரிமானத்திற்கு எளிமையானதாக மாறும்.
2. அதிக காரமான உணவு:
நம் வீட்டிலேயே கூட பார்த்தோமேயானால் சிலருக்கு பச்சை மிளகாய் சேர்த்த உணவுகள் ஆகாது. அதனை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதாக கூறுவார்கள். இதற்கு காரணம் அதிகப்படியான காரத்தன்மையே ஆகும். இந்திய உணவுகளுக்கு சிவப்பு மிளகாய் தூள் மிகவும் தேவையான ஒன்று தான் என்றாலும், அதன் அளவை சரியாக பயன்படுத்துவது முக்கியமானது. உணவில் குறைவான காரத்தை பயன்படுத்துவது அமிலத்தன்மை ஏற்படாமல் தடுத்து, வயிறு வீக்கத்தில் இருந்து காக்கும்.
Also Read : பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க வேண்டுமா..? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்..!
3. அதிக உப்பு மற்றும் சோடா:
ஆப்ப சோடா, இட்லி சோடா எனப்படும் சோடியத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்க கூடியது. உணவில் உப்பு மற்றும் சோடா உப்பின் அளவை அதிகரிப்பது இரப்பை குடல் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது அசிடிட்டி மற்றும் வயிறு உப்சம் எனப்படும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
Also Read : பருவமழையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 அற்புதமான மூலிகைகள்...
வயிறு வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி?
வயிறு வீக்கம் ஏற்பட்டால் அதனை தணிக்க ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடலாம். சில பெருஞ்சீரக விதைகளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம். வாழைப்பழம் அல்லது வெள்ளரிக்காய் சாப்பிடலாம் அல்லது சூடான மூலிகை தேநீரை பருவதும் நல்ல பலன் கொடுக்கும். இரவில் மிகவும் தாமதமாக சாப்பிடுவதை தவிர்ப்பது, சாப்பிட்டதும் உறங்கச் செல்லவது போன்ற பழக்கங்களை கைவிடுவதும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Stomach Bloating