ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காஃபி குடிக்கும் பெண்களே இந்த செய்தி உங்களுக்குத்தான்..!

பிளாக் காபி என்பது காபி பிரியர்களின் பிரியமான பானமாகும். இது அவர்களுக்கு போதை மற்றும் சுவை அளிப்பதைத் தவிர, இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு உடனடி பவர் பூஸ்டர் அதோடு புற்றுநோய், இருதய நோய்கள், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர, எடை இழப்புக்கு உதவுவதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிளாக் காபி (Black Coffee) வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. எடை இழப்பு நன்மைகளைப் பெறுவதற்கு, சர்க்கரை, பால், கிரீம் போன்ற கூடுதல் சேர்க்கைகள் இல்லாமல் கருப்பு காபியை உட்கொள்ள நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. எடை இழப்புக்கு கருப்பு காபி சரியான பானமாக இருப்பதற்கு மற்ற சில காரணங்களை இங்கே காண்போம்.

இந்த நற்செய்தி காஃபி பிரியர்களை மனமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

 • Share this:
  ஒருநாளைக்கு பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை மற்றும் தொப்பை தானாகக் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி காஃபி பிரியர்களை மனமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

  பெண்கள் தினசரி பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கிறார்கள் எனில் அவர்களின் உடலின் ஒட்டுமொத்த எடையிலிருந்து சராசரியாக 2.8% எடை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  நியூட்ரீஷியன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பெண்களைக் காட்டிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படவர்களாக இருந்தாலும், புகைப்பிடிப்பவர்கள், பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த உடல் எடையில் மாற்றம் இருந்துள்ளது.

  டீ குடிப்பது ரொம்ப பிடிக்குமா..? அப்போ உங்களுக்குத்தான் இந்த நல்ல செய்தி

  அதேபோல் 20 - 44 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் எடையிலிருந்து 1.3% எடை மட்டுமே குறைகிறது.  இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது காஃபியில் கஃபைன் இருப்பதைக் காட்டிலும் அதில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய ஆண்டி ஒபேசிட்டி கலவை இருப்பதைக் கண்டதாக ஐரோப்பாவின் ஏஞ்சலியா ரக்‌ஷின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

  காலை எழுந்ததும் சுறுசுறுப்பாக்க உதவும் ’ஹெர்பல் டீ’ : உங்களுடைய சாய்ஸ் எது..?

  அதன்படி 20 - 44 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு பால் கலப்படமில்லாத 2 அல்லது 3 கப் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் 3.4 % உடல் எடையைக் குறைக்கலாம் என்றும், 45 - 69 வயது கொண்ட பெண்கள் 4 கப்பிற்கு மேல் குடித்தால் 4.1 சதவீதம் உடல் எடைக் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

  எனவே காஃபி புத்துணர்ச்சி அளிக்கும், டென்ஷனிலிருந்து மீட்டு ரிலாக்ஸ் அளிக்கும் என்பதைக் காட்டிலும் உடல் எடையைக் குறைக்கிறது என்பது நல்ல விஷயம்தான்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  பார்க்க :

   

   
  Published by:Sivaranjani E
  First published: