16 நிமிட தூக்கம் குறைந்தாலும் பணியிடத்தில் தூங்கி வழிவீர்கள் - ஆய்வில் தகவல்

அந்த ஆய்வில் வழக்கத்திற்கு மாறாக 16 நிமிடங்கள் குறைவாகத் தூங்கினாலோ அல்லது சரியான தூக்கம் இல்லாவிட்டாலோ மறு நாள் வேலையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

news18
Updated: April 25, 2019, 8:01 PM IST
 16 நிமிட தூக்கம் குறைந்தாலும் பணியிடத்தில் தூங்கி வழிவீர்கள் - ஆய்வில் தகவல்
பணியிடத்தில் தூக்கம்
news18
Updated: April 25, 2019, 8:01 PM IST
தெற்கு ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 16 நிமிட தூக்கத்தைத் தவிர்த்தாலும் பணியிடத்தில் வேலை செய்ய முடியாமல் போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வு ஸ்லீப் ஹெல்த் ஜர்னலில் வெளிடப்பட்டுள்ளது. ”இந்த ஆராய்ச்சி மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை முன்மொழிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தோம்” என இந்த ஆராய்ச்சியின் தலைவர் சூமி லீ கூறுகிறார். இவர் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராக இருக்கிறார்.

இவர்கள் ஐடி துறையில் வேலை பார்க்கும் 130 ஊழியர்களை வைத்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆய்வில் வழக்கத்திற்கு மாறாக 16 நிமிடங்கள் குறைவாகத் தூங்கினாலோ அல்லது சரியான தூக்கம் இல்லாவிட்டாலோ மறு நாள் வேலையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த அறிக்கை, ‘வேலையையும் வாழ்க்கையையும் சரியாக கையாள முடியாமல் மனச் சோர்வுடன் படுக்கைக்குச் செல்வதால் அவர்களுடைய தூக்கமும் நிம்மதியாக இருப்பதில்லை. மறுநாள் காலையும் சிறப்பாக அமைவதில்லை’ எனக் குறிப்பிடுகிறது.

நன்கு தூங்கி எழுந்தவர் வேலையில் சிறப்பாகச் செயலாற்றுவார். அவருடைய வேலையிலும் கவனச் சிதறல்களின்றி பணிபுரிவார் என லீ சுட்டிக் காட்டுகிறார்.
இந்த குறைவான தூக்கம் அவர்களுடைய வேலையின் அறிவாற்றலையும் மழுங்கடிக்கிறது. அந்த அனுபவம் அவர்களுக்கு மோசமான சூழலை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிடுகிறார் லீ.

அதேபோல், அந்த ஆய்வில் விடுமுறையில் குறைவான தூக்கம் தூங்கினால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படுவதில்லை’ என்பதையும் கண்டரிந்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...