குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோயையும் குறிக்கிறது. இந்த நோய் பொதுவாக குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பெருங்குடலின் உட்சுவரில் சாதாரண சிறிய கட்டி அல்லது புண்ணாக துவங்கும். இந்த கட்டிகள் பாலிப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒரு கட்டத்தில் கேன்சர் கட்டிகளாக உருமாறி குடல் புற்றுநோயை ஏற்படுத்தி கடும் அவதியை உருவாக்கிறது.
உலக அளவில் அதிகமானோரை பாதிக்கும் புற்றுநோய்களில் குடல் புற்றுநோய் 3வது இடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி புதிதாக 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
குடல் புற்றுநோய் பிற பகுதிகளுக்கு பரவுமா?
குடல் புற்றுநோயின் ஆரம்ப கட்டமான பாலிப்ஸ் கட்டிகள் உருவாவதை எவ்வித அறிகுறிகள் மூலமாகவும் அறிய முடியாது என்பதால், பரிசோதனைகள் மூலமாக அதனை கண்டறிந்து சிகிச்சை பெறுவது மட்டுமே புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கக்கூடிய வழி என மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல் குடல் புற்றுநோய் சிறுகுடல், பெருங்குடல், மலக்குடலில் மட்டுமின்றி, கல்லீரல், நுரையீரல், மூளை, பெரிட்டோனியம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
எலும்புகளுக்கு குடல் புற்றுநோய் பரவினால் என்னவாகும்?
மிக அரிதான சந்தர்பங்களில் மட்டுமே எலும்புகளில் பரவக்கூடிய குடல் புற்றுநோயானது, எலும்பு மெட்டாஸ்டாஸிஸ் (Bone metastasis) என அழைக்கப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுபடி, குடலில் உருவாகும் புற்றுநோய் கட்டிகள் பிரிந்து, எலும்புகளுக்கு பரவி, அங்கேயே பெருக்கம் அடையும் போதும் எலும்பு மெட்டாஸ்டாஸிஸ் உருவாவதாக தெரிவித்துள்ளனர்.
லண்டனில் நடைபெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியில், எலும்புகளுக்குள் பரவும் புற்றுநோயானது ரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரிக்கச் செய்யும் ஹைபர்கால்சீயாவை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு கட்டிகள், எலும்புகள் வரை பரவுவது உயிருக்கு ஆபத்தானது என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனை உருவாகலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..? ஏன் அவசியம்..?
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
குடல் புற்றுநோய் கட்டிகள் எலும்புகளுக்குள் ஊடுருவியுள்ளதை கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 அறிகுறிகள் மூலமாக அறியலாம் என லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சோர்வு
- குமட்டல்
- அதிக தாகம் எடுப்பது
எலும்புகளுக்குள் பரவிய புற்றுநோய் கட்டியானது எலும்புகளை சேதப்படுத்த தொடங்குவதால் அளவுக்கு அதிகமான வலி மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளையும் தரக்கூடும். மேலும் வயிற்றுக்கோளாறு, வாந்தி, மலச்சிக்கல், எரிச்சல், குழப்பம் போன்றவையும் ஹைபர்கால்சீமியா உருவாகியுள்ளதற்கான பொதுவான அறிகுறிகள் ஆகும்.
குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்:
- குடல் இயக்கத்தில் மாற்றம் (குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 90 சதவீதம் பேருக்கு இந்த சிக்கல் ஏற்படுகிறது)
- மூல நோய், மலத்துடன் ரத்தம் வெளியேறுவது
- வயிற்று வலி, அசெளகரியம், வயிறு வீக்கம்
இந்த காரணங்களால்தான் மாரடைப்பு உண்டாகிறது : இந்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
ஆபத்துக் காரணிகளை அறிந்து கொள்வது எப்படி?
புற்றுநோய் தொடர்பாக லண்டன் நிபுணர்கள் குழு நடத்திய ஆராய்ச்சி முடிவின் படி, குடல் புற்றுநோயைப் பொறுத்தவரை, வயது, குடும்ப வரலாறு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைந்த அளவிலான உடல் செயல்பாடு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட காரணிகள் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bone health, Cancer, Gut Health