ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தந்தைக்காக கல்லீரலை தானம் கொடுத்த 19 வயது பெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்!

தந்தைக்காக கல்லீரலை தானம் கொடுத்த 19 வயது பெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்!

கல்லீரலை தானம் செய்த மகள் தன் தந்தையுடன் நிற்கிறார்

கல்லீரலை தானம் செய்த மகள் தன் தந்தையுடன் நிற்கிறார்

பெண் பிள்ளைகளைப் வளர்ப்பது எதற்கும் உதவாது என்று சொல்வோருக்கு இந்த செய்தி சாட்டையடி..!

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கொல்கத்தாவைச் சேர்ந்த ரக்கி துத்தா என்னும் 19 வயது பெண் தன்னுடைய 65 சதவீத கல்லீரலை தன் தந்தைக்கு தானமாக வழங்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ரக்கி துத்தாவின் தந்தை பல வருடங்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டிருக்கிறார். இதைப் பொருத்துக்கொள்ள முடியாத மகள் ரக்கி தன் கல்லீரை தந்தைக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், அந்தப் பெண்ணுக்கு 19 வயதுதான் ஆகிறது என்றாலும் பயம், வலி, எதிர்காலத்தில் இதனால் ஏற்படும் சிக்கல்கள் என எதையும் பொருட்படுத்தாமல் தன் தந்தை மீதான அளவு கடந்த அன்பால் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். இதில் வலி, பயம் என்பதைத் தாண்டி அவர் தன் தந்தை மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பையே வெளிப்படுத்துகிறது.

இதை அறிந்த ஹர்ஷ்கொயன்கா என்னும் தொழிலதிபர் தனது ட்விட்டரில் ஷேர் செய்த பின்புதான் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. அதில் அவர், ‘‘19 வயது சிறுமி தன்னுடைய 65 சதவீத கல்லீரலை பாதிப்படைந்த தன் தந்தைக்கு தானமாக வழங்கியிருக்கிறார். அவள் இந்தச் செயலை பயம், வலி, எதிர்கால பிரச்னைகள் எதையும் பொருட்படுத்தாமல் செய்திருக்கிறார். தந்தை மீதான மகளின் அன்பு என்பது என்றுமே ஸ்பெஷல். பெண் பிள்ளைகளைப் வளர்ப்பது எதற்கும் உதவாது என்று சொல்வோருக்கு இந்தச் செய்தி சாட்டையடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kolkata, Organ donation